Tuesday, August 28, 2007

இழந்த சொர்க்கம் : ஒரு புகைப்படக் கலைஞன் பார்வையில்

பல ஆயிரம் வார்த்தைகளால் கூட வர்ணிக்க முடியாத விடயங்களை ஒரு படம் மூலம் சொல்லி விடலாம் என்பார்கள். அது போல இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரின் வலியை இப் படத்தில் இருந்து நீங்கள் உணரலாம்.

Alex Wolf எனும் புகைப்படக் கலைஞர் இலங்கையில் தான் எடுத்த புகைப்படங்களை youtube ல் The Fallen Paradise எனும் தலைப்பில் ஏற்றியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Load ஆக கொஞ்ச நேரம் எடுக்கலாம். பொறுமை காக்க.

4 comments:

said...

நல்லாயிருக்கு
அண்ணா

இப்ப தமிழ்மணத்துக்குப்போக பயமாயிருக்கு

said...

மாயா,
நன்றி. அப் படத்தில் வரும் மக்களின் முகங்களைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.

போரின் வலி எவ்வளவு மோசமானது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

விரைவில் எம் தாயகத்தில் அமைதி தவழ வேண்டும். அனைவரின் வாழ்விலும் சுபீட்சம் ஏற்பட வேணும் என இறைவனிடம் மன்றாடுவதை விட வேறோன்றும் என்னால் செய்ய முடியவில்லையே எனும் கையாலாகத்தனத்தை நினைத்து மனம் விரத்தியடைகிறது.

/* இப்ப தமிழ்மணத்துக்குப்போக பயமாயிருக்கு */

இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது. உலகில் எல்லோரும் பண்பானவர்களாக இருப்பார்கள் என்ற மாயையில் நீங்கள் இருக்கிறீர்கள் போலும்.:-))

உலகில் பலவிதமான மனிதர்கள் உண்டு. சாலையில் நடக்கும் போது அழுக்கு இருந்தால் அதை உழக்காமல்[மிதிக்காமல்] விலகிப் போவது போல, நாம் அவர்களைக் கண்டு கொள்ளாமல் சென்றால் சரி என்பதுதான் என் நிலைப்பாடு.

said...

இலங்கையின் சகல இன மக்களின் துன்பமும் அவர் கருவியுள் அடங்கியுள்ளது.
வேதனை

said...

பார்பதற்கே வேதனையாக இருக்கின்றது.