Saturday, September 15, 2007

மனதுக்கு நிம்மதி...மகிழ்ச்சியான செய்தி...


பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் உண்ணா நோன்பு இருக்கப் போவதாக அறிவித்ததும் மனம் பதைத்துப் போனது. இருதய அறுவைச் சிகிச்சைக்கு ஆளாகியவர். அவர் உண்ணா நோன்பு இருந்தால் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு விபரீதமான விளைவுகள் ஏற்பட்டு விடுமோ என மனம் பயத்தில் உறைந்தது.



முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, மருத்துவர் இராமதாசு, அண்ணன் வைகோ மற்றும் ஈழத் தமிழ்த் தலைவர் இரா.சம்பந்தன் போன்றோரின் அன்புக் கோரிக்கைக்கும், முதல்வர் கலைஞர் , மற்றும் மருத்துவர் இராமதாசு போன்றோரின் உறுதிமொழிக்கும் செவி சாய்த்து அவர் உண்ணா நோன்பைக் கைவிட்டு விட்டார் என இன்று செய்தி வந்ததும் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது.



பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் உண்ணா நோன்பை முடிவுக்குக் கொண்டுவர அயராது உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.



பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் உண்ணா நோன்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் பதிவேற்றிய சக பதிவர் நண்பர் கோ.சுகுமாரன் அவர்களுக்கும் என் சிறப்பு நன்றிகள்.