Friday, August 10, 2007

பாகிஸ்தானிடமிருந்து இலங்கை கற்றுக் கொள்ள வேண்டும்

அண்மைக்காலமாக பாகிஸ்தானில் அதிபர் முஷ்ரப் அரசுக்கும் உயர் நீதிமன்றத்திற்கும் இடையில் நடந்துவரும் சம்பவங்கள் பல அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்றிருப்பது மட்டுமல்ல, பாகிஸ்தானின் 60 ஆண்டுகால வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் கருதப்படுகிறது.

பாகிஸ்தான் உருவாகியதிலிருந்து நீண்ட காலமாக நீதிமன்றங்கள் அரசின் எடுபிடியாகவே செயற்பட்டு வந்தன. அரசில் இருப்பவர்கள் குறிப்பாக இராணுவ ஆட்சியாளர்கள் தமது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்கும், தம் அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்புக்களை அடக்குவதற்கும் நீதிமன்றங்களையே கருவியாகப் பயன்படுத்தினர்.

ஆனால் அவ் வழக்கம் 2005ல் இருந்து மாறத் தொடங்கியது. 2005ல் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற இவ்ரிகார் மொகமட் செளத்திரி அவர்கள் அரசின் எடுபிடியாக இல்லாமல் சுயாதீனமாக செயற்படத் துவங்கினார். அவர் 2005ல் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற போது, "நீதித்துறைக்கும் மக்களுக்குமிடையிலான நம்பிக்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது...பாகிஸ்தான் தனது தார்மீக இலட்சியத்தைத் தொலைத்துவிட்டது..." என்று தெரிவித்திருந்தார்.

"There is a serious crisis of confidence between the people and the judiciary...Pakistan had lost its 'moral moorings'...people craved high offices and exalted positions just to demonstrate their superiority over others"
[BBC , Pakistanis 'dismayed' with courts, Thursday, 30 June, 2005]

முஷ்ரப் அரசு முன்னெடுத்த பல மக்கள் விரோத சட்டங்கள் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினார் செளத்திரி. குறிப்பாக கைது செய்யப்பட்ட பின் காணாமல் போன அல்லது உறவினர்களுக்குத் தெரியாமல் வதை முகாம்களில் தடுத்து வைத்தவர்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு பிறப்பித்த ஆணை போன்றன அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

நீதிபதி செளத்திரி அவர்கள் முஷ்ரப் அரசின் விருப்பத்திற்கு மாறான தீர்ப்புக்களை வழங்கி வருவது முஷ்ரப்பை ஆத்திரமடைய வைத்தது. குறிப்பாக இந்த வருட இறுதியில் தேர்தலைச் சந்திக்க இருக்கும் முஷ்ரப், தனக்குச் சாதகமாகத் தீர்ப்புச் சொல்லக் கூடிய ஒருவரை நியமிக்கத் திட்டமிட்டார். அதன் முதற்கட்டமாக நீதியரசர் செளத்திரி மீது பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, நீதிபதிப் பொறுப்பிலிருந்து அவரை இடைநீக்கம் செய்தார். செளத்திரியின் இடைநீக்கத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இறுதியில், செளத்திரியை இடைநீக்கம் செய்தது தவறானது என்றும் அவரை மீண்டும் தலைமை நீதிபதியாக அனுமதிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத் தீர்ப்பு பாகிஸ்தானின் சட்ட/நீதித்துறை[ judiciary ] வரலாற்றிலேயே ஒர் திருப்புமுனை எனவும் , பாகிஸ்தானின் நீதித் துறையில் எதிர்காலத்திலும் இத் தீர்ப்பின் விளைவுகள் இருக்கும் என பாகிஸ்தான் சட்ட மேதைகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

"Legal experts are of the opinion that the judgement marks a watershed in Pakistan's legal history and will have far reaching implications for the rule of law in the country. "
[ BBC, Musharraf faces legal nightmare, Friday, 20 July 2007]

முஷ்ரப் தனது சொந்த நலனுக்காக, மக்கள் விரோதச் சட்டங்களை அமுல்படுத்தியும், மக்களின் உரிமைகளைப் பறித்து, தனக்கு எதிரானவர்களை தனது அதிகாரத்தைப் பாவித்துப் பழி வாங்கி நாட்டைச் சீரழிக்க முற்பட்டதை பாகிஸ்தான் உய்ர் நீதிமன்றம் சரியான நேரத்தில் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

ஆனால் இதே போன்ற சம்பவங்கள் இலங்கையில் நடந்த போது, குறிப்பாக சிங்கள அரசுகள் புத்த சிங்களவர்களின் நலன்களை முன்னிறுத்தி அங்கு வாழும் சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு எதிராகச் சட்டவிரோதமாகச் செற்பட்டு அவர்களின் உரிமைகளைப் பறித்த போது இலங்கை நீதிமன்றங்கள் அதைத் தடுத்து நிறுத்தவில்லை.

இலங்கையின் இனப்பிரச்சனை பற்றி கருத்துத் தெரிவிப்போர் பலர் இலங்கையின் இன்றைய மோசமான நிலைமைக்கு புத்த பிக்குகளும் சிங்கள அரசியல்வாதிகளுமே காரணம் என்கின்றனர். அவர்கள் இலஙகையின் நீதித்துறை[ judiciary ] விட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில்லை.

இலங்கையின் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் ஆலோசகராக இருந்த அர்யுனா கன்னங்கரா அவர்கள் புத்த பிக்குகளாலும், அரசியல்வாதிகளாலும்தான் இன்று நாடு இந்த மோசநிலையில் உள்ளது என்று லண்டன் கார்டியன் பத்திரிகையில் எழுதியிருந்தார்.

" ... General Sooriyabandara is right in blaming the politicians for this pointless war. But the Buddhist clergy must also share the blame. Their rabble-rousing nationalism has egged on countless politicians and the Sinhalese Buddhist majority to undertake the most foolhardy and destructive policies against the Tamil minority. "
[Arjuna Kannangara, Tamil State Inveitable, Guardian, May 18, 2000]

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இலங்கையின் இன்றைய மோச நிலைக்கு இலங்கையின் நீதித் துறையே முக்கிய பொறுப்பு. ஏனெனில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இலங்கைச் சிங்கள அரசுகள் அறிமுகப்படுத்தி அமுல்படுத்திய சகல சட்டங்களும் இலங்கையின் அரசியல் யாப்பிற்கு முரணானவை. இந்த ஒரு காரணத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றங்கள் அச் சட்டங்களை அமுல்படுத்தாமல் தடுத்திருக்கலாம். சிங்கள அரசுகளின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக் கூடிய அதிகாரம் நீதிமன்றங்களிடம் மட்டுமே இருந்தது. ஆனால் இலங்கையின் நீதிமன்றங்களும் சிங்களவர்களால் ,சிங்களவர்களின் நலன்களைப் பேணுவது எனும் குறிக்கோளோடே இயங்கின.

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து , 1972 வரை சோல்புரி அரசியல் யாப்பே அமுலில் இருந்தது. சோல்புரி அரசியல் யாப்பின் 29வது பிரிவின் படி, இலங்கை அரசு, சிறுபான்மை மக்களின் நலன்களையோ அல்லது உரிமைகளையோ பாதிக்கும் சட்டங்களை அமுல்படுத்தக் கூடாது.

ஆனால் "இலங்கையின் தந்தை"[Father of the Nation] என சிங்களவர்களால் அழைக்கப்படும் D.S.செனநாயக்க அவர்கள் அரசியல் யாப்பிற்கு முரணாக மில்லியன் தமிழர்களின்[தமிழகத் தமிழர்கள்] குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த போது இலங்கையின் நீதித்துறை அதைத் தடுத்து நிறுத்தவில்லை.

அதன் பின், சிங்களவர்களல் "சமூகப் புரட்சி நாயகன்"[Champion of Social Revolution] எனப் புகழப்படும் பண்டாரநாயக்கா அவர்கள் அரசியல் யாப்பின் விதிகளுக்குப் புறம்பாக தனிச் சிங்களச் சட்டத்தை அறிமுகப்படுத்திய போதும் இலங்கையின் நீதித் துறை அதைக் கண்டு கொள்ளவில்லை.

பின்னர் திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் அரசியல் யாப்பிற்கு விரோதமாக கிறிஸ்தவ பாடசாலைகளை அரசுடமையாக்கிய போதும் நீதித்துறை மெளனமே சாதித்தது.

தனக்கு இருந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி இச் சட்டங்களை அன்றே இந்த நீதிமன்றங்கள் தடுத்திருந்தால் இலங்கையில் சிலவேளைகளில் இன்று இரத்த ஆறு ஓடாமல் இருந்திருக்கும்.

1960 களில் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் சம உரிமை வேண்டிப் போரிட்ட போது [Civil Rights Movement] , அமெரிக்க அரசியல்வாதிகள் செயற்பட முன்னரே நீதிமன்றங்கள் கறுப்பின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாகச் செயற்படத் துவங்கின. அதுவே அரசியல்வாதிகளையும் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்ற வழி கோலியது.

"குறிப்பாக சிறுபான்மை மக்கள் தமக்கு எதிரான சட்டங்களை நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்த [எண்ணிக்கை] பலம் இல்லாத போது நீதித்துறை அச் சட்டங்களைத் தடுத்து நிறுத்துவது மிக மிக அவசியம், இப்படியான நேரத்தில் நீதிமன்றங்களைத் தான் அவர்கள் நம்பியுள்ளார்கள்" என்கிறர் 'கலாநிதி' ஜெகன் பெரரா அவர்கள்.

"The role of the judiciary becomes extremely important where the normal political processes are likely to lead to injustice to minority and marginalised groups who do not have the power to resist majoritarian imperatives...In such instances people, or communities, who suffer from an injustice have nowhere to go to obtain redress. Therefore, in the interests of good governance, it is incumbent on the judiciary to take an activistic stance and be especially vigilant of those laws passed by parliament which impact upon minority and marginalised groups for whom the normal checks and balances of democracy do not function very effectively. "
[Dr. Jehan Perera, Concerns about Judicial Activism, 1996]

பாகிஸ்தான் நீதித்துறை முஷ்ரப்பின் சுயநல, மக்கள் விரோத , நாட்டைச் சீரழிக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியது போல இலங்கையின் நீதித்துறையும் செயற்படுமா என்றால், அண்மைய சம்பவங்கள் இல்லையென்றே சொல்ல வைக்கிறது.

அண்மையில் திருகோணமலை போன்ற தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளை ஆக்கிரமித்த சிங்கள இராணுவத்தினர் தமிழ் மக்களைப் பலவந்தமாக வெளியேற்றி அப்பகுதிகளை "உயர் பாதுகாப்பு வலயம்", "சிறப்பு வர்த்தக மையம்" என அப்பகுதிகளை அறிவித்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் தமது குடியிருப்புக்களை சிங்கள அரசு இப்படிச் சூறையாடுவதை தடுக்க இலங்கை நீதித் துறையை நாடிய போது, அவ் வழக்கை விசாரனைக்கே எடுத்துக் கொள்ள முடியாது என இலங்கை நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசும் , நீதித்துறையும் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் போது, பாதிக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க வன்முறையை நாடும் அவலநிலைக்குத் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு
"

எனத் தமிழ் வேதம் சொல்கிறது. ஆனால் மாறும் உலக நடப்புக்களை அறிந்து தாமும் அதற்கேற்ப நடந்து நாட்டையும் மக்களையும் முன்னேற்றாது செக்கு மாடுகள் போல பல தசாப்தங்களாக இனவாதம் , புத்தமதவாதம் எனும் பழைய பல்லவியையே சிங்கள அரசியல்வாதிகள் , புத்த மத குருமார், மற்றும் இலங்கை நீதித்துறையினர் பாடி வருகின்றனர்.

நீதித்துறை நடுநிலமையாக , சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேணும். 'கலாநிதி' ஜெகன் பெரரா அவர்கள் இப்படிச் சொல்கிறார்:

"ஆனால் உண்மை என்னவெனின், மக்களின் நலன்கள், குறிப்பாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் போது, இலங்கையில் நடப்பது போன்று,சிறுபான்மையினர் அரசினால் வஞ்சிக்கப்படும் போது நீதித்துறை நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இலங்கையின் இன்றைய அவலநிலைக்கு இலங்கையின் நீதித்துறையும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போது நீதித்துறை முறையாகச் செயற்படவில்லை. மக்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கிடைக்காவிட்டால் வன்முறையை நாடுகின்றனர்"

"But the fact that the judiciary must act, and act vigorously especially when minority rights and human rights are at stake, is clear from the history of the law making in this country. The judiciary has to ensure that there is fairness in law making and in the implementation of the laws, so that people belonging to marginalised groups or to ethnic communities do not feel that they are especially targetted for punitive, discriminatory or unfavourable measures. The judiciary has to take its share of responsibility for the parlous state of the country today owing to what they failed to do in the past. It is when people feel that they have no redress regarding the injustices they are subjected to that they take to violence."
[Dr. Jehan Perera, Concerns about Judicial Activism, 1996]

இலங்கையின் வரலாற்றில் தமிழரின் ஆட்சியில்தான் நீதி தழைத்தோங்கி , மனித உரிமைகள் மதிக்கப்பட்ட பொற்காலம் எனும் சுவாரசியமான தகவலையும் சுட்டிக்காட்டுகிறார் 'கலாநிதி' ஜெகன் பெரரா.

"சமீபத்தில் நடந்த கலந்துரையாடலொன்றின் போது இலங்கை எந்த ஆட்சிக்காலத்தில் நீதி நிலைத்து, மனித உரிமைகள் மதிக்கப்பட்ட பொற்காலம் எனும் கேள்வி கேட்கப்பட்டது. இலங்கையின் பழைய வரலாற்றைப் பற்றிப் பெருமைப்படுபவர்களால் இப்படியான நல்ல பல ஆட்சிக் காலங்களை எடுத்துரைக்க முடியும். ஆனாலும் சோகமான உண்மையென்னவென்றால், எந்த மன்னனின் தோல்வியை பெரிய வெற்றி என்றும் நாட்டின் ஒற்றுமைப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லப்படுகிறதோ அந்தத் தமிழ் மன்னனான [தோற்ற மன்னன்] எல்லாளனுடைய காலமே மிகச் சிறந்த பொற்காலம். சிங்கள புனைநூலான மகாவம்சம் கூட எல்லாளன் நீதி தவறாது ஆட்சி புரிந்தார் என்கிறது. பசு மாட்டுக்குக் கூட அவரின் ஆட்சியில் நீதி கிடைத்தது எனச் சொல்லப்படுகிறது"

"At a recent discussion on governance in Sri Lanka the question was asked, when was the golden of human rights in the country? Those who take pride in Sri Lanka's ancient history might be able to point out that there were indeed many such periods in the country's past. Ironically, the period of the Tamil King Elara, whose defeat is seen as a great triumph of national unification may have been one of those golden periods. The King reigned "justly" records the Mahavamsa, and even a cow whose calf was run over by a speeding chariot could gain justice against the King's own son"
[Dr. Jehan Perera, Concerns about Judicial Activism, 1996]

இலங்கையில் மீண்டும் எல்லாளன் ஆட்சிக் காலம் போல் வருமா? இலங்கை நீதித்துறை எல்லாள மன்னனைப் போல செயற்படுமா? இலங்கையின் நீதிபதிகள் பாகிஸ்தான் நீதியரசர் செளத்திரியின் முன்மாதிரியைப் பின்பற்றுவார்களா?

15 comments:

said...

This is a good analysis, wonderful insight.

said...

//இலங்கையில் மீண்டும் எல்லாளன் ஆட்சிக் காலம் போல் வருமா? இலங்கை நீதித்துறை எல்லாள மன்னனைப் போல செயற்படுமா? இலங்கையின் நீதிபதிகள் பாகிஸ்தான் நீதியரசர் செளத்திரியின் முன்மாதிரியைப் பின்பற்றுவார்களா?//

அமைய வாய்ப்பற்ற எதிர்பார்ப்புகள்!!
நல்ல தேடல்.

said...

இது நல்ல ஒரு ஆய்வறிக்கை

said...

ஏனுங்கண்ண தம்பி பிரபாவும் ஒரு 30 வருசமா
இன்னும் தமிழ்வாதம் தானே பாடி கொண்டு இருக்கிறார்...அதெல்லம் சரிங்கலாண்ணா...
தமிழீழத்தை வேறே வழியிலை ஒரு "ட்ரை" பண்ணியிருக்கலாம் தானே

அண்ணா முச்றாfஉக்கு கஸ்டம்னா பிரபாவுக்கும் ரொம்ப கஸ்டங்கண்ணா...எல்லாத்துக்குமே....

said...

அனானி,

/* This is a good analysis, wonderful insight. */

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

said...

அனாணி அண்ணை,
வாங்கோ! வாங்கோ!
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

/* ஏனுங்கண்ண தம்பி பிரபாவும் ஒரு 30 வருசமா இன்னும் தமிழ்வாதம் தானே பாடி கொண்டு இருக்கிறார் */

அண்ணை, இலங்கையில் இப்போது கொழுந்து விட்டெரியும் தமிழ்த் தேசியவாதத்திற்கும், சிங்கள தேசியவாத்திற்கும் வேறுபாடு உண்டு.
இதுபற்றி ஒரு சின்னப் பின்னூட்டத்திலை விளக்க முடியாது. எண்டாலும் சுருக்கமாயச் சொல்ல முயற்சிக்கிறேன்.

சிங்களத் தேசியவாதம் என்பது, இலங்கை, புத்த சிங்கள மக்களுக்கு மட்டுமே உரியது. புத்த மதமே இத் தீவின் தனி மதம். எனவே இலங்கைத் தீவில் உள்ள சகலவும்[நிலம், பதவி, உரிமை] எல்லாம் சிங்கள மக்களுக்கே சொந்தம் எனும் கற்பனைவாத புனைகதைகளாலும், அடிப்படைவாதத்தாலும் உருவாக்கப்பட்டது. இது மற்றைய இன , மத மக்களை அடக்கியாளுவதற்கும், தமது ஆதிக்கத்தை மற்றவர்கள் மீது திணிக்கவும், மற்றையவர்களின் உரிமையை மறுக்கவும் வழி கோலியது.

ஆக சிங்கள தேசியவாதம் என்பது, ஒரு வெறிபிடித்த, அடிப்படைவாதம்
[fundamentalism].

ஆனால் இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் என்பது தற்காப்புத் தேசியவாதம்[defensive nationalism].
வெறிபிடித்து அலையும் ஒரு இனத்திடமும், நாட்டிடமும் இருந்து தம்மைக் காத்துக்[survival] கொள்வதற்காக, தமக்குள் இருக்கும் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு பொது வேலைத்திட்டத்துடன் செயற்படுவதுதான் இலங்கைத் தமிழ்த் தேசியவாதம்.

ஆக தமிழ்த்தேசியவாதம் என்பது சிங்களதேசியவாதம் போல மற்ற இனத்தவர் மீது வெறி பிடித்து, மற்ற இனத்தவர் மீது தமது ஆதிக்கத்தைச் செலுத்த முனைவது அல்ல.
"நீயும் வாழ், எங்களையும் வாழவிடு" இதுதான் இலங்கைத் தமிழ்த் தேசியவாதத்தின் தாரகை மந்திரம்.

சிங்களவர்கள் இந்த இனவெறியையும் , சிங்கள தேசியவாதத்தையும் கைவிட்டால் தமிழ்த் தேசியவாதம் என்பது தேவையில்லை.

ஆக நான் சொன்னது போல இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் ஒரு தற்காப்புத் தேசியவாதமே[defensive nationalism].

அண்ணை, உங்களுக்கு இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் எவ்வளவு பரீச்சயம் எண்டு எனக்குத் தெரியாது.

ஆனால் இலங்கைத் தமிழ்மக்கள் 1952கள் வரை தமிழ்த்தேசியவாதம் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் சிங்கள தேசியவாதம் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தே [1870 கள்] மற்றைய சிறுபான்மைக் குழுக்கள் மீது தாக்குதல்கள் நடத்தத் தொடங்கி விட்டது.

தமிழ்மக்கள் தமிழ்ப்பகுதிகளில் முந்தி தாமாகவே சிங்களம் விரும்பிப் படித்தனர். ஆனால் சிங்கள தேசியவாதம் தமிழர்களும் சிங்களம்தான் படிக்க வேணும் என்று திணிக்க முற்பட்டதாலை தமிழர்கள் எதிர்த்தனர்.

சிங்களவரான ஜெகன் பெரரா அவர்கள் அச் சம்பவங்களை இப்படிச் சொல்கிறார்:

"For instance, in the heartland of the Tamil north, in Jaffna, Buddhist monks had been welcomed as teachers of the Sinhala language, which Tamil children were then willing to learn without any coercion. Today, those laws that caused havoc to national integration and discriminated against minorities...."
[Jehan Perera, Concerns About Judicial Activism, 1996]

அண்ணை, ஆக சிங்களதேசியவாதத்தினது பண்பும்[characteristic] அது உருவாகிய காரணமும் தமிழ்த்தேசியவாதத்தின் பண்பிலிருந்தும், உருவாகிய காரணத்தில் இருந்தும் முற்றாக வேறுபடுகிறது.

எனவே நீங்கள் இரண்டு தேசியவாத்திற்கும் முடிச்சுப் போடுறது சரியாகப்படவில்லை. உலகில் நடந்த, நடக்கும் மற்றைய விடுதலைப் போராட்டங்கள் பற்றியும் அறிந்தீர்களேயானல், இலங்கைத் தமிழ்த்
தேசியவாதத்தைப் புரிந்து கொள்ள கொஞ்சம் உதவியாக இருக்கும்.


இன்னுமொரு விடயம் அண்ணை.
தமிழ்த்தேசியவாதம், பிரபாகரன், விடுதலைப் புலிகள் எல்லாம் சிங்களவர்களின் தமிழின அடக்குமுறைகளின் விளைவே. ஆக தமிழ்த்தேசியவாதம், புலிகள், பிரபாகரன் என எல்லாவற்றையும் உருவாக்கியது சிங்கள தேசியவாதமே[சிங்கள இனவெறியர்களே] ஒழிய தமிழர்கள் இல்லை. இதை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணதுங்க பிரேமதாசாவுக்கு ஆலோசகராக இருந்த அர்ஜுனா கன்னங்கரா எனும் சிங்களவரே சொல்கிறார்:

"This tragic and bitter war should never have happened. The issues that led to the rise of Prabhakaran and the Tamil Tigers could have been resolved peacefully, through dialogue, years ago, if not for the arrogance and inflexibility of the Sinhalese majority and their religious gurus, the Bhuddist clergy."
[Arjuna Kannangara, Tamil State Inevitable, 2000]

அண்ணை, இப்ப விளங்குதா சிங்கள தேசியவாதத்திற்கும் , தமிழ்த் தேசியவாததிற்கும் உள்ள வேறுபாடு?

பின்னூட்டம் நீண்டுவிட்டுது. உங்கடை மற்றக் கருத்துக்களுக்கு அடுத்த பின்னூட்டத்திலை பதிலளிக்கிறேன்.

said...

அண்ணை என்ரை காது ரொம்ப சின்னதுங்கண்ணா..
ஒரு சின்ன பூமாலை காணுங்கண்ணா...
இன்னும் எவ்ளோ...காலத்துக்கண்ணா இதே பூவை எல்லோருக்கும் சுத்துவீங்கள்??
இந்த வாழு வாழவிடு கதையெல்லாம்..சூப்பர்ணா

said...

யோகன் அண்ணை,

/* அமைய வாய்ப்பற்ற எதிர்பார்ப்புகள்!!நல்ல தேடல். */

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தது போல சுயநல சிங்கள அரசியல்வாதிகளிடம் பிரிட்டிசார் நாட்டின் பொறுப்பைக் கொடுத்து விட்டுச் சென்று விட்டனர்.

நீங்கள் சொல்வது மிகச் சரி. உங்களின் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன்.

இனவெறி கக்கும் சிங்கள வெறியர்கள் பதவியில் இருக்கும் வரை, இந்த இனவெறி பல சாதரண சிங்களக் குடிமகன்கள் முதல் அதிகாரத்தில் இருப்போரின் மனதில் உள்ள வரை இவற்றையெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான்.

said...

இவன்,

/*இது நல்ல ஒரு ஆய்வறிக்கை */

நீங்கள் ஈழம் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து எனக்கு ஊக்கமளிக்கிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

said...

நல்ல ஆய்வறிக்கை
தொடர்ந்து எழுதுங்கண்ணா

said...

Arafa Nagar declared HSZ, Muslim families expelled

About two hundred Muslim families were forcibly moved from Arafa Nagar, a suburb located in Moothoor division in Trincomalee district by the Sri Lanka Army (SLA) on Friday evening on the pretext that their village comes also under the high security zone. Arafa Nagar is located close to Moothoor east, which is declared a high security zone by the government after the completion of military operation, civil society sources said.

[Source : TamilNet, Sunday, 12 August 2007]

இப் பதிவில் தமிழ்மக்கள் அவர்களது பூர்வீக மண்ணான திருகோணமலையில் இருந்து சிங்களப் படைகளால் பல வந்தமாக துரத்தியடிக்கப்பட்டு, அப் பகுதிகளை "உயர் பாதுகாப்பு வலயம்" என அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தேன்.

அதேபோல் திருகோணமலை மாவட்டத்திலிருந்து முஸ்லிம் மக்களையும் சிங்கள அரசு பலவந்தமாக வெளியேற்றி, அப் பகுதிகளை தமிழ்மக்களோ/முஸ்லிம் மக்களோ வசிக்கக் கூடாது என்று அறிவித்திருப்பதாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது.

இதை நீதிமன்றங்களிடம் முறையிட்டால் இவ் வழக்கு விசாரனைக்கே உகந்ததல்ல என சொல்லிவிடுகிறார்கள்.

அப்ப இந்த மக்கள் யாரிடம் நீதி கேட்பது? வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ சிங்கள அரசுகள் நட்டஈடு கூடக் கொடுப்பதில்லை.
இவர்கள் மரங்களுக்குக் கீழும் அங்குமிங்கும் வாழ வேண்டிய பரிதாபத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்

said...

வெற்றி நியாயமான ஆதங்கம். தன் தலையைத் தானே திருகிக் கொண்டு கூக்குரலிடும் கோழியைப் போல இருக்கிறது இலங்கை அரசின் நிலை. பேரினவாதம் என்பது கூட பயங்கரவாதமாகியிருக்கிறதே. இலங்கை யாரிடமிருந்தும் பாடம் கற்கிறதோ இல்லையோ...இலங்கையிடமிருந்து உலக நாடுகள் பாடம் படித்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

said...

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து[1948] முதல் 1972 வரை அமுலில் இருந்த அரசியல் யாப்பின் [Constitution] 29வது பிரிவில் சொல்லப்பட்டுள்ள விதிகள் கீழே:-

29. LEGISLATIVE POWERS AND PROCEDURE

(1) Subject to the provisions of this Order, Parliament shall have power to make laws for the peace, order and good government of the Island.

(2) No such law shall :-

(a) prohibit or restrict the free exercise of any religion; or

(b) make persons of any community or religion liable to disabilities or restrictions to which persons of other communities or religions are not made liable; or

(c) confer on persons of any community or religion any privilege or advantage which is not conferred on persons of other communities or religions, or

(d) alter the constitution of any religious body except with the consent of the governing authority of that body, so, however, that in any case where a religious body is incorporated by law, no such alteration shall be made except at the request of the governing authority of that body:



(3) Any law made in contravention of subsection (2) of this section shall, to the extent of such contravention, be void.

said...

அனானி அண்ணை,

/* தமிழீழத்தை வேறே வழியிலை ஒரு "ட்ரை" பண்ணியிருக்கலாம் தானே */

ஐயோ, தெய்வமே, அனானி அண்ணை, வேறை எந்த வழியிலை நாங்கள் தமிழீழத்தை முயற்சி செய்யலாம் எண்டு சொன்னால் நான் உங்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன். :-))

நாங்களும் எங்களுக்குத் தெரிஞ்ச எல்லா வழிகளிலையும் முயற்சி செய்து பார்த்திவிட்டுத்தான் இருக்கிறோம்.

நீங்கள் உங்களுக்கு தெரிஞ்ச முறையையும் கொஞ்சம் சொல்லுங்கோவேன்.:-)

said...

இராகவன்,

/* இலங்கை யாரிடமிருந்தும் பாடம் கற்கிறதோ இல்லையோ...
இலங்கையிடமிருந்து உலக நாடுகள் பாடம் படித்துத் திருந்திக் கொள்ள வேண்டும். */

மிகவும் அருமையாகச் சொன்னீர்கள்.
உங்களின் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன். மிக்க நன்றி.