Wednesday, September 19, 2007

இலங்கை ஒரு நாஸி நாடு. அமெரிக்கா இலங்கைக்கு உதவக் கூடாது : அமெரிக்கப் பத்திரிகை

இலங்கை ஒரு நாஸி நாடு எனவும், அமெரிக்கா இலங்கை அரசுக்கு உதவக் கூடாது எனவும் அமெரிக்காவில் Cincinnati யில் இருந்து வெளிவரும் The Enquirer எனும் பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் [editorials] தெரிவித்துள்ளது.

அவ் ஆசிரியர் தலையங்கம் [editorials ]கீழே :


If you think Naziism or apartheid are long gone, you would do well to continue reading. Last month in Sri Lanka, 500 Tamils were forcibly evicted by police from the capital city of Colombo. They, along with 300 others who were detained, either lived in the capital or had been visiting for reasons including medical treatment. The police chief's explanation: ethnic minority Tamils cannot stay in the capital "without a valid reason."

"Police didn't listen to us. They tried to beat us, they where scolding and they put us into the vehicles," explained a 54-year old mother. "They made us to leave the place with whatever cloth we were dressed with. We didn't even take our clothes."

Although Naziism may be dead in name, the philosophy behind it is alive and well in Sri Lanka. Even that country's opposition leader agrees, comparing this to the treatment of Jews in Germany and blacks in South Africa. Norway and America condemned the mass eviction, and several non-governmental organizations called it a disgrace to humanity.

So should all of us simply join the chorus of condemnation, and then proceed to forget Sri Lanka? If the eviction were an aberration, perhaps. But Tamils know it is just the latest in a decades-long story of state terrorism that amounts to genocide.

If you don't care much for Sri Lanka, consider this: the U.S. is sending $60 million in aid to the Sri Lankan military. As the Tamils fight a war of liberation, exactly what kind of military has Sri Lanka shown itself to have? It's not pretty. The armed forces have been criticized repeatedly for murdering journalists, professors, students and members of parliament. The air force is known for bombing schools, churches, refugee camps and orphanages. The army blocks food and medicine from reaching hundreds of thousands of Tamils displaced by the war. Last year soldiers massacred 17 non-governmental organization workers by lining them up and shooting them at close range.

Surely it is reasonable that, when I give up hard-earned money to taxes, I assume it goes to improving our country or maybe helping the needy overseas, not to filling the coffers of a wildly murderous military. Especially at a time when our own forces are near breaking point in Iraq and Afghanistan, why are we throwing money at Sri Lanka?

And let's not forget the Indian Ocean tsunami - how well do disaster victims, many still in temporary camps, fare when an army that kills civilians is given free money? I don't like seeing my taxes go to random pork barrel spending, let alone foreign military oppression.

During the Holocaust or apartheid in South Africa, the international community did not act fast enough. After the atrocities of Rwanda, we said "never again." As the horrors of Darfur unfold, Americans are finally taking action. We must do the same for Sri Lanka.

The Nazi-style mass eviction of Tamils is one part of a long genocidal streak, and we cannot sit back and watch. As our government funds the Sri Lankan military, inaction implies not just neutrality, but complicity.


The Enquirer ன் இவ் ஆசிரியர் தலையங்கத்திற்கான சுட்டி இங்கே.

இவ் ஆசிரியர் தலையங்கத்தினைத் தமிழில் மொழிபெயர்த்து பின்னர் பதிவேற்றுகிறேன்.

10 comments:

said...

இப்போதுதான் உலகிற்குப் புரிகிறது சிங்கள இனவாத வெறித்தனம்.
இலங்கை ஒரு நாடாகத் திகழ்வதற்குத் தமிழர்களின் உழைப்பு மிகவும் ஆழ்ந்த சரித்திர பூர்வமானது.அந்தத் தமிழினத்தை அடக்கி ஆள இன வெறி அரசு தமிழர்களைக் கொன்று குவித்து அச்சுறுத்துகிறது.

கோயபல்சை விட அதிகமாகப் பொய் பேசி இந்தியாவையும்,மற்ற நாடுகளையும் ஏமாற்றி வருகிறது.

உண்மைகள் மறைக்கப் பட முடியாதவை.உலகம் புரிந்து கொள்ளட்டும்.

said...

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் தமிழன் ஐயா.

said...

வெற்றி!
இந்தப் பத்திரிகை ஆசிரியருக்குப் புரிந்தது எப்போ அரசுக்குப் புரியும்.
புரியுமா???

said...

தற்போது கொஞ்சம் நேரமின்மை.இப் பதிவின் தமிழாக்கத்தை இவ் வார இறுதியில் வெளியிடுகிறேன்.

வேறு யாராவது அன்பர்கள் நேரம் இருப்பின் தமிழாக்கம் செய்தால் மிக்க மகிழ்ச்சி.

said...

வேறு யாராவது அன்பர்கள் நேரம் இருப்பின் தமிழாக்கம் செய்தால் மிக்க மகிழ்ச்சி.

ask malan sir

said...

யோகன் அண்ணை,

கருத்திற்கு மிக்க நன்றி.

விபரம் தெரிந்தவன்,

நன்றி.

said...

இந்த செய்தியை போட்டமைக்கு நன்றி. தெளிவாக எழுதியுள்ளார்கள். தமி்ழர்படும் இன்னல்கள் பற்றி இந்த உலகிற்க்கு விழிப்புணர்வு கொண்டுவர இது போன்றவை பயன்படும்.

said...

சரிங்க வெற்றி சார் நீங்க ஈழ தமிழர்கள் துயரம் தீரம் ஏன் இலங்கைக்கு சென்று போராடகூடாது? எதுக்கு இப்படி ரொம்ப சவுரியகமாக அமர்ந்து பேச வேண்டும்?

said...

நல்லதொரு கட்டுரையைப் படிக்கத் தந்ததற்கு நன்றி வெற்றி. இப்படிப்பட்ட நல்ல க்ருத்துகள் ஆங்காங்கே அமெரிக்காவில் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையினர் இன்னும் இப்படிப் பேசத் தொடங்கவில்லை. அப்படி அவர்கள் பேசத் தொடங்கினால் நல்லது நடக்கும்.

said...

மீட்டர்பாலா,
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

அனானி,

/* சரிங்க வெற்றி சார் நீங்க ஈழ தமிழர்கள் துயரம் தீரம் ஏன் இலங்கைக்கு சென்று போராடகூடாது? எதுக்கு இப்படி ரொம்ப சவுரியகமாக அமர்ந்து பேச வேண்டும்?*/

முதலில் உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். நான் ஈழத் தமிழன். என்னை நீங்கள் இப்படிச் சார்/கீர் என்று அழைப்பது எனக்கு அசிங்கமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. தயவு செய்து எதிர்காலத்தில் சார் என்று அழைப்பதைத் தவிருங்கள். வாறவன் போறவன் எல்லாரையும் சார்/கீர் எனக் கூப்பிடும் வழக்கம் ஈழத் தமிழர்களிடம் இல்லை என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் கருத்திற்கு நன்றி. உங்களின் கருத்தைப் பார்க்கும் போது உலக மற்றும் ஈழப் போராட்ட வரலாறு அறியாதவர் போலத் தெரிகிறது.

யூத மக்கள் நாடில்லாமல் அலைந்து திரிந்து இஸ்ரேலை அமைக்கப் போரிட்ட போது புலம் பெயர்ந்து வாழ்ந்த யூத மக்களின் பங்களிப்புத்தான் இஸ்ரேல் எனும் நாடு உருவாக முக்கிய காரணிகளில் ஒன்றக இருந்தது.

அதே போலத்தான் ஈழ விடுதலைப் போராட்டத்திலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பங்கு அளப்பரியது. ஈழ விடுதலைப் போராட்டத்தை அகக் களம் , புறக் களம் என இரு வகையாகப் பிரிக்கலாம். அகக் களம் என்பது ஈழம். அங்கு வாழும் மக்கள் ஈழத்தில் இருந்து போராடுவது. புறக் களம் என்பது புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் வாழும் தமிழர்கள். யூத மக்களைப் போல புலம் பெயர்ந்து வாழும் அதிகமான ஈழத் தமிழர்கள் புறக் களத்தில் இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்குத் தமது பங்களிப்பினைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.


குமரன்,

கருத்திற்கு மிக்க நன்றி.

/* ஆனால் பெரும்பான்மையினர் இன்னும் இப்படிப் பேசத் தொடங்கவில்லை. அப்படி அவர்கள் பேசத் தொடங்கினால் நல்லது */

நீங்கள் சொல்வது உண்மை குமரன். புலத்தில் வாழும் ஈழத் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் இலங்கையில் நடக்கும் சம்பவங்களை எடுத்துரைத்துத்தான் வருகிறர்கள். இன்னும் அச் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேணும்.
அப்போதுதான் நீங்கள் சொல்வது போல பெரும்பான்மையானவர்கள் இது பற்றி அறிவர்.