Monday, August 13, 2007

மாலன் ஐயாவிற்கான எனது 2வது பின்னூட்டம்

மாலன் ஐயாவின் பதிவான "சொன்னது என்ன" என்ற பதிவில் அவர் சொன்ன கருத்துக்களுக்கான என் மாற்றுக் கருத்துக்கள். அவர் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு விடயத்திற்கும் சரியான ஆதாரங்களுடன் என் மாற்றுக் கருத்தை முன் வைப்பேன்.

வழமை போல மாலன் ஐயா சொன்ன கருத்துக்கள் சிவத்த எழுத்தில். நான் சொன்ன கருத்துக்கள் நீல எழுத்தில்.


மாலன் ஐயா,

பதிலுக்கு மிக்க நன்றி. நான் ஆத்திரப்படவில்லை. நான் எழுதியது ஆத்திர தொனியில் இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

ஐயா, நான் நீங்கள் சொல்லியுள்ள விடயங்கள் குறித்து பதிவு தயாரித்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் அப் பதிவை இவ் வார இறுதியில் பிரசுரிக்கிறேன்.

/* ஆனால் அரசுப் பணிகளில் யாழ்பாணத் தமிழருக்குள்ள உரிமையைப் பறிக்க ஏதுவாக SWRD பண்டாரநாயக சிங்களம் மட்டும் என்ற மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்திய போது, 1956ம் ஆண்டு ஜீன் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு எதிரே அறப்போர் நடத்தியதைப் போல, மலையகத் தமிழர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது ஏதும் போராட்டங்கள் நடத்தவில்லை */

நீங்கள் சொல்வது தவறு. அறப்போராட்டங்களை லங்கா சமஜமாஜக் கட்சி, தமிழரசுக் கட்சி, இந்திய காங்கிரஸ் ஆகியன சேர்த்து நடாத்தின. அந்த அறப் போராட்டத்தின் நூறவது நாள் போராட்டம் பெரிய கூட்டத்துடன் நடந்தது. அதில் செல்வநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

"When parliament was dissolved and new elections were scheduled in 1952, based on the 1950 register, from which the preponderant majority of Indians were excluded, the Ceylon Indian Congress and the Federal Party launched a campaign to obtain voting rights for those Indian who had opted, under the law, to become citizens of Sri Lanka...A meeting at the Town Hall on August, 1952 to mark the 100th day campaign, united the opposition parties....Representative of the Communist Party[Pieter Keuneman], Federal Party [S.J.V. Chelvanayagam] and plantation labour leaders, S.Thondaman and A.Aziz also spoke on this occasion."
[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.159]

/* செல்வா அவர்கள் வைத்த தமிழ் அரசில், வடக்குக் கிழக்குப் பகுதிகளே இடம் பெற்றிருந்தன. மலையகம் இடம் பெறவில்லை என்ற கருத்தை பேராசிரியர் சிவசேகரம் இவ்வாறு சுட்டுகிறார், */

ஐயா, இலங்கை வரைபடத்தைப் பார்த்தீர்கள் என்றல் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் மலையகம் சிங்களப் பகுதியில் உள்ள இடம். வடக்குக் கிழக்குத் தான் தமிழர்களின் பூர்வீக தாயகம். மலையகம் கண்டி இராச்சியத்தின் பகுதியில் இருந்த பகுதி. ஆகவே சிங்கள மக்களின் மண்ணை எமக்குத் தா என்று கேட்க முடியாது.

மலையகத் தமிழ்த் தலைவர்களும், இலங்கைத் தமிழ்த் தலைவர்களும் என்ன கோரிக்கையை முன் வைத்துப் போராடினார்கள் என்றால், தமிழர்களின் பூர்வீக மண்ணில் மாநில சுயாட்சி, மலையகத் தமிழர்களுக்கு மற்றைய பிரசைகள் போல், வாக்குரிமை, குடியுரிமை, சமவுரிமை. இந்த கருத்தொற்றுமையில் தான் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தமிழ்க்காங்கிரஸ், செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி, தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்தனர்.

/* அவர் ராஜினாமா செய்தாரா? இல்லை தமிழ்நேஷன் பதிவில் உள்ளதைப் போல 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டாரா? */

"C.Sunderalingam...refrained from speaking in the debate ...but Sunderalingam who had serious reservations about the question resigned from the government... "
[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.158]

தற்போது பணிமனையில் இருக்கிறேன். நான் மேலே சொன்னது போல உங்கள் அனைத்துக் கருத்துக்களுக்கும் இந்த வார இறுதியில் பதில் எழுதுகிறேன்.

ஐயா, மீண்டும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, உங்கள் மீது எனக்கு ஆத்திரம் இல்லை. நான் உங்கள் மீது ஆத்திரப்படுவதாக நீங்கள் கருதுமளவுக்கு நான் ஏதாவது சொல்லியிருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

ஐயா, நீங்கள் என்னைவிட வயதில் முதிர்ந்தவர். அந்த வகையில் உங்கள் மீது எனக்கு மரியாதையும் மதிப்பும் உண்டு. உங்கள் கருத்துக்களுக்குத் தான் மாற்றுக் கருத்தைச் சொல்கிறேனே தவிர உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் இல்லை.

நான் அப்படித் தவறி, வரம்புமீறீ ஏதாவது சொன்னால் தயவு செய்து தயங்காது சுட்டிக் காட்டுங்கள்.

இக் கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் தவறான புரிதல்களை களையலாம் என நம்புகிறேன்.

/* யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு மலையகத் தமிழர்களிடமிருந்த தமிழ்நேய்த்திற்கு இந்த தரவுகள் போதுமா? */

மேலே சொன்னது போல், இவ் வார இறுதியில் பதிலளிக்கிறேன்.

மிக்க நன்றி.
மாலன் ஐயாவிற்கான 2வது பின்னூட்டத்தில் நான் சொல்ல மறந்தது.

மாலன் ஐயா அவர்கள் மேலே "ஆனால் அரசுப் பணிகளில் யாழ்பாணத் தமிழருக்குள்ள உரிமையைப் பறிக்க ஏதுவாக SWRD பண்டாரநாயக சிங்களம் மட்டும் ..." எனச் சொல்லியிருக்கும் கருத்தே மிகவும் தவறானது. தனிச் சிங்களச் சட்டத்தால் யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள் எனும் தவறான புரிதலைக் கொண்டிருக்கிறார்.

இச் சட்டத்தால் இலங்கையின் சனத்தைகையில் 30% மக்கள் பாதிக்கப்பட்டனர். அதாவது இலங்கையில் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அனைத்து[இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள்] மக்களும் இச் ச்ட்டத்தால் பாதிக்கப்பட்டனர்.

அடுத்தது மாலன் ஐயா தவறாகப் புரிந்து கொண்ட விடயம் என்னவெனின் இத் தனிச் சிங்களச் சட்டம் ஏதோ வேலைவாய்ப்புத் தேடிய தமிழ்மக்களைத்தான் மட்டும்தான் பாதித்தது என்பது.

இச் சட்டத்தால் தமிழ்மக்கள் ஏதாவது அலுவலகத்துக்குப் போனால்கூட சிங்களத்தில்தான் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தமது சொந்த மண்ணிலேயே தமக்குப் புரியாத மொழியில் பேச வேண்டிய கட்டாயத்தை அனைத்துத் தமிழ்மக்கள் மீதும் திணித்தது. அதனால் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுமே இச் சட்டத்தை எதிர்த்தனர்.

ஆக, மாலன் ஐயா அவர்களின் மேலுள்ள கருத்தைப் பார்க்கையில் அவருக்கு இலங்கையின் அரசியல் வரலாறு பற்றிச் சரியான புரிதலோ[understanding] அல்லது போதிய அறிவோ[knowledge] இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

சிலவேளைகளில், அவருக்கு வரலாறு தெரிந்திருந்தும், வரலாற்றைத் திரித்து, இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டது குறிப்பிட்ட பகுதி தமிழ்மக்களே எனவும், இப் பிரச்சனைக்கு எதிராகப் போராடிய தமிழர்கள், மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்குப் போராடவில்லை எனும் மாயையை ஏற்படுத்த முனைகிறாரா எனவும் நினைக்கத் தோன்றுகிறது.

இந்த தனிச் சிங்களச் சட்டத்தால் கொழும்பில் அலுவலகத்திற்குச் சென்ற தமிழ் நீதிபதி ஒருவரின் நிலை என்னவென்பதை கீழே படியுங்கள்.

'I went to the office of the Government Agent in Colombo in July 1973. In order to find my way to the officer whom I wanted to meet, I saw a board in Sinhala only. I enquired in English from the clerk who was seated behind the counter as to what it said. His reply in Sinhala was “don’t you know how to read Sinhala?” I replied in English that I cannot understand what he said. He said in Sinhala: “Go and learn Sinhala and come back.” A bystander then told me what the board conveyed.’
Mr. V. Manicavasagar, former Supreme Court Judge, quoted in document by Ceylon Institute of National and Tamil Affairs for the International Commission of Jurists, 1974.

12 comments:

said...

மேலதிக கருத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

said...

வெற்றி,

ஈழத்தின் வரலாற்றை அரசியல் ரீதியில் அறிய வேண்டுமாயிம் இதை படித்து தெரிந்து கொள்ளாம்.

புத்தகத்தின் பெயர்:- "ஈழத்தமிழர் எழுச்சி"

ஆசிரியர் :- எஸ்.எம். கார்மேகம்

பதிப்பகம்:- கார்சன்ஸ் பதிப்பகம்

முகவரி :- 27/17 பீட்டர்ஸ் காலனி
ராயப்பேட்டை
சென்னை - 14

தொலைபேசி :- 91-44-28522764.

மேலும் விவரம் வேண்டுமாயின் தெரியப்படுத்துங்கள், அளிக்கிறேன்.

said...

இவன்,
தகவல்களுக்கு மிக்க நன்றி.

said...

புத்தகத்தின் பெயர்:- "ஈழத்தமிழர் எழுச்சி"

ஆசிரியர் :- எஸ்.எம். கார்மேகம்

ம்ம்ம்ம்ம்.....

said...

அனானி,
/* ம்ம்ம்ம்ம்..... */

வாங்கிப் படித்துப் பாருங்கள்.:-)

said...

//இச் சட்டத்தால் தமிழ்மக்கள் ஏதாவது அலுவலகத்துக்குப் போனால்கூட சிங்களத்தில்தான் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தமது சொந்த மண்ணிலேயே தமக்குப் புரியாத மொழியில் பேச வேண்டிய கட்டாயத்தை அனைத்துத் தமிழ்மக்கள் மீதும் திணித்தது. அதனால் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுமே இச் சட்டத்தை எதிர்த்தனர்.//

வெற்றி,

நெகம்பு/நீர்க்கொழும்பு சென்றிருந்த பொது ஒரு மீன்பிடிக்கும் தொழில் செய்யும் நண்பரின் வீட்டில் தங்கிருந்தேன். நண்பரோ சிங்களத்தில் சரளமாக பேசுவார். தமிழில் தட்டு தடுமாறி சில வார்த்தைகள் மட்டும் பேசுவார். அவரது அப்பாவிற்கு சுமார் 70 வயதிருக்கும் ஆனால் அழகாய் தமிழில் பேசினார், தாயாரும் அப்படியே. நண்பர் சிங்கள இனத்தை சார்ந்தவராக இருப்பார் எனவே நினைத்திருந்தேன். 'சிங்களம் மட்டும்' சட்டம் பற்றி நண்பரின் தந்தை எனக்கு விளக்கினார். நீர்க்கொழும்பில துவரை தமிழில் கல்வி, தமிழர்கள் என்று இருந்த அடையாளம் தனது மகன் காலத்தில் 'சிங்கள அடையாளமாக' மாற்றப்பட்ட காரணத்தை புரியவைத்தார்.

இனப்பிரச்சனையின் முக்கிய வரலாற்று பகுதியை உங்கள் பதிவில் எழுதப்போகிறீர்கள். ஆவலுடனே எதிர்பார்க்கிறேன். ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி அரசியல் களங்களில், ஊடகங்களில் செய்திகள் அறிந்திருந்தாலும் பெரும்பாலான மக்களுக்கு அதன் வரலாற்று பின்னணியும் நியாயங்களும் தெரிந்திருக்கிறதா என்பது கேள்வியே. உங்களது பதிவு அந்த இடைவெளியை நிரப்ப உதவலாம்.

said...

திரு,
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் மாலன் அவர்களை விடவும், ஒரு சாதாரண ஈழத் தமிழரை விடவும் ஈழப் போராட்டத்தை அதிகமாத் தெரிந்து வைத்துள்ளவர். அதுமட்டுமல்ல, இலங்கைக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்த்து வந்தவர். உங்களுக்கு உண்மை நிலைமைகள் என்னவெனத் தெரியும்.

/* நீர்க்கொழும்பில துவரை தமிழில் கல்வி, தமிழர்கள் என்று இருந்த அடையாளம் தனது மகன் காலத்தில் 'சிங்கள அடையாளமாக' மாற்றப்பட்ட காரணத்தை புரியவைத்தார். */

திரு, மிகவும் சரியாகச் சொன்னீர்கள். சிங்களவர்கள் தமிழர்களை 2ம் தரப் பிரஜைகளால நடத்தி, அவர்களின் மொழி, கலாச்சாரம் போன்றவற்றை அழித்து, அவர்களையும் சிங்கள இனத்துக்குள் உள்வாங்கிக் கொள்வதே அவர்களின் நோக்கம் என்பதை சர்வதேச நீதிபதிகள் ஆணையம் [International Commission of Jurists] 1974 ல் தனது ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தனர்.

"From all this it would appear that the policy of Government, though not expressly stated, is the relegation of the Tamils to the status of second-class citizens, and the eventual liquidation of the Tamils as a racial minority, and their absorption into the Sinhalese community."

[Document for the ICJ, prepared by the CINTA, 1974]

said...

திரு அவர்களுக்கு நீர்கொழும்பில் இருக்கும் பலர் தமிழர்கள் கத்த்தோலிக்கர்கள் அவர்கள் தாம் தமிழர்கள் என்ற அடையாளத்தை தொலைத்துவிட்டு நிற்பர்வர்கள். தற்போதைய அமைச்சரான ஜெயராய் பெர்ணாந்து பிள்ளையும் ஒரு தமிழர். ஆனால் இவர்களீல் பெரும்பான்மையானோர் சிங்கள மொழியில் படித்தவர்கள்.

said...

மாலன் தெரியாமல்தான் எழுதுகிறார் என்றால் அவர் ஒரு சுத்த அசடு.
அவர் தெரிந்துதான் எழுதித் தொலைக்கிறார் என்றால் அவர் தூங்குவது போல நடிக்கின்றார். அவருக்கு ஐயா போடுவதும், பதில் போடுவதும்
பயனற்ற முயற்சி

புள்ளிராஜா

said...

நண்பர் வந்தியத்தேவன் அவர்களுக்கு,

/* நீர்கொழும்பில் இருக்கும் பலர் தமிழர்கள் கத்த்தோலிக்கர்கள் அவர்கள் தாம் தமிழர்கள் என்ற அடையாளத்தை தொலைத்துவிட்டு நிற்பர்வர்கள். */

மன்னிக்கவும். உங்களின் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. நீங்கள் தமிழர்களின் வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என ஐயமுறுகிறேன். என் புரிதலில் தவறு இருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள்.

நீர்கொழும்புத் தமிழர்கள் தமது அடையாளத்தை இழந்தது நண்பர் திரு சொன்னது போல சிங்களவர்களின் திட்டமிட்ட தமிழின நசுக்குதலும், திணிப்பும்தான் காரணம்.

நீங்கள் சொல்வது போல் அவர்கள் கத்தோலிக்கர்கள் என்பதனால் தமிழ் அடையாளத்தை இழந்தார்கள் என்பது தவறு, வரலாற்றுத் திரிபு.

ஈழமாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, தமிழர்கள், தமது அடையாளமாக ஒருக்காலும் மதத்தை முன்னிறுத்தியது இல்லை.

தமிழர்கள் தமது அடையாளமாக முக்கியமாக முன்னிறுத்துவது தமது தொன்மைவாயந்த, செல்வம் கொழிக்கும் மொழியைத்தான்.

நான் அறிந்த பண்டைய தமிழர்கள் வரலாற்றின்படி இதுதான் தமிழர்களின் மதம் என்று ஒன்று இருந்ததில்லை.

பண்டைய தமிழர்கள் மதம் என்ற போர்வையில் இல்லாது இயற்கையையும் காவல் தெய்வங்கள் என்று சொல்லப்படும் வைரவர், அய்யனார், முனியப்பர் , முருக வழிபாடு போன்றவற்றைத்தான் கடைப்பிடித்தனர்.

பின்னர் ஆரிய வருகைக்குப் பின் ஆரியர் தமது வழிபாட்டு முறைகளைத் தமிழர்கள் மீது திணித்தனர். குறிப்பாக பிராமணர்கள் இச் செயலைச் செய்தனர்.

இப் பிராமணர்கள் இன்று ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களைப் போல மிகவும் மோசமாக நடந்து கொண்டனர். தமிழர் பண்புக்கு விரோதமான, உடன்கட்டை ஏறல், மிருக வேள்வி, பெண்களை அடக்கும் விதிமுறைகள், சாதி எனும் பெயரில் தமிழர்களையே அடக்கி வைத்தல் போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டனர்.

மக்களை, இன்றைய தலிபான்களை விட மோசமாக இப் பிராமணர்கள் வதைத்தனர்.

இதற்குப் பல தமிழ்மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். வள்ளுவர் அவர்களும் இவர்களின் வழியைக் கடைப்பிடிக்காது எமது பண்பாட்டு முறைகளைக் கடைப்பிடிக்க திருக்குறளில் வழிகளைச் சொன்னார்.

இந்த ஆரியப் பிராணர்களின் கொடுமை , மக்களை வதைப்பதைப் பார்த்த புத்த பெருமான், சமணர்கள் ஆகியோர் இவர்களைக் கண்டித்து நல்ல போதனைகளைப் போதித்தனர்.

இந்த ஆரியப் பிராமணர்களின் மதத்தைத் துறந்து முழுத் தமிழகமுமே ஒரு காலத்தில் புத்தம், சமணம் ஆகிய மதங்களைத் தழுவிக் கொண்டது.

ஆக, தமிழர்கள் காலத்திற்குக் காலம், வெவ்வேறு மதங்களைத் தழுவி வந்தனர்.

எனவே தமிழர்கள் கத்தோலிக்க மதத்தைத் தழுவியதால் அவர்கள் தமிழின அடையாளத்தைத் தொலைத்தார்கள் என்பது தவறானது. ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவாதம்.

ஆறுமுக நாவலரின் சீடரான கிறிஸ்தவரான தாமோதரம்பிள்ளை அவர்கள்தான்தான் தொல்காப்பியத்திற்கு விளக்கம் எழுதினார்.

கிறிஸ்தவரான தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ச்சேவை உலகறிந்தது.

கிறிஸ்தவரான சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்தான் இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்.

இன்று விடுதலைப்புலிகள் அமைப்பில் உள்ள போராளிகளில் கிறிஸ்தவர்களும் அடங்குவர்.

எனவே இதுதான் தமிழர்களின் மதம் என ஒரு மதமும் இல்லை. தமிழர்களின் அடையாளமாக தமிழர்கள் மதத்தை முன்னிறுத்துவதும் இல்லை.

எனவே நீங்கள் சொல்லியுள்ளது தவறான கருத்து என நினைக்கிறேன்.

என் புரிதலில் தவறு இருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள்.

said...

புள்ளிராஜா,
வாங்கோ. முதல் முதலாக என் தளத்திற்கு வந்துள்ளீர்கள். நல்ல பெயர் உங்களது. :-))

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

/* பதில் போடுவதும் பயனற்ற முயற்சி */

'மெளனம் சம்மதம்' என்பது போல நாம் இங்கே அவரின் தவறான கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், அவர் சொல்வது சரியென பலரும் நம்பக்கூடும். இந்தத் தவறான கருத்தே பின்னாளில் வரலாற்றில் புகுத்தப்பட்டு தமிழர்களுக்குள் மனக்கசப்புக்கள் ஏற்படலாம்.

மாலன் அவர்களின் பதிவில் வந்து கருத்துச் சொன்ன பலரும் ஈழத் தமிழருக்கு ஆதராவான கருத்தைச் சொன்னதும், ஈழத் தமிழர்களுக்கும் , தமிழகத் தமிழர்களுக்கும் விரிசல் ஏற்படுத்த அவர் செய்த சூழ்ச்சிதான் இது. அந்தச் சூழ்ச்சியை அம்பலப்படுத்தி உண்மையான வரலாற்றைப் பலரும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் இவற்றைச் சொல்லுவது என் தார்மீகக் கடமை. எம் முன்னோர்கள் எமது வரலாற்றைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் விட்டதால் எம்மினத்தில் எத்தனையோ பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

அத்துடன், பல தமிழகத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் போன்றோருக்கும் இவ் வரலாறுகள் தெரியாமல் இருக்கும். அவர்களும் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

/* அவருக்கு ஐயா போடுவதும்,*/

மாற்றுக் கருத்துச் சொல்பவர்களானாலும் அவர்களை மதிக்க வேணும் என்பது வள்ளுவன், பெரியார், அண்ணா போன்றோர் எமக்கு கற்றுத் தந்தது. இது எம் தமிழினத்தின் பண்பல்லவா?:-)


மாற்றுக்கருத்துச் சொல்பவர்களின் இனத்தின் பெண்களைக் கற்பழித்துக் கொல்வதுதான் தமது கலாச்சாரம் என மார்புதட்டும் பண்பு இல்லையே எமது பண்பு.

said...

அன்னானியாக வந்து கருத்துச் சொன்ன நண்பருக்கு,

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. உங்களின் கருத்தோடு உடன்படுகிறேன்.