Sunday, August 05, 2007

கானா பிரபா, குமரன் ஆகியோரைத் தொடர்ந்து BBC யிலும் விபுலானந்த அடிகள் பற்றி...

நண்பர் கானா பிரபா அவர்கள் விபுலானந்த அடிகளார் பற்றி சில வாரங்களுக்கு முன் ஒரு அருமையான கட்டுரை ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

அக் கட்டுரையில் இருந்த விபுலானந்த அடிகளாரின் பாடல்களைப் படித்து மெய்மறந்த அருமை நண்பர் குமரன் அவர்கள், 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்பது போல் அப் பாடல்களுக்கு எளிய தமிழில் அழகாக விளக்கம் எழுதியிருந்தார்.

குறிப்பாக வெள்ளை நிற மல்லிகையோ எனும் பாடல் என் மனதில் ஒரு பத்தியுணர்வை ஏற்படுத்தியிருந்தது.

BBC தமிழோசையில் விபுலானந்த சுவாமிகள் பற்றி ஒரு ஒலி நிகழ்ச்சிசைக் கேட்டேன். அதில் இப் பாடலைக் கேட்டேன். உண்மையில் மெய் சிலிர்த்தது. அப் பாடலைப் பல முறை கேட்டேன்.

அந்த நிகழ்ச்சியை நீங்களும் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்

1 comments:

said...

வெற்றி!
இந்த நிகழ்ச்சி கேட்டேன். இப்பாடல் என் ஆறாம் வகுப்பில் படித்தேன். பாடத்திட்டத்தில்
ஈசன் உவக்கும் இன் மலர்கள் என வந்தது.