Sunday, August 12, 2007

"சிறீலங்கா அரசு ஓர் இனவாத அரசு" - பாரதிய ஜனதாக் கட்சி [BJP]


இந்தியா சிறீலங்காவுக்கு ஒரு போதும் படைத்துறைத் தளபாடங்கைள வழங்கக்கூடாது என தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கைக்கும் போது அவர் இதனைத் கூறியுள்ளார்.

சிறீலங்கா அரசு ஓர் இனவாதத்தைக் கக்கிக் கொண்டிருக்கிற அரசாக செயற்படுகின்றது. சிறீலங்கா அரசு சிங்களவரையும் தமிழர்களையும் சமனாக மதிப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்க வழங்கப்பட்ட பொருட்களைக் கூட சிறீலங்கா அரசாங்கம் வழங்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா நடுநிலைமையோடு செயற்பாட்டு இனப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கைக்கு ராடர்களை வழங்கியுள்ளது. இந்தியா வழங்கும் படைத்துறை உதவிகள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கே பயன்படுகின்றன. ஆகவே இந்தியா இலங்கைக்கு படைத்துறை உதவிகளை வழங்கக்கூடாது எனவும் இல.கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்


ஆதாரம்: பதிவு

படம் : த ஹிந்து

6 comments:

said...

வெற்றி,

இதெல்லாம் சும்மா பம்மாத்து.
ஏன் இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது என்ன பண்ணினார்கள்? அப்போதெல்லாம் ஸ்ரீலங்கா இனவாதிகளில்லையா? 1958 இல் இருந்தே இனவாதிகள் தான் சிங்களவர் அரசு. ஈழத்தமிழர்கள் நன்றாகவே பாடம் படித்து விட்டனர்.

said...

அனானி,
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

/* இதெல்லாம் சும்மா பம்மாத்து.*/

பம்மாத்தோ கிம்மாத்தோ, அவர் சொன்ன சங்கதி உண்மைதானே?
அவர் சொல்லும் இந்த உண்மையை அவர் சார்ந்த அமைப்பின் ஆதரவாளர்களும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

said...

அன்பர் ஒருவர் [அனானியாக] ஒரு பின்னூட்டம் அனுப்பியிருந்தார்.
அப் பின்னூட்டம் பதிவுக்குத் துளியும் சம்பந்தம் இல்லை என நான் ஆணித்தரமாக நம்புவதாலும், பதிவின் நோக்கத்தைத் திசைதிருப்பி விடுமோ என அஞ்சுவதாலும் அப்பின்னூட்டத்தை நிராகரித்து விட்டேன் எனப் பணிவன்புடன் சொல்லிக் கொள்கிறேன்.

மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேணும் என்பதால் எதிர்க்கருத்தாக இருந்தாலும் பின்னூட்டங்களைப் பிரசுரிப்பவன் நான். ஆனால் பதிவுக்குச் துளியும் தொடர்பில்லாத பின்னூட்டங்களைப் பிரசுரிக்க எனக்கு உடன்பாடில்லை.

பின்னூட்டங்களின் எண்ணிக்கையல்ல எனக்கு முக்கியம். பின்னூட்டங்களில் உள்ள கருத்துக்களைத்தான்[எதிர்க்கருத்தாயினும்] நான் முக்கியமாகக் கருதுகிறேன்.

said...

இந்தியா இலங்கை மீது படையெடுத்து தமிழர்களுக்கு ஒருபகுதி நாட்டைப்பிரித்து கொடுத்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். ஆனால் அமெரிக்காவோ அல்லது சீனாவோ இந்தியாமீது படையெடுத்து ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானுக்கு பிரித்துக்கொடுக்கும். ஜம்மு காஷ்மீர் தானே அங்கே தமிழர்கள் இல்லையே என்கிறீர்களா?

ஆனால், எப்போது இந்தியாவின் ஒருபகுதியாக தமிழ்நாட்டை ஏற்றுக்கொண்டார்கள் நம்மக்கள்? எப்போதுமே பிரித்துக்கொடு என்று கேட்பதில் தமிழனை அடித்துக்கொள்ள வேறெவரும் இல்லை. தனித்தமிழ்நாடு என்று இத்தனை ஆண்டுகள் கோஷம் போட்டார்கள். இப்போது தமிழினம் துன்பப்படுகிறது என்கிறார்கள். பேசாமல் இலங்கையில் இருக்கும் LTTE மற்றும் தமிழர்கள் அனைவரையும் தமிழகத்துக்கு கொண்டுவந்து அடைக்கலம் தர நமது அரசு தயாராக இருக்கவேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கையின் விவகாரங்களில் தலையிட நமக்கு நிச்சயம் உரிமை இல்லை, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேறெந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்று கூறுவதைப்போலவே.

இரு நாடுகளுக்கிடையே நடக்கும் சில ராசாங்க ரீதியான பரிமாற்றங்கள் மொழிப்பற்றால் கேள்விக்குறியதாக்கமுடியாது. இலங்கை அரசை நமக்கு எதிரான நிலையில் வைக்காதுபோனால், அமெரிக்கா இலங்கையில் ராணுவத்திற்கான நிலை கேட்கும். அதை நாம் சந்திக்கத் தயாரா?

தமிழ் பேசும் மக்கள் எல்லாம் நம் இனம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அது அடுத்த நாட்டின் விவகாரத்தில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் கொடுக்காது.

இல.கணேசன் சும்மா உளறிக்கொட்டுகிறார். ஆட்சியில் இருந்தால் அவரது நிலைப்பாடே வேறுதான். வெத்து அரசியல்.

said...

திகிலன் எனும் அன்பர் கீழுள்ள தகவலைப் பின்னூட்டமாகத் தெரிவித்திருந்தார். தவறுதலாக அத் தகவலை நிராகரித்து விட்டேன். நல்லவேளை அத் தகவல் எனது மின்னஞ்சலில் இருந்ததால் இங்கே வெட்டி ஒட்டுகிறேன்.

திகிலன், மன்னித்துக் கொள்ளுங்கள்.



திகிலன் has left a new comment on your post
-------------------------------
கனேசண்ணே கலக்குங்க இது சூப்பர் காமடி...

said...

//தமிழ் பேசும் மக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கையின் விவகாரங்களில் தலையிட நமக்கு நிச்சயம் உரிமை இல்லை, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேறெந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்று கூறுவதைப்போலவே.//

ஈழப் பிரச்சினைக்கும் காஷ்மீர் பிரச்சினைக்கும் வேறுபாடு உள்ளது.

இலங்கையில் பெரும்பாண்மை சமூகம் சிறுபாண்மை சமூகத்தை அழிக்க முயல்கிறது. பெரும்பாண்மை மொழியினை(சிங்களம்) திணித்து, வடகிழக்கில் சிங்களவர்களை குடியமர்த்தி சிறுபாண்மை (தமிழ்) இனத்தை அழிக்கிறது.

காஷ்மீரிலோ இன்னொரு நாடு நமது நாட்டின் பகுதியைக் (POK Kashmir including Northern areas and Baltistan) கைப்பற்றி வைத்துள்ளது. அங்குள்ள மக்களிடையே பிரிவினையை தூண்டுகிறது. முக்கியமாக, சிறுபாண்மை சமூகம்(இஸ்லாமியர்) பெரும்பாண்மை சமூகத்தை (இந்து பண்டிட்டுகள்) அவர்களின் இடத்தை விட்டு விரட்டியடித்துள்ளது.

இரு சூழலின் வேறுபாடு புரியுமென நினைக்கிறேன்.