Thursday, July 26, 2007

பிரபாகரன் - ராஜபக்ச சந்திப்பு [கேலிப்]படங்கள்



படத்தில் சிங்களத்தில் எழுதியிருப்பது :- "அதி சிறந்த பெளத்தவாதியின் மிகப்பெரிய துரோகம்"

இடமிருந்து வலம்: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, அருகில் [நீல மேலாடையுடன்] மங்கள சமரவீர. இவர் ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு அரும்பாடுபட்டவர். பின்னர் ராஜபக்சவுடன் பிரச்சனைப் பட்டு புதிய கட்சி துவங்கி ராஜபக்சவை எதிர்த்து ரணிலுடன் கூட்டு வைத்துள்ளார்.


அன்றிலிருந்து இன்றுவரை சிங்கள அரசியல்கட்சிகள் இனப்பிரச்சனையை வைத்துத்தான் பிழைப்பு நடாத்துகின்றனர். தாம் தான் உண்மையான சிங்கள இனக் காவலன் என்றும் மற்றைய கட்சிகளின் தலைவர்கள் தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றனர் என ஒருவருக்கு எதிராக ஒருவர் குற்றம் சாட்டுவர்.

மேலே உள்ள கேலிப்படங்கள், இன்று கொழும்பில் நடந்த ரணில்-மங்கள சமரவீர கட்சிகளின் ராஜபக்ச அரசுக்கு எதிரான கண்டனப் பேரணியில் எடுத்த படங்கள். ராஜபக்ச புலிகளுக்கும் தமிழர்களுக்கும் நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார் என்பதும் இன்றைய பேரணியின் ஒரு சாரம்.தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் "பயங்கரவாத்தை" சரியாக 9 மாதங்களுக்குள் அடக்கிவிடுவோம் என்கின்றனர் ரணிலும் மங்கள சமரவீரவும்.

படங்கள் Tamilnet.com ல் இருந்து எடுத்தவை.

5 comments:

said...

எல்லாம் அரசியல் விளையாட்டு ஆகிவிட்டது..ம்ம்ம்..

நடக்கட்டும்.. நடக்கட்டும்..

said...

சிவபாலன்,
உண்மைதான். வாக்கு வாங்கிப் பதவியிலேற எல்லாவற்றையும் அரசியலாக்கிவிட்டார்கள். குறிப்பாக இந்த இனப் பிரச்சனையைத் தொலைநோக்குடன் அணுகிப் பிரச்சனையை அன்றே தீர்த்திருந்தால், இன்று பிரபாகரனோ விடுதலைப் புலிகளோ இருந்திருக்கத் தேவையில்லை. பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் உருவாக்கியது சிங்களவர்களே அன்றி தமிழர்கள் அல்ல.

said...

Prabakaran is also doing good politics

said...

இது கேலிக்குரியது அல்ல. நாட்டில் என்ன நடைபெறுகின்றது என்பது என்பது மக்களுக்குத் தெரியாது. திரைமறைவு ஒப்பந்த்தம் தொடரும் வரை சந்தேகங்கள் தொடரும்.
புலிகளின் பலமும் பலவீனமும் அவர்கள் அதிகம் பேசாதது தான்.

said...

அரசியல் விளையாட்டு . . . .

ஆட்கள் கட்சி மாறுவார்களே . . . தவிர மக்களுக்கு விமோசனம் கிடையாது