Friday, August 03, 2007

அரோகரா!... முருக பத்தர்களுக்கு வந்த சோதனை! [புகைப்படங்கள்]

கதிர்காமக் கந்தனின் வருடாந்த திருவிழாவுக்கு இலங்கையின் தமிழ் பகுதிகளான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், வவுனியா [வடக்கு கிழக்கு மாகாணங்கள்] போன்ற பகுதிகளில் இருந்து முருக பத்தர்கள் கால் நடையாக பாத யாத்திரையாகச் சென்று அங்கே ஓடுகின்ற புண்ணிய ஆறான மாணிக்க கங்கையில் நீராடி முருகனை வணங்குவது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.

இந்த வருடமும் தமிழ்ப் பகுதிகளில் இருந்து முருக பத்தர்கள் கதிர்காமம் சென்றனர். அங்கே இத் தமிழ்ப் பத்தர்கள் மாணிக்க கங்கையில் நீராடும் போது சிங்கள பொலிஸ் அதிகாரியால் தாக்கப்படும் காட்சியையே கீழே உள்ள படங்களில் காண்கிறீர்கள்.

பத்தர்களைக் கொடுமை செய்த அசுரர்களை அழிக்க வந்த வேலவனே, உன் பத்தர்கள் சிங்கள இனவெறியர்களால் தாக்கப்படும் போது பார்த்துக் கொண்டிருப்பது என்ன நியாயம்?





இப் படங்கள் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரர் [Daily Mirror, Friday, August 03, 2007 ] ல் இருந்து எடுத்தவை.

29 comments:

Anonymous said...

வெற்றி, இதுதான் முதல் முறையாய் உங்கள் தளம் வருகிறேன்.

குமரன் (Kumaran) said...

வெற்றி, திருவிழாக்கூட்டத்தைக் காவலர்கள் கட்டுப்படுத்த சில நேரம் இப்படி அடிப்பதுண்டு. அது போன்ற நிகழ்வா இது? அன்றி தமிழர் மேல் வெறி கொண்டு நடத்தும் தாக்குதலா? நீங்கள் தாக்குதல் என்று எழுதியிருக்கிறீர்கள்; படங்களைப் பார்த்தால் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியைப் போல் தோன்றுகிறது. அதனால் கேட்டேன்.

Anonymous said...

வெற்றி,

போன வாரம் ஆறுமுகம் தொண்டமான், மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாயா ஆகியோர் கூடி கதிர்காம பக்தர்களுக்கு அன்னதானம் அளித்த படங்களையும் போடவும். அப்போ தான் எங்கட ஆக்களுக்கு இன்னும் உறைக்கும்.
மேல்மட்டத்தில் எனன சட்டமும் இயற்றலாம் ஆனால் அடிமட்ட சிங்களவன் நினைத்தால் ஒன்றும் நடக்காது என்ற நிலை எங்கட 'மாற்றுக்கருத்து' கோஷ்டிக்கு ஏன் தான் ஏறமாட்டுது என்று தான் விளங்கவில்லை.
எட்டாம் வகுப்பில் எனது ஆங்கில ஆசிரியர் ( சிறீமா ஆதரவாளர்) கேட்டார் இதே கேள்வி. கதிகாமக்கந்தன் கனவில் வந்து அழைத்து சிங்களவன் அடிக்க ஏன் விடுகிறார் என்று. முன்னரெல்லாம் கந்தன் கனவில் வந்து அழைத்தால் மட்டுமே கதிகாம பாத யாத்திரை செல்லும் வழக்கம் பொதுவாக இருந்தது.
அக்கேள்வி இன்றும் எனது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. அதுமட்டுமல்ல எனது கடவுள் நம்பிக்கையை ஆணிவேரில் உலுக்கிய சம்பவங்களில் ஒன்று அது.

வெற்றி said...

குமரன்,

/* அது போன்ற நிகழ்வா இது? அன்றி தமிழர் மேல் வெறி கொண்டு நடத்தும் தாக்குதலா? நீங்கள் தாக்குதல் என்று எழுதியிருக்கிறீர்கள்;*/

நல்ல கேள்வி. இது இனவெறித் தாக்குதல் என்றுதான் டெய்லி மிரர் பத்திரிகை சொல்கிறது. நான்தான் எழுதும் போது தெளிவாக எழுதவில்லை. மன்னிக்கவும்.


டெய்லி மிரர் இப்படிச் சொல்கிறது:

A large group of people were shocked when a police constable assaulted people with a wooden pole when they went into the Menik Ganga to drink water and fill their vessels immediately after the water cutting ceremony on Monday.


About 10 people were subjected to this assault and some who were hit fell into the water.


A majority of those who were beaten are devotees who came from North East through Yala forest in a Pada Yatra.

இங்கே assaulted என்ற சொல் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடந்த தடியடி அல்ல என்பதைக் காட்டுகிறது.

அத்துடன் இந்த இனவெறித் தாக்குதல்களை நேரில் பார்த்த புத்த பிக்குவான வண.கப்புகம சரணதிச நாயக்க தேரோ டெய்லி மிரருக்கு இப்படிச் சொல்லியிருக்கிறார்:

Ven. Kapugama Saranatissa Nayake Thero, Adhikarana Sanghanayaka of Ruhuna Magampattuwa said that he was a witness to the assault and all the good work done by the police during the season was spoilt by the act of this person.

அத்துடன் இது முதற்தடவை அல்ல. புத்த அடிப்படைவாதிகள், மற்றும் சிங்கள இனவாதிகளின் தாக்குதல்களுக்கு கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் பல தடவைகள் இப்படியான இனவெறித் தாக்குதல்களை எதிர் கொண்டிருக்கிறார்கள்.

சிங்கள/புத்த அடிப்படைவாதிகளைப் பொறுத்தவரையில் இலங்கை புத்த சிங்கள நாடு. இங்கே வேறு யாருக்கும் இடமில்லை. புத்தமதத்தை அடுத்த 5000 வருடங்களுக்கு பாதுகாக்கும் பொறுப்பைச் சிங்களவர்களிடமே புத்தர் பெருமான் ஒப்படைத்துள்ளார் எனும் புனைகதையில் [myth] மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

குமரன் (Kumaran) said...

விளக்கத்திற்கு நன்றி வெற்றி. கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் போர்வையில் நடந்த இனவெறித் தாக்குதல் போல் தெரிகிறது. புத்த பிக்குவின் வார்த்தைகள் அது தேவையற்ற தாக்குதல் என்பதையும் தெளிவுறுத்துகிறது.

இங்கே அமெரிக்காவில் கு-க்ளக்-கான் என்று ஒரு இயக்கம் இருக்கிறது - அமெரிக்கா வெள்ளையருக்கும் கிறித்தவருக்கும் உரிய நாடு - மற்றவர்கள் இங்கே வாழக்கூடாது என்ற கொள்கை உடையவர்கள். அவர்கள் முகமூடி அணிந்து வந்து மற்ற இனத்தவரையும் மதத்தவரையும் தாக்கிய காலங்களும் இருந்ததாகச் சொல்வார்கள். இன்றும் இந்த இயக்கம் தலைமறைவு இயக்கமாக இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கதையாடல்கள் மனித மனத்தை எந்த அளவிற்கு அடிமைப்படுத்தும் என்பதற்கு பல எடுத்துகாட்டுகள் இருக்கின்றன. ஆனால் அதனால் பாதிப்பு நமக்கு என்னும் போது மிகவும் வலிக்கிறது. :-(

G.Ragavan said...

வெற்றி, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இறை நம்பிக்கையை விஷயத்திலும் விடையில்லாத கேள்விகள் உண்டு. அதிலொன்று இது.

செவ்வியான் கேடும் அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் நினைக்கப்படும்....முருகனை வேண்டிக் கொள்வதைத் தவிர எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. :(

Anonymous said...

குமரன்,

"கூ-க்ளக்ஸ்-கிளான்" (Ku Klux Klan www.kkk.com) ஒரு தலைமறைவு இயக்கமல்ல. மிகவும் வெளிப்படையாகவே இயங்குகிறார்கள்.
ஆனால் அவர்களின் ஆதரவுத்தளம் குறுகிச்செல்கிறது. காரணம் வெளிநாட்டவர், கறுப்புஇன மக்களின் அரசியல் பிரவேசம் மற்றும் கறுப்பின மக்களின் போராட்டமும் அமெரிக்க சட்டத்திருத்தங்களும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் அமெரிக்கா சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக சட்டத்திருத்தம் செய்வார்கள் ஆனால் ஸ்ரீலங்காவில் பெரும்பான்ம்மையினரை காக்க சட்டம் திருத்துவார்கள்! கேட்டால ஜனநாயகம் என்பார்கள். அவர்களுடன் சேர்ந்து எமது பக்கத்து ஜனநாயக அண்ணன் வேறு உபதேசம் செய்வார்!

ராகவன்,

முருகனை வேண்டி எமது மக்கள் களைப்புற்று போய்விட்டார்கள். முருகனை கைவிட்டால் தான் உண்டு.
கதிர்காமம் போவதை தவிருங்கள். ஒன்றும் இழப்பில்லை.
தமிழனுக்கு மரணத்தை விடவுமா மோசமான நிலை வரும். குண்டுபோடுபவன் போடத்தான் போகிறான், அடிக்கப்போகிறவன் அடிக்கத்தான் போகிறான். இதில் குண்டடி வாங்கி சிங்களவனின் காலிலும் தடியடி வாங்கி முருகனின் காலிலும் ஏன் விழவேண்டும்.
கடவுள் காலில் விழாதவன் என்ற இறுமாப்புடனாவது செத்துத்தொலைக்கலாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வெற்றி

அதிகாரம் கையில் இருப்பதால், துவேஷத்தில் இன்னும் வெறி ஏறிக் கொள்கிறதே!
படத்தில் அந்தக் காவலரின் கண்கள் சட்டத்தைக் காப்பாற்ற வந்தாற் போல தெரியவில்லை!

அறியாததால் கேட்கிறேன்...தவறாக எண்ண வேண்டாம்...தமிழ் இனப் போலீசார்கள் இலங்கையில் கிடையாதா?

நம்மூரில் பெண்கள் கூடும் பகுதிகளில் பெண் போலீசார் போடுவது போல, இனப் பிரச்சனை தீரும் வரை இது போன்ற வழிமுறைகளைக் கையாளலாமே? உள் நாட்டு வெறுப்பாவது சற்றுக் குறையும்!

குமரன் (Kumaran) said...

//அவர்களுடன் சேர்ந்து எமது பக்கத்து ஜனநாயக அண்ணன் வேறு உபதேசம் செய்வார்!
//

யாரைச் சொல்கிறீர்கள் என்று தெரிகிறது. உண்மை தான். ஜனநாயகத்திற்கும் பெரும்பான்மையினரின் எதேச்சாதிகாரத்திற்கும் நூலிழை தான் வேறுபாடு இருக்கிறது. பெரும்பான்மை மக்களில் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்கும் போது அது உண்மையில் ஜனநாயகம்.

சிவபாலன் said...

வெற்றி

வருந்த தக்க செயல்.. :(

பி.கு. கடவுள் எல்லாம் வரமாட்டார் வெற்றி. அவங்க அவங்களே ஏதாவது செய்து கொண்டால்தான் உண்டு..

இவன் said...

//முருகனை கைவிட்டால் தான் உண்டு.//
இது சரி

//கதிர்காமம் போவதை தவிருங்கள். ஒன்றும் இழப்பில்லை.//

இது என்ன? நீ தமிழன் என்று சொல்லி அடித்தால் அங்கேல்லாம் போகமாட்டீரா அனானி?

அப்ப தண்ணிகேட்டான் சொல்லி தமிழனை அடிச்ச கர்னாடகத்துக்கும் மகாராஸ்டிரம் மராட்டியருக்கேன்னு சொல்லி தமிழனை அடிச்சதுக்காக மகாராஸ்டிரத்துக்கும் போனதே இல்லையா?

வெற்றி said...

ரவிசங்கர்,

/* அதிகாரம் கையில் இருப்பதால், துவேஷத்தில் இன்னும் வெறி ஏறிக் கொள்கிறதே! */

அண்ணல் மகாத்மா காந்தி அவர்கள், 'ஒருவனின் உண்மையான குணத்தை[சுயரூபத்தை] அறிய வேணுமாயின் அவன் கையில் சகல அதிகாரங்களையும் கொடுக்க வேணும். அந்த அதிகாரங்கள் வந்ததும் அவன் எப்படிச் செயற்படுகிறான் என்பதை வைத்து அவனை எடை போடலாம்' என்று சொல்லியிருந்தார் என எங்கேயே வாசித்த ஞாபகம். நீங்கள் மேற் சொன்ன வரிகளைப் படித்ததும் அண்ணல் காந்தி அவர்களின் அவ் வரிகள்தான் நினைவுக்கு வந்தது.

/* அறியாததால் கேட்கிறேன்...தவறாக எண்ண வேண்டாம்...தமிழ் இனப் போலீசார்கள் இலங்கையில் கிடையாதா? */

ரவி, இதில் என்ன தவறாக நினைப்பதற்கு இருக்கிறது. தாராளமாகக் கேளுங்கள்.

இலங்கை இராணுவத்தில் தமிழர்கள் இல்லை. 1962ல் இலங்கை அரசுக்கு எதிராக இராணுவப் புரட்சி முயற்சி ஒன்று தோல்வியில் முடிந்தது. அம் முயற்சியில் பங்குபற்றிய இராணுவ உயரதிகாரிகள் கிறிஸ்தவ சிங்களவர்கள். சில தமிழர்கள். அதிலிருந்து இலங்கை இராணுவத்திற்கு பெளத்த சிங்களவர்களை மட்டும்தான் சேர்த்துக் கொள்வது எனும் நடைமுறையை இலங்கை அரசு கொண்டு வந்தது. பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடங்கியதும் ஆள் பற்றாக் குறையால் கிறிஸ்தவ சிங்களவர்களும் படைகளில் இணையலாம் என நடைமுறை மாற்றியமைக்கப்பட்டது. ஆக இலங்கை இராணுவம் 99.9% சிங்களவர்களால் ஆனதே.

பொலிசில் எண்ணிக்கையில் குறைவாக தமிழர்கள் இருந்தார்கள். புலிகளுடன் சண்டை துவங்கியதன் பின் தமிழர்களை பொலிசில் இணைத்துக் கொள்வது மிகவும் குறைக்கப்பட்டது. எனக்குச் சரியான தரவுகள் தெரியாது. இருப்பினும் பொலிசில் தமிழர்களின் எண்ணிக்கை 1% விடக் குறைவாகவே இருக்கும் என நான் நம்புகிறேன்.


/* நம்மூரில் பெண்கள் கூடும் பகுதிகளில் பெண் போலீசார் போடுவது போல, இனப் பிரச்சனை தீரும் வரை இது போன்ற வழிமுறைகளைக் கையாளலாமே? உள் நாட்டு வெறுப்பாவது சற்றுக் குறையும் */

ஐயோ ரவி, இதைத்தானே பலரும் மாறி மாறி வரும் சிங்கள அரசுகளுக்குச் சொல்கிறர்கள். இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கொலி போலத்தான்.

100% தமிழ்ப் பகுதிகளான யாழ்ப்பாணம்
போன்ற இடங்களிலே கூட சிங்களம் மட்டுமே பேசக் கூடிய பொலிசார்தான் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். அதைவிடக் கொடுமை இங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பொலிசாருக்கு சிங்கள தவிர்ந்த மொழிகள் தெரியாது. ஆங்கிலம் துப்பரவாக வராது. ஆங்கிலம் தெரிந்தாலும் சிங்களத்தில்தான் கதை என்பார்கள்.

ஒரு சாதாரண யாழ்ப்பாணவாசி எப்படி இவர்களுடன் தொடர்பு கொள்வது? தமது சொந்த மண்ணில் வேறு மொழிமூலம்தான் காவல்துறையினருடன் தொடர்பு கொள்ள வேணும் என்றால், அம் மக்களுக்கு எப்படிச் சொந்த நாட்டின் மீது பற்று வரும்?

நான் அடிக்கடி என் சிங்கள நண்பர்களுடன் அளவளாவும் போது சொல்லும் விடயம் என்னவெனின், விடுதலைப் புலிகளைச் சிங்கள அரசுகள் வெல்லவேணும் என்றால் முதலில் தமிழ்மக்களின் மனங்களை வெல்ல வேணும். தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை முன் வைக்க வேணும். ஆனால் சிங்கள அரசுதான் தமிழ் மக்களைப் புலிகளின் பக்கம் தள்ளுகிறது. சிங்கள அரசுகள் இனப்பிரசினை விடயத்தில் தமது அணுகுமுறையை மாற்ற வேணும்.

- யெஸ்.பாலபாரதி said...

:(

SurveySan said...

அடக் கொடுமையே. மற்றவர்கள் வேடிக்கைப் பார்ப்பதும் கொடுமை.
எதிர் குரல் கொடுக்கலையா?

எங்க ஊரப் போல்தானா அங்கயும்? யாருக்காவது ஒண்ணுன்னா, நல்லா வேடிக்க பாப்போம், இல்லன்னா, இந்தப்பக்கமா ஓடி ஒளிஞ்சுடுவோம் நாங்களும்.

மணியன் said...

வெற்றி, இந்த பதிவின் மூலம் நடைமுறையில் உள்ள இனத் துவேசம் நங்கு அறியமுடிகிறது.

நாட்டு இராணுவத்திலும் பொலிஸிலும் தமிழர்கள் இல்லை என்பது மனித உரிமை நியதிகளுக்கு அப்பாற்பட்டது. அரசியல் தளத்தில் மட்டுமன்றி அடிமட்ட அளவிலேயே இந்த வெறுப்பு இருக்குமானால் சேர்ந்து வாழ்வது எங்ஙனம் ? உலகநாடுகள், இந்தியாவையும் சேர்த்து, ஏன் இதனை புரிந்து கொள்ள மறுக்கின்றன ?

வேலனின் வேல் பகையை சுட்டெரிக்க வேண்டும்; வெற்றிவேல்,வீரவேல் என்பது நிசமாக வேண்டும். கந்தா, கருணை காட்டு...

மாசிலா said...

மிகவும் மூர்க்கத்தனமான நிகழ்வுக்காட்சிகள். கண்டிக்கப்பட வேண்டியவை.
எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு மிக்க நன்றி.

சிங்களவர்கள் தங்களுக்கு தாங்களே சவக்குழி தோண்டிக்கொண்டு வருவதை எப்போதுதான் நிறுத்துவார்களோ?

மாயா said...

எப்பதான் நிம்மதியாக கடவுளைக்கும்பிடப்போறமோ தெரியவில்லை . . . .

Anonymous said...

//பத்தர்களைக் கொடுமை செய்த அசுரர்களை அழிக்க வந்த வேலவனே, உன் பத்தர்கள் சிங்கள இனவெறியர்களால் தாக்கப்படும் போது பார்த்துக் கொண்டிருப்பது என்ன நியாயம்? //

வேலவன் இருந்தாத் தானே வாறதுக்கு?
சிங்களவனின்ட இனவாதாம் தெரிந்த விசயம் தானே? இல்லாத வேலவனில நம்பிக்கை வச்சா இப்படித் தான் ஆகும்.

நாங்கள் ஆயுதம் கையில எடுத்து சங்காரம் செய்ய வேண்டிய உண்மையான அசுரன் வடக்குக் கிழக்கில இருக்கேக்க, சமய வெறியில ,சிங்களவினிட்டப் போற
மடையருக்கு இப்படித் தான் அடி விழ வேணும் கண்டியளோ.அப்பத் தான் சமயம் எங்கிற பித்தம் தெளின்ச்சு ஞானம் பிறக்கும்.

அப்ப நான் வரட்டே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:( பாவம்...

Anonymous said...

இவன்,

/*இது என்ன? நீ தமிழன் என்று சொல்லி அடித்தால் அங்கேல்லாம் போகமாட்டீரா அனானி?*/

கதிர்காமம் போகமாட்டேன். ஏனென்றால் அடிக்கும் போது 'கடவுள்' பார்த்துக்கொண்டிருந்தார்!!!!

/*அப்ப தண்ணிகேட்டான் சொல்லி தமிழனை அடிச்ச கர்னாடகத்துக்கும் மகாராஸ்டிரம் மராட்டியருக்கேன்னு சொல்லி தமிழனை அடிச்சதுக்காக மகாராஸ்டிரத்துக்கும் போனதே இல்லையா?*/


என்ன மகாராஷ்ரம், கர்நாடகம் என்று கதைக்கிறீர்கள். பிறந்த ஊர் யாழ்பானம் போகமுடியாமல் இருக்கிறேன் 25 வருடமாக! கதிர்காமம், மகாராஷ்ரம் எல்லாம் இப்போதைக்கு எமக்குத் தேவையில்லை!

நவ இந்தியாவின் பிதாமகன் ஜவஹர்லல் நேருவிடம் இந்திய வம்சாவழி (மலையக தமிழர்)தமிழர் படும் துன்பங்கள் பற்றி முறையிட்டபோது அவர் சொன்னதெல்லாம் "எமது மக்களை சரியாக நடத்தாத ஸ்ரீலங்காவுக்கு போவதை தவிர்க்கப் போகிறேன்" என்று தான்! நவைந்தியாவின் தந்தையே போராட முனையவில்லை கைகட்டி (வேலுடன்) பார்த்திருக்கும் கடம்பனுக்கு முன் நான் ஈழத்தமிழன் எம்மாத்திரம்?

வெற்றி said...

ஜான் போஸ்கோ,

உங்களின் வரவு நல்வரவாகுக!!!
மிக்க நன்றி.

குமரன்,
மிக்க நன்றி.

அனானி,
உங்கள் கருத்துக்களுக்கும் பள்ளிக்கால சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி.

இராகவன்,
வாங்கோ.
"அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்" என்று எனதூரில் ஒரு முதுமொழி உண்டு. நீங்கள் சொன்னது போல் நம்மால் வேறேன்ன செய்ய முடியும்?

ரவிசங்கர்,
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

சிவபாலன்,
மிக்க நன்றி.

/* பி.கு. கடவுள் எல்லாம் வரமாட்டார் வெற்றி. அவங்க அவங்களே ஏதாவது செய்து கொண்டால்தான் உண்டு.. */

சில இலங்கைத் தமிழர்கள் நீங்கள் சொல்வது போலத்தான் சொல்கிறர்கள்.

VSK said...

இதை எங்கள் பார்வைக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி, திரு.வெற்றி.

படங்களைப் பார்த்ததும் என் மனதில் பட்டவை.

1. தண்ணிர் வேகமாக வருகிறது.
2.ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வரக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்திருக்கிறது.
3. துரதிர்ஷ்டவசமாக, இந்தப்பொறுப்பில் இருந்தஒரு சிங்கள போலீஸ்காரர் சற்று எல்லை மீறியே நடந்திருக்கிறார்.
4. ஆனால், கூட்டத்தாரிடையே பதட்டம் ஏற்பட்டது போலத் தோன்றவில்லை.
5. தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய, அதேசமயம், தவிர்க்கப்பட முடியாத நிகழ்வு

இதே போன்ற நிகழ்வுகளை, சபரிமலையிலும், பழநியிலும் நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

இதற்கும், கதிர்காம கந்தனுக்கும் தொடர்புபடுத்தி பேசவேண்டியதிலையோ எனவும் பட்டது!

பதிய வேண்டிய பதிவு!
நன்றி!

வெற்றி said...

VSK ஐயா,
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

/* 1. தண்ணிர் வேகமாக வருகிறது.*/

பத்தர்கள் ஆற்றின் கரையோரமாகவே நின்று நீராடுகின்றனர். தண்ணீர் அவ் விடத்தில் வேகம் மிக குறைவு.


/* 2.ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வரக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்திருக்கிறது. */

மாணிக்க கங்கையில் அப்படியான கட்டுப்பாடுகள் ஏதும் இருப்பதாக நான் அறியவில்லை.

/* 5. தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய, அதேசமயம், தவிர்க்கப்பட முடியாத நிகழ்வு */

இது நிச்சயமாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய நிகழ்வு. இலங்கை பொலிஸ் திணைக்களமே இன்று இது குறித்து மன்னிப்புக் கோரியிருக்கிறது. இந்த அதிகாரி இனத் துவேசத்துடன் வரம்பு மீறி நடந்துள்ளார் என்பதை அவர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

/* இதே போன்ற நிகழ்வுகளை, சபரிமலையிலும், பழநியிலும் நான் பலமுறை பார்த்திருக்கிறேன். */

சபரிமலை, பழநி போன்ற இடங்களில்
சன நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் இப்படி நடந்து கொள்வார்கள் என நினக்கிறேன்.
இங்கு நடந்தது சன நெரிசலைக் கட்டுப்படுத்த நடந்த தாக்குதல் இல்லை, இது இனவெறித் தாக்குதல் என்பதை இலங்கை பொலிஸ் திணைக்களம் ஒத்துக் கொண்டுள்ளது.

டெய்லி மிரர் பத்திரிகையில் வந்த செய்தி கீழே:

Police say sorry to Kataragama pilgrims

The police department yesterday apologized to devotees who were assaulted by a police officer while they were engaged in a ritual in the Menikganga on Thursday.


It said the assault was a shocking and highly undisciplined act.

அற்புதன் said...

//3. துரதிர்ஷ்டவசமாக, இந்தப்பொறுப்பில் இருந்தஒரு சிங்கள போலீஸ்காரர் சற்று எல்லை மீறியே நடந்திருக்கிறார்.//


விஎஸ்கேயின் பின்னூட்டத்தில் இருக்கும் விளக்கமின்மையை தெளிவாக்க ,கதிர்காமக் கந்தனின் பின்னால் இருக்கும் அரசியலை விளக்கச் சில தகவல்கள்.

தமிழர்களால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த தொன்மையான கதிர்மாகக் கந்தன் ஆலயம் இன்று சிங்கள மயமாக்கப்பட்டுள்ளது.சிங்களவர்களின் பவுத்தமத்தில் சிறு தெய்வ வழிபாட்டின் ஒரு அங்கமாக 'கதிரகம தெய்யோ ' இருக்கிறார்.ஆலய நிர்வாகம் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு ,சிங்கள மயமாக்கப்பட்ட கப்புறாலைகளும், கதிரகம தியவதன நிலமேயிடமும் (கதிர்காம பவுத்த மதப் பீடத்தின் போசகர்)திட்டமிட்டு அபகரிக்கப்பட்டது.இதன் அடிப்படை நோக்கம் இலங்கையில் தமிழர்களின் கோவில்கள் இருக்கக் கூடாது எங்கிற இனவாத நோக்கமே.இது உங்கள் கோவில் அல்ல, இது உங்கள் கடவுள் அல்ல இங்கு நீங்கள் வழிபட வராதீர்கள் என்பதன் ஒரு வெளிப்பாடே இந்த இனவெறித் தாக்குதல்.இன்று நடந்துள்ள தாக்குதலை சிறிலங்கா பொலிஸ் துறை ஒரு தனி நபரின் இனவெறித் தாக்குதலாகக் காட்ட விழைந்தது ,அது புகைப்படமாக வெளிவந்ததால் தான்.புகைப் படமெடுக்கப்படாத இவ்வாறான பல தாக்குதல்கள் இங்கு நடந்துள்ளன, நடந்து வருகின்றன.இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு விடயம்.
சிங்களப்பேரினவாதம் அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை தொழிற்படுவது.அது சிங்கள அரசுத் துறை முதல் ஆண்டவர்கள் வரை பரந்து, விரிந்தது.இவற்றைப் புரியாத, புரிந்தும் நடிக்கும் நடு நிலையாளர்களைப் பார்த்தால் நமக்குச் சிரிப்புத் தான் வருகிறது.

Anonymous said...

VSK அண்ணை,

/இதற்கும், கதிர்காம கந்தனுக்கும் தொடர்புபடுத்தி பேசவேண்டியதிலையோ எனவும் பட்டது!*/
அப்ப கந்தனை எதோட தொடர்பு படுத்தலாம்? ஆமிக்காரன் சுடுவதுடனா? நேவிக்காரன் வெட்டுவதுடனா (குமுதினி படகு) எயர்ஃபோஸ் காரன் குண்டு போடுவதுடனா?
கடவுளுக்கு வக்காலத்து வாங்க என்றே ஒருகூட்டம்!!!!!
*

வெற்றி said...

இவன்,

உங்களின் கருத்துடன் எனக்கும் உடன்பாடு உண்டு.

பாலபாரதி,

மிக்க நன்றி.

சர்வேசன்,

/* அடக் கொடுமையே. மற்றவர்கள் வேடிக்கைப் பார்ப்பதும் கொடுமை.
எதிர் குரல் கொடுக்கலையா? */

அங்கே கூடி நிற்கும் பத்தர்கள் தமிழர்கள். அவர்கள் அப் பொலிஸ் அதிகாரிக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தால், அவர்களை விடுதலைப் புலிகள் என்று சொல்லிக் கொன்றிருப்பார்கள். அல்லது வதை முகாம்களில் அடைத்திருப்பார்கள்.
இல்ங்கையில் தமிழர்கள் சாப்பிட மட்டும்தான் வாய்திறக்கலாம் என்பது போலத்தான் சிங்கள அரசுகள் செயற்படுகின்றன.


மணியன் ஐயா,

/* வேலனின் வேல் பகையை சுட்டெரிக்க வேண்டும்; வெற்றிவேல்,வீரவேல் என்பது நிசமாக வேண்டும். கந்தா, கருணை காட்டு... */

இதுதான் எனது பிரார்த்தனையும்.

மாசிலா,

/* சிங்களவர்கள் தங்களுக்கு தாங்களே சவக்குழி தோண்டிக்கொண்டு வருவதை எப்போதுதான் நிறுத்துவார்களோ? */

சரியாகச் சொன்னீர்கள்.

மாயா,

/* எப்பதான் நிம்மதியாக கடவுளைக்கும்பிடப்போறமோ தெரியவில்லை . . . . */

உங்களின் ஏக்கத்தையும் வலியையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் எனக்கும் இதே ஏக்கம்தான்.


ஒரிஜினல் முருகேசர்,

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

முத்துலெட்சுமி,

மிக்க நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
இது கட்டாயம் இடவேண்டிய பதிவு.
நாம் அறியவேண்டிய விடயம்.
கூட்டம் கட்டுப்படுத்த இப்படி ஒரு மனிதனை அடிக்க வேண்டுமென்றில்லை. பக்கத்தில் நிற்பவரின் கை இரண்டையும் அவர் முகத்தின் பீதியையும் பார்க்கவும்.
இந்தப் பொலிஸ் மதம் பிடித்து நிற்கிறார். என்பது தெளிவாகத் தெரிகிறது.நிச்சயம் ஒரு சிங்களவரை இவர் இப்படித் தாக்க மாட்டார். நிராயுத பாணியான இந்த
பக்தர்களை அவர் தாக்குகிறார்.
கதிர்காமக் கந்தனை தமிழருக்கு உரிமையில்லாது ஆக்கும் முயற்சியின் வடிவமே!!இது.
இந்தப் பொலிஸ் இதை யாழ்பாணத்தில் செய்ய சற்று யோசிப்பார். ஆனால் சிங்களப் பகுதியில் எங்குமே இனவெறி என்பது
இரத்தத்தில் கலந்துவிட்டதால் இலகுவாக அரங்கேறுகிறது.
தமிழ் நாட்டு நண்பர்கள் புரிவதானால்
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போல் எனக் கொள்ளலாம்.அங்கே பொலிசாரும் தமிழருக்குப் பாதுகாப்புக் கொடுக்க அஞ்சுகிறார்கள்.
இலங்கைப் பொலிசில் தமிழர் இருக்கிறார்களோ தெரியவில்லை.இருப்பவர்களையும் நீதி நிலைநாட்ட விடமாட்டார்கள். அப்படி முயன்றால், ''துப்பாக்கி தற்செயலாக வெடித்து மரணம்'' என்ற செய்தியுடன் அவர் உடல் வரும்..இதுவே உண்மை
இதனால் பலர் வேலையை விட்டே ஓடி விட்டார்கள். சிலர் வாயிருந்தும் மௌனியாக உள்ளார்கள்.
அத்துடன் பொலிசில் தமிழர்கள் இருந்தால் புலிகளுக்கு உதவலாம், எனும் எண்ணத்தை மனதில் வைத்து தமிழர்களைப் பொலிசில் சேர்ப்பதையே உத்தியோக பூர்வமற்ற முறையில் நிறுத்திப் பலவருடங்கள்.
மேலும் கடவுள் இத்தனை வருடமாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். ஏன் 79 கலவரத்தில் திருகோணமலை என நினைக்கிறேன்,
பிள்ளையார் சிலையைக் கடலின் போட்டுவிட்டு, ''கணதெய்யோ நாண கீயா''(பிள்ளையார் குளிக்கப் போயிட்டார்) என எழுதி வைத்தவர்கள்.
எனவே கடவுள் இலங்கைத் தமிழனைக் காப்பாற்றுவான், எனக் கடவுள் நம்பிக்கையுள்ள நானும் நம்ப மாட்டேன்.
தமிழ் நீச மொழி எனச் சொல்ல இந்தக் கடவுள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார். தில்லை நடராசனுக்கு தமிழில் பாட அனுமதிக்காததையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்.
அதனால் இனியும் இந்த இடங்களுக்குச் செல்வதும் அவர்கள் பொருளாதாரத்துக்கு வளம் சேர்ப்பதும் புத்திசாலித்தனம் இல்லை.
இந்த யாத்திரை தவிர்க்கப்பட வேண்டியது.
இனிமேலும் உறவுகள் விரிவடையும்,சேர்ந்து வாழலாமென்பதில் நம்பிக்கையில்லை.
அதனால் அத்தியாவசிய தேவை அற்ற சிங்களப்பகுதி போக்குவரத்து இயன்றவரை குறைப்பதுடன், இப்படியான இலகுவாகச் சட்டத்தைச் சாட்டோடு, சாட்டாகக் கையில் எடுக்கும் இடங்களைத் தவிர்ப்பதே இப்போதைக்கு நன்று.
இந்தப் பொலிஸ்காரருக்குப் பதவி உயர்வுக்குச் சந்தர்ப்பம் உண்டு.
அடுத்த தேர்தலில் நின்று வென்றால் கூட ஆச்சரியம் இல்லை.

Anonymous said...

ஐயா VSK !

1.உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், சபரிமலையிலும் பழநியிலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் காவல்துறை, இந்த அதிகாரி கையில் வைத்திருக்கும் பொல்லு போன்ற தடியை வைத்துத் தாக்குவார்களா? (நான் பார்த்தளவில் மெல்லிய நீண்ட குச்சித்தடிகளால்தான் அவர்கள் கட்டுபடுத்துவார்கள்).

2. அந்த அதிகாரியின் முகத்தில் தெரியும் குரூரமும், ஏனையவர்களின் பயமும் உங்களுக்குத் தெரியவில்லையா?

3. அவர் அடிக்கும் போது அந்த மனிதர் சற்றுக்குனிந்திருந்தால், அவரின் தலையில் அந்ந அடி பட்டிருக்கம் அப்படியாயின் அதன் விளைவு எப்படியாக இருந்திருக்கும் என வைத்தியரானஉங்களால் ஊகிக்க முடியாதா?

4. ராஜீவ் காந்தியை சிறிலங்காக் கடற்படைவீரன் தாக்கியபோது கூட, மற்றையோர் சலனமற்றுத்தான் இருந்தார்கள். இன்று அவன் மாவீரன். யோகன் ஐயா சொல்வதுபோல் வெகுவிரைவில் இந்த அதிகாரியும் தேர்தலில் நிற்கலாம்..

இது எல்லாம் உண்மையில் உங்களுப்புரியவேயில்லையா..? அப்படியானல் ஐயோ பாவம்.. நீங்கள்?

வெற்றி said...

VSK ஐயா,

தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

அற்புதன்,

கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

/* இவற்றைப் புரியாத, புரிந்தும் நடிக்கும் நடு நிலையாளர்களைப் பார்த்தால் நமக்குச் சிரிப்புத் தான் வருகிறது. */

பல தமிழக அன்பர்களுக்கு இலங்கையின் உண்மை நிலை தெரியாது. காரணம், அவர்களில் சிலர் இலங்கை இனப் பிரச்சனை பற்றிய தகவல்களை தொடர்ந்து பின்பற்றி[படித்து] வருவதில்லை என நினைக்கிறேன். அடுத்தது சில தமிழக/இந்திய செய்தி ஊடகங்கள் இலங்கைச் செய்திகளைத் திரித்தும், மறைத்தும் செய்திகள் வெளியிடுவதும் ஒரு காரணம்.

ஆக, நாம்தான் அவர்கள் சொல்லும் [தவறான] கருத்துக்களை, அல்லது தெரியாமல் அறிந்து கொள்ள வேணும் எனும் நோக்கில் கேக்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக உணர்ச்சிவசப்படாமல், அவர்களை ஏளனம் செய்யாமல் ,அவர்கள் மீது ஆத்திரம் கொள்ளாமல், உண்மையான நிலைமைகளை எடுத்துக் கூற வேணும். நாம் பொறுமையிழந்து அவர்களை ஏளனம் செய்தோ அவர்கள் மீது ஆத்திரப்படுவதோ உகந்தது அல்ல:-))

அனானி,

/* Anonymous said...
VSK அண்ணை, */

/* இது எல்லாம் உண்மையில் உங்களுப்புரியவேயில்லையா..? அப்படியானல் ஐயோ பாவம்.. நீங்கள்? */


மேலே அற்புதனுக்குச் சொல்லியுள்ள என் கருத்துக்களைத்தான் நான் உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்.

யோகன் அண்ணை,

உங்களின் விளக்கத்துக்கு மிக்க நன்றிகள். நீங்கள் இலங்கையின் சிங்களப் பகுதிகளில் வாழ்ந்து அனுபவப்பட்டவர். உங்களின் விளக்கம் தமிழக அன்பர்கள் இலங்கையின் நிலைமைகளை விளங்கிக் கொள்ள உதவும் என நம்புகிறேன். 'தலையிடியும் காச்சலும் தனக்கு தனக்கு வந்தால்தான் புரியும்' என்பது போல சில விடயங்கள் அனுபவப்பட்டால்தான் தெளிவாகப் புரியும் போலும். :-))

/* இந்தப் பொலிஸ்காரருக்குப் பதவி உயர்வுக்குச் சந்தர்ப்பம் உண்டு.
அடுத்த தேர்தலில் நின்று வென்றால் கூட ஆச்சரியம் இல்லை. */

உண்மை. மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.இதுதான் அதிகமான சிங்களவர்களின் மனநிலை.