Sunday, April 29, 2007

இன்னும் 30 ஆண்டுக்குள் யாழ்ப்பாணம் கடலுக்குள் மூழ்கிவிடும்!

"எதிர்காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகணங்களில் இல்லாமல் போக்கூடிய மண்ணுக்காக (சிங்கள)அரச படைகளும் விடுதலைப்புலிகளும் அடிபட்டுச் செத்து மடிகின்றனர்" என்கிறார் பேராசிரியர் மோகன் முனசிங்கே.["Government troops and the LTTE fighting over land in the north and the east that may soon not even be there."]

பேராசிரியர் மோகன் முனசிங்கே அவர்கள் ஐக்கிய நாடுகள்[ஐ.நா] சபையின் Intergovernmental Panel on Climate Change (IPCC) எனும் அமைப்பின் உப-தலைவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடல் நீரின் மட்டம் அரை மீற்றரால் உயருகின்றது, வறண்ட பகுதிகள்[dry zone] மேலும் வறண்ட பிரதேசங்களாகவும் குளிர்மையான பிரதேசங்கள்[wet areas] மேலும் குளிர்மையான பிரதேசங்களாகவும் மாறி வருகிறது. இதனால் குளிர் பிரதேசங்களில் வெள்ளப்பெருக்குகளும், வறண்ட பகுதிகளில் வறட்சிக் கொடுமைக்கும் வழிவகுக்கும். சூழலில்[atmosphere] அதி கூடிய வெப்பநிலையால் [Higher temperatures] தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் நாட்டின் விவசாயம் பாதிக்கப்படும். நெல் உற்பத்தி 20-30 வீதத்தால் வீழ்ச்சியடையும்.

நாட்டின்(இலங்கை)சுகாதார நிலமைகள் மிகவும் மோசமடையும். வறண்ட பிரதேசங்களில் இருந்து நுளம்புகள் குளிர்ப்பகுதிகளுக்குச் செல்லும் கட்டாயம் ஏற்படும். இதனால் இக் குளிர் பிரதேசங்களில் மலேரியா, டெங்கே[dengue] சிக்குன்னியா[chikungunya] போன்ற நோய்கள் பரவும்.

என்ன பயமாக இருக்கிறதா? இதோ இன்னும் சில :

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் [தமிழர்களின் தாயகம்] உள்ள பல கரையோரப் பகுதிகள் இன்னும் 30 வருடங்களுக்குள் கடலில் மூழ்கிவிடும்.

பேராசிரியர் மோகன் முனசிங்கேயின் கருத்துக்கள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழ், சிங்கள கடும்போக்காளர்களின்[hardliners] கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்[...comments that are certain to draw the attention of hardliners from both sides of the warring fence]


மேலே உள்ள தகவல்கள் கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸின்[The Sunday Times] இவ்வார இதழில் [Sunday, April 29, 2007] வெளிவந்தவை. பூமியின் உஷ்ணமே[global warming] இவ் அனர்த்தங்களுக்குக் காரணம் என்கிறார் பேராசிரியர் மோகன் முனசிங்கே. இவர் இவ் விடயத்தை மிகவும் மிகைப்படுத்துகிறாரா? அல்லது உண்மையாகவே சில தமிழ்ப் பகுதிகள் இன்னும் 30 வருடங்களுக்குள் கடலுக்குள் மூழ்கப்போகிறதா என்பது எனக்குத் தெரியாது. யாராவது இத் துறையில் உள்ள வல்லுனர்கள்தான் பதிலளிக்க வேண்டும். ஆனால் பேராசிரியரின் கருத்துக்கள் இலங்கை அரசியல்வாதிகளிடையேயும் மக்களிடையேயும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துமா என்பதுதான் என் கவலை.
எனது அச்சம்?!!!! ஈழத்தில் நான் பிறந்த மண்[ஊர்] ஒரு கரையோரக் கிராமம். "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி" இருந்த என் கிராமமும் கடலில் மூழ்கிவிடுமோ என்பதும் என் அச்சங்களில் ஒன்று.

5 comments:

said...

70களிலே உந்த வித்தக ஆராய்ச்சியிலை சொன்னவங்கள்.25 வருடங்களில் யாழ் சதுப்புநிலம் ஆகுமென்று ... இன்றும் நன்னீர் இருக்கு... உந்த வித்தகர் சொல்லுகினம் என்னும் பூமியே 50- 100 வருடம் தான் தாக்கு பிடிக்கும் எண்டு சொல்லினம். எனக்கென்னவோ தன்னை தானே மீள் சீரமித்து கொள்கிற சக்தி பூமிக்கு இருப்பதாகவே படுகிறது.

said...

//தன்னை தானே மீள் சீரமித்து கொள்கிற சக்தி பூமிக்கு இருப்பதாகவே படுகிறது//

It does, but it takes such a long time that human might go extinct.

said...

யாழ்ப்பாணம் மட்டுமா? கடலோரப் பகுதிகள் பல நாடுகளில் மூழ்கும் என்று தான் நானும் படித்தேன்.

40 வருடங்களில் நடக்கலாமாம், நாமெல்லாம் சுதாரிக்காவிட்டால்.

said...

சின்னக்குட்டி அண்ணை,
வாங்கோ!

/* 70களிலே உந்த வித்தக ஆராய்ச்சியிலை சொன்னவங்கள்.25 வருடங்களில் யாழ் சதுப்புநிலம் ஆகுமென்று ... இன்றும் நன்னீர் இருக்கு...*/

உண்மைதான். சிலவேளைகளில் இந்த மேதைகள் சில விடயங்களை மிகைப்படுத்துகிறார்கள் என்பது உண்மை. மக்களினதும் அரசியல்வாதிகளினதும் கவனத்தைப் பெறுவதற்காக அப்படிச் செய்கிறார்களோ என்னவோ!

ஆனால் global warming என்பது ஒரு முக்கிய பிரச்சனை. நாம் எம்மால் ஆன சில நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

said...

Anonymous,
வணக்கம். கருத்துக்கு மிக்க நன்றி.

------------------------------
சர்வேசன்,
வணக்கம்.

/* யாழ்ப்பாணம் மட்டுமா? கடலோரப் பகுதிகள் பல நாடுகளில் மூழ்கும் என்று தான் நானும் படித்தேன்.

40 வருடங்களில் நடக்கலாமாம், நாமெல்லாம் சுதாரிக்காவிட்டால். */

இவை மிகைப்படுத்தப்பட்ட செய்திகலாக இருக்குமோ எனும் ஐயம் எனக்கு இருந்தாலும், பூமியின் வெப்பத்தைத் [global warming ]தடுக்க அரசுகள், குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் முழு மனத்தோடு
தொலைநோக்குப் பார்வையோடு செயற்பட வேண்டும் என்பதே என் கருத்து.