மதுரக் குரலோன் E.M. ஹனிபா அவர்களின் குரலில் பாவேந்தர் பாடல்கள் [வீடியோ]
"குழலினிது யாழினிது" என்பர் மதுரக் குரலோன் E.M. ஹனிபா அவர்களின் குரலைக் கேளாதோர். என்னே இனிமை! சொல்லை உச்சரிக்கும் விதம். வரிகளுக்குத் தகுந்தாற் போல குரலில் ஏற்ற இறக்கம். அம்மாடி, அவரின் குரல்வளத்தை வர்ணிக்க எனக்குத் தமிழறிவு இல்லை. தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து வளரும் பாடகர்கள், பாடகிகள் கற்றுக் கொள்ள வேண்டும்.
மதுரக் குரலோன் ஹனிபா அவர்கள் பாடிய பாவேந்தரின் இரு பாடல்களை youtube ல் பார்த்தேன். மெய்மறந்தேன். பல தடவைகள் கேட்டு/பார்த்து இரசித்தேன்.
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்பது போல நான் இரசித்த அப் பாடல்களின் youtube ஒளித்துண்டுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
இப் பாடல்களை youtube ல் ஏற்றிய அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தமிழுக்கும் அமுதென்று பேர்
சங்கே முழங்கு
7 comments:
பேரன்புடையீர்,
மிக்க நன்றி.புரட்சிக் கவிஞரின் வார்த்தைகளுக்கு உயிரூட்டி உணர்ச்சியுடன் பாடியுள்ள நாகூரார் குரல் தனித்தன்மை வாய்ந்தது.
1950-அறுபதுகளிலிருந்து தமிழ் வளர்த்த குரலது.
தமிழன் ஐயா,
தகவல்களுக்கு மிக்க நன்றி.
வெற்றி!
அருமை அருமை! தங்கள் சுவையே தனி!
திரு.ஹனிபா அவர்களை அந்தக் காலத்தில் இருந்து என் உள்மனம் கனி+பா=ஹனிபா...என்றே சொல்லும், அவர் தமிழை உச்சரிக்கும் பாங்கே தனி!
நன்றி
யோகன் அண்ணை,
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
சிம்மக்குரலோன் ஐயா நாகூர் அனிபாவின் குரல், புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசனாரின் கவிதை. இதைவிட சக்தி வாய்ந்தது இருக்க முடியுமா?
இது பக்கத்தில, நாகாசாகி 'லிட்டில் பாய்', ஹிரோஷிமா 'ஃபேட் மேன்' எல்லாம் ச்சும்மா வெறும் ஒரு ஜுஜுபிதானுங்க!
நன்றி ஹனிபா ஐயா.
நன்றி வெற்றி.
இந்த பாடல்களை எம்.பி.3 விற்கு யாராவது மாற்றி தர முடியுமா?
இதற்கும் நன்றி.
மாசிலா,
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
/* இந்த பாடல்களை எம்.பி.3 விற்கு யாராவது மாற்றி தர முடியுமா? */
நான் ஒருக்காலும் முயற்சி செய்யவில்லை. அப்படிச் செய்யலாமா என எனக்குத் தெரியாது.
யாராவது தெரிந்தால் சொல்வார்கள் என நினைக்கிறேன்.
மிகவும் அருமையான விஷயத்தை தந்திருக்கும் வெற்றிகொண்டான் ஐயாவிற்கு என் மனம்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, தாய்மொழி அதுவும் நம் தமிழ் மொழிதான் நம் முகம் என்பதை தமிழினம் மறந்துவிடக்கூடாது!
என்ன நான் சொல்வது சரிதானே!
நன்றியுடன் வாழ்த்துக்களும்...
Post a Comment