Monday, August 13, 2007

மாலன் ஐயாவுக்கு நான் எழுதிய பின்னூட்டம்

மாலன் ஐயா அவர்கள் ஈழத் தமிழர்கள் பற்றி இல்லாத பொய்களை எழுதி வருவது பலரும் அறிந்திருப்பீர்கள். அவர் "சொன்னது என்ன" என்ற பதிவில் ஒரு பின்னூட்டத்தில் எழுதிய பொய்யுக்கு நான் மறுத்து எழுதிய பின்னூட்டம் இது.

மாலன் ஐயா அவர்கள் எழுதிய கருத்துக்கள் சிவத்த எழுத்தில். நான் எழுதிய கருத்துக்கள் நீலத்தில்.


மாலன் ஐயா,

/* இவர்களுக்கு வாக்குரிமைகள் அளிக்கப்படவில்லை. அப்போது இந்தத் தமிழர்களுக்காக யாழ்ப்பாணத் தமிழார்கள் போராடினார்களா? */

வரலாற்றைத் தெரியாவிட்டால், தயவு செய்து தெரிய முயலுங்கள். இல்லாத பொய்யை அவிட்டு விடாதீர்கள். வழமை போல வரலாற்றைத் திரிக்காதீர்கள்.

தந்தை செல்வநாயகம் எதிர்த்துப் பேசியது மட்டுமல்ல நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தார். அது தெரியுமா உங்களுக்கு?

தந்தை செல்வா இச் சட்டத்தின் போது பேசிய நாடாளுமன்ற உரையைப் படித்திருக்கிறீர்களா? "இன்று எமது சகோதரர்களான மலையகத் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப் படுகிறது. நாளை இது எமக்கும் நடக்கும்" என்று நாடாளுமன்றத்தில் முழங்கியது இலங்கை நாடாளுமன்றக் குறிப்பிலேயே உள்ளது.

மலையக மக்களின் உரிமை பறிக்கப்படும் மசோதவை எதிர்ப்பதற்காக 'அடங்காத் தமிழன்' என அழைக்கப்படும் C.சுந்தரலிங்கம் அவர்கள் தனது அமைச்சர் பதவியையே துறந்தார் என்பது தெரியுமா?

1958ல் பண்டாரநாயக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திலேயே தந்தை செல்வா அவர்கள் இலங்கையில் வசிக்கும் அனைத்துத் தமிழர்களுக்கும்[மலையகத் தமிழர்கள்] இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. அது தெரியுமா உங்களுக்கு?

எப்படித்தான் தெரியாத விடயங்களை எல்லாம் உறுதி செய்யாமல் உங்களால் எழுத முடிகிறதோ? இதுதான் உங்களின் 35 வருட பத்திரிகைத் துறை அனுபவமா?

9 comments:

said...

மாலன் ஐயாவின் இந்தப் பொய்யுரைக்கு இன்னுமொரு வரலாறுப் பதிவு விரிவாக விரைவில் எழுதுகிறேன்.

said...

வெற்றி
ஒரு கருத்தினை எதிர்க்கும்போது, அதற்கான ஆதாரத்தினைத் தரவாகச் சேர்ப்பது அதற்குப் பலம் தரும்.
உதாரணமாக, தமிழ்க்காங்கிரசிலிருந்து தமிழரசுக்கட்சி பிரிந்ததன் காரணம் இங்கே ஆதாரம் கிடைத்தால் பலம் கூட்டும்.

பக்கச்சார்புள்ள தமிழரெழுதாமல், வேறு யாரேனும் ஆதாரங்களுடன் எழுதிய கட்டுரை நல்லது. என் இருபின்னூட்டக்கோ(ர்)ப்பு இடுகையிலே இணைத்திருக்கும் கட்டுரை அப்படியானதே. அதிலே நேருவினதும் அவர் மச்சான் கிருஷ்ணமேனனும் இலங்கைவாழ் இந்தியத்தமிழ்மீது நடந்துகொண்டவிதமுங்கூடச் சொல்லப்பட்டிருக்கின்றது.

சுந்தரலிங்கத்தின் இன்னொருமுகம் கொடூரமானது.. நாவலரதுபோலவே :-) யாழ்ப்பாணத்தலைமை என்று பேசும்போது அம்முகமும் பேசப்படவேண்டும்... வேறு சூழலிலே

Author is dead with Postmodernism
Autocratic Journalist is dead with Authentic internet vigilantism :-)

said...

பெயரிலி,

/* ஒரு கருத்தினை எதிர்க்கும்போது, அதற்கான ஆதாரத்தினைத் தரவாகச் சேர்ப்பது அதற்குப் பலம் தரும்.*/

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. இதைத்தான் நானும் யோசித்தேன். அதனால்தான் எனது முதலாவது பின்னூட்டத்திலேயே இன்னொரு பதிவு விபரமாக எழுதுகிறேன் என்று சொன்னேன். அதாவது இலங்கையைச் சேர்ந்த சிங்கள வரலாற்று ஆசிரியர்களின் நூல்கள், மற்றும் தந்தை செல்வா-பண்டாரநாயக்கா ஒப்பந்தப் பிரதிகள் எல்லாம் என்னிடம் இருக்கிறது.

ஆறுதலாக இருந்து அவற்றை இந்த வார இதுதியில் ஒரு பதிவாக எழுதவுள்ளேன்.

said...

//Author is dead with Postmodernism
Autocratic Journalist is dead with Authentic internet vigilantism :-)//

peyariliyin intha varikaL arumai! Naan intha vivaathaththai unnippaaka kavaniththu varukiReen. thodarwthu ezhuthungkaL vetri...
anbudan
osai chella

said...

//நேருவினதும் அவர் மச்சான் கிருஷ்ணமேனனும் இலங்கைவாழ் இந்தியத்தமிழ்மீது நடந்துகொண்டவிதமுங்கூடச் சொல்லப்பட்டிருக்கின்றது.//

வெற்றி!
அன்று இந்திய அரசு ;மலையகத் தமிழ்ச் சகோதரர்களைத் தமிழர்களாகப் பார்த்ததே தவிர; இந்தியராக நினைக்கவில்லை.
மிக அருமையாக உண்மையைச் சொல்லியுள்ளீர்.
தங்கள் தேடல் அபாரம்.

said...

ஓசை செல்லா,
வணக்கம்.

/* thodarwthu ezhuthungkaL vetri...*/

மிக்க நன்றி.

மாலன் ஐயா அவர்கள் அங்கு [அவரது பதிவில்]சொன்ன ஒவ்வொரு பொய்யையும் வரலாற்று ஆதாரங்களுடன் மறுக்க வேண்டியது எனது தார்மீகக் கடமை.

மாலன் ஐயாவின் பதிவில் வந்து கருத்துச் சொன்ன பலரும் குறிப்பாக இராம.கி ஐயா, திரு, மு.சுந்தரமூர்த்தி, ரவிசங்கர் ஈழத் தமிழருக்கு ஆதரவான கருத்தைச் சொன்னதும் மாலன் ஐயா அவர்கள் திகைத்துப் போனார் போலும்.

அதனான் அவர் ஒரு சூழ்ச்சி செய்ய நினைத்தார். அதாவது ஈழத் தமிழர்களுக்குள்ளும், தமிழக உறவுகளுக்குள்ளும் ஒரு விரிசலை ஏற்படுத்துவதுதான் அது. அதுக்காக
அவர் வரலாற்றில் இல்லாத பொய்களை முன்வைத்தார்.

ஆனால் மாலன் ஐயா அவர்கள் தான் சொல்லுவதை ஒரு கேள்வியில்லாமல் திரு, இராம.கி அய்யா மற்றும் தமிழகத் தமிழர்கள் நம்புவார்கள் என நினைத்தார் போலும்.

மாலன் அய்யா அறியாத விடயம் என்னவென்றால் இராம.கி அய்யா, திரு போன்றவர்கள் ஈழத் தமிழர்களின் வரலாற்றை மாலன் ஐயாவை விட, ஒரு சாதாரண இலங்கைத் தமிழனை விட நன்கு அறிந்து
வைத்திருக்கின்றனர்.

இது பொல்லைக் கொடுத்து அடி வாங்கிறது என்று எமது ஊரில் சொல்வது.

விரிவாக இது பற்றி இந்த வார இறுதியில் எழுதுகிறேன்.

said...

ஐயா என்றெல்லாம் யாரையும் அழைக்கவேண்டியதில்லை நண்பரே!

said...

யோகன் அண்ணை,
இப்ப நீங்கள் சொன்ன பிறகு தான் ஞாபகம் வருகுது, சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் பற்றி. கட்டாயம் அதுபற்றியும் எழுத வேணும்.

said...

/* ஐயா என்றெல்லாம் யாரையும் அழைக்கவேண்டியதில்லை நண்பரே!*/

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. ஏனோ வயதில் முதியவர்களை பெயரை மட்டும் சொல்லியழைக்கத் தயக்கமாக இருக்கிறது.

எதற்கும் நான் முயற்சி செய்கிறேன்.