Friday, April 13, 2007

யாழ்ப்பாண அரச குடும்பத்தின்[Royal Family of Jaffna] இணையத்தளம்

யாழ்ப்பாணப் பேரரசு போர்த்துக்கீசரினால் அழிக்கப்பட்டதாக வரலாறு. யாழ்ப்பாணப் பேரரசின் கடைசி மன்னன் சங்கிலியன் கொல்லப்பட்ட பின் சங்கிலியனின் நெருங்கிய உறவினர்கள் போர்த்துக்கீசரால் கைது செய்யப்பட்டு கோவாவிற்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார்கள் என்றும் கைது செய்யப்பட்ட சில பெண்கள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளாக கோவாவில் செயற்பட்டார்கள் எனவும் தான் நான் அறிந்த யாழ்ப்பாண வரலாறு.

கோவா அப்போது போர்த்துக்கீசரின் ஆட்சியின் கீழ் இருந்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

யாழ்ப்பாண மன்னர்கள் தங்களின் பெயரோடு "ஆரியச்சக்கரவர்த்தி" எனும் சொல்லையும் சேர்த்துக் கொண்டனர். யாழ்ப்பாண அரசின், அதாவது இந்த "ஆரியச்சக்கரவர்தி" வம்சத்தின் வாரிசுகள் தாங்கள்தான் என ஒரு இணையத்தளத்தில் உரிமை கொண்டாடுகிறார்கள் சிலர். இதில் எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியாது.

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்[The Official Website of The Royal Family of Jaffna ] என அதன் முகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Remigius Kanagarajah என்பவர்தானாம் இப்போது இளவரசர் எனவும் அத்தளத்தில் குறிப்பிடப்பட்டுளது.

இவர்கள் இப்போது நெதர்லாந்தில் [The Netherlands ] வசிக்கிறார்களாம்.

தான் ஏன் யாழ்ப்பாண மன்னர்களின் வாரிசு என சொல்கிறேன் என்பதை இப்படிச் சொல்கிறார் திரு. கனகராஜா:

"Although the Kingdom of Jaffna was destroyed by the Portuguese by 1621, it still exists through me, my family and other existing descendants of the Royal Family of Jaffna. The reason I am coming forward now to claim this succession is grounded in the need to prove to the younger generation and the world that there was once a strong Kingdom in Jaffna."
மேலே உள்ள பந்தியின் தமிழாக்கம்.
"1621ம் ஆண்டுக்குள் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட போதிலும், என் மூலமும் எனது குடும்பம், மற்றும் உறவினர்கள் மூலமும் யாழ்ப்பாண இராச்சியம் இன்றும் இருக்கிறது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பலமான இராச்சியம் இருந்தது என்பதை இன்றைய இளம் தலைமுறையினருக்கு நிரூபிக்கவே நான் யாரென்பதைச் சொல்ல முன்வந்தேன்"

தமது முன்னோர் இராமேஸ்வரத்தில் வாழ்ந்த கங்கா வம்சத்தினர் எனவும், பின்னர் அவர்கள் பிராமணர்களுடன் திருமணங்கள் செய்து கொண்டதால் "ஆரியர்" எனும் அடைமொழியைத் தம் பெயரோடு இணைத்துக் கொண்டார்கள் என்றும் சொல்கிறார் கனகராஜா.

சரி, நீங்களும் அந்த இணையத்தளத்தைப் பார்க்க/படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

30 comments:

said...

உங்கள் பார்வைக்கு இப்போ தான் இந்த இணைய தளம் தட்டுபட்டிருக்கா வெற்றி :)

said...

தமிழ் அரச வம்சாவழியினரின் இணையத்தளம் தமிழில் இல்லையே!

முகுந்த்

said...

சந்திரன்,
வாங்கோ, வாங்கோ!!
வணக்கம்.

/* உங்கள் பார்வைக்கு இப்போ தான் இந்த இணைய தளம் தட்டுபட்டிருக்கா வெற்றி :) */

இல்லை சந்திரன். இத் தளத்தை நான் சில வருடங்களுக்கு முன்னரே பார்த்தேன். பார்த்ததில் இருந்து ஓரு ஐயம். தமிழ்மணத்தில் வரலாறுகள் அறிந்தவர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் என் ஐயத்தைத் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப் பதிவு.

நான் ஏற்கனவே இப் பதிவின் முதற் பந்தியில் குறிப்பிட்டுள்ளது போல், சங்கிலியன் கொல்லப்பட்டதும் அவரது நெருங்கிய உறவினர்கள் கோவாவிற்குச் சிறைக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டு அங்கேயே தங்க வைக்கப்பட்டார்கள் என்று தான் நான் வரலாறுகளில் படித்திருக்கிறேன்.

அப்படியாயின் இவர்கள்[இப்போது உரிமை கொண்டாடுபவர்கள்] யார்?
இவர்கள் கடைசி மன்னன் சங்கிலியனுக்கு என்ன முறை? இதை நிரூபிக்க இவர்களிடம் என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?
இவைதான் என் ஐயங்கள்.

said...

/*தமிழ் அரச வம்சாவழியினரின் இணையத்தளம் தமிழில் இல்லையே! */

முகுந்த்,
இவர்கள் உண்மையிலேயே யாழ்ப்பாண மன்னர்களின் வாரிசுகள் தானா என்பதிலேயே எனக்குச் சந்தேகம்...:))

said...

வெற்றி

இந்தத் தளம் பற்றி ஏற்கனவே எனக்கும் அறிமுகம் இருந்தது. ஆனாலும் மீண்டும் தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகமாக இப்பதிவு அமையும்.

said...

கானா பிரபா,
நான் சந்திரனுக்குச் சொல்லியிருந்தது போல், எனக்குள்ள ஐயத்தைத் தீர்க்கத்தான் இப்பதிவு.

ஈழத்தவர்கள் யாராவது தெளிய வைப்பார்கள் என நினைக்கிறேன்.

said...

This should have been another handiwork of the ltte.

said...

Anonymous,
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. ஒருவர் தடக்கி விழுந்தாலும் அது புலிகளின் சதிதான் என்று சொல்வீர்கள் போல :-))

/*This should have been another handiwork of the ltte. */

உங்கள் கருத்தின் படி தமிழீழ விடுதலைப் புலிகளின் வேலை இது என்றால் அவர்கள் அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் என்னவென்று சொல்ல முடியுமா?

said...

உது புழுகு என்பதுதான் எனது கருத்து, இறுதியாக ஆண்ட சங்கிலியன் கோவாவுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கே சிறைவைக்கப்பட்டு பின்னர் கடலில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். அவன் சிறைவைக்கப்பட்ட சிறைக்கூடம் இப்போதும் கோவாவில் இருக்கிறது, இப்போது போனாலும் பார்க்கமுடியும்.
இதுதான் வரலாறு.

said...

போர்த்துகீசு டச்சுக்காரர் கால் கழுவி மதம் மாறிய தொலுக்கு பார்த்த முதலி கூட்டம் நாட்டை விட்டு ஓடிய லூசு கூட்டம் ஒன்று யாழ் அரச பரம்பரை என்று பினாத்துது அவ்வளவு தான்..

said...

i looked at their website and it seems like they are christians. But Jaffna kings were not christians. Plus their website is in English but they dont use the words like Prince or Princess instead they are using Ilavarasan and Ilvarasi. I think they are trying to fool the people. This could be the handy work of Sri Lankan government.

said...

வெற்றி ,

Thanks for sharing!

said...

www.jaffnaroyalfamily.org/news.php?id=76

said...

இது கதையாகவும் இருக்கலாம். இப்படிச் சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பதில் தவறிருக்க முடியாது. சங்கிலியன் போர்ச்சுக்கீசியர்களால் கொடுங்கொலை செய்யப்பட்டதே வரலாறு. குடும்பத்தாரின் நிலை தெரியவில்லை. மதம் மாற்றப்பட்டு அப்படியே அதைப் பின்பற்றியிருக்கலாம். ஆனால் கண்டிப்பாக யாழ் அரசத்தின் ஆண் வாரிசுகளைப் போர்ச்சுக்கீசியர்கள் விட்டு வைத்திருக்க மாட்டார்கள். பெண்கள் கன்னியாஸ்திரிகளாப் போனார்கள் என்றால் வாரிசுகள் பெருகியது எப்படி? பல கேள்விகள் எழுகின்றன. விடைகளைக் கொடுக்காத வரை..இவர்களது பேச்சுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே உண்மை.

said...

இத்தால் அறியத்தருவது யாதெனில்!!!!

கனகராஜா யாழ்ப்பாண அரச வாரிசு எனப் பிரகடனப்படுத்தியிருப்பதை நாம்
கவனத்திலெடுத்திருக்கின்றோம். கி.பி.1615இல் அவருடைய முன்னோர்கள் என்கள் போர்த்துக்கீச படையிடம் போரிட முடியாமல் புறமுதுகு காட்டி ஓடி, பின்னர் எங்களிடம் உயிர்பிச்சை கேட்டார்கள். அது மட்டுமல்ல, அவருடைய பரம்பரையினரும் எங்கள் பரம்பரைக்கு அடிமைத் தொண்டு செய்வதோடு
ஆண்டுத்தோறும் சுமார் 10 00 பொற்காசுகளும் கப்பமாகத் தருவதாக ஒப்புக்கொண்டார்கள். எனவே கனகராஜா ஒரு கோடி பொற்காசுகள் கப்பமாக‌ எங்கள் பரம்பரைக்கு தரவேண்டும் என போர்த்துக்கல் இராஜ பரம்பரை உத்தரவிடுகிறது.


இராஜ பரம்பரை

போர்த்துக்கல்

said...

இத்தால் அறியத்தருவது யாதெனில்!!!!

கனகராஜா யாழ்ப்பாண அரச வாரிசு எனப் பிரகடனப்படுத்தியிருப்பதை நாம்
கவனத்திலெடுத்திருக்கின்றோம். கி.பி.1615இல் அவருடைய முன்னோர்கள் என்கள் போர்த்துக்கீச படையிடம் போரிட முடியாமல் புறமுதுகு காட்டி ஓடி, பின்னர் எங்களிடம் உயிர்பிச்சை கேட்டார்கள். அது மட்டுமல்ல, அவருடைய பரம்பரையினரும் எங்கள் பரம்பரைக்கு அடிமைத் தொண்டு செய்வதோடு
ஆண்டுத்தோறும் சுமார் 10 00 பொற்காசுகளும் கப்பமாகத் தருவதாக ஒப்புக்கொண்டார்கள். எனவே கனகராஜா ஒரு கோடி பொற்காசுகள் கப்பமாக‌ எங்கள் பரம்பரைக்கு தரவேண்டும் என போர்த்துக்கல் இராஜ பரம்பரை உத்தரவிடுகிறது.


இராஜ பரம்பரை

போர்த்துக்கல்

said...

யாழ் அரசன் மட்டுமல்ல அரச பரம்பரையைச் சேர்ந்த அனைவரும் வேரோடு கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை வரலாற்று ஆசிரியர்களின் ஏகோபித்த முடிவு. குதிரைக்கு தீனி போட்டவர்கள், சாணம் அள்ளியவர்கள்,
குடிமையாக இருந்தவர்கள் தவிர வேறு யாரும் இருந்ததாக பதிவுகள் இல்லை. கனகராஜாவின் படங்களும் கருத்துக்களும் போலியானவை.
மேலதிக விபரத்திற்கு‍ பேராசிரியர் சி. பத்மனாதன் மற்றும் பேராசிரியர் இந்திரபாலா எழுதிய யாழ்ப்பாண இராட்சியம் என்ற நூல்களை வாசிக்கவும்.
கொல்வின் ஆர் டி சில்வா எழுதிய History of Ceylon என்ற நூலிலும்,
K. de Silவ எழுதிய நூலிலும் காணலாம்.

வரலாற்று மாணவன்

said...

இதென்னடா இது, மதுரைக்கு வந்த சோதனை!
வாறவையெல்லாம் அனானிகளாய்த்தான் வருகினம்:-))
---------------------------------
Anony#1:

/* உது புழுகு என்பதுதான் எனது கருத்து,*/

அப்பிடித்தான் நானும் நினைக்கிறேன்.

/*அவன் சிறைவைக்கப்பட்ட சிறைக்கூடம் இப்போதும் கோவாவில் இருக்கிறது, இப்போது போனாலும் பார்க்கமுடியும்.*/

உண்மையாகவா? இத் தகவலை நான் இதுவரை அறிந்திருக்கவில்லை.

----------------------------------
Anony#2:

/* போர்த்துகீசு டச்சுக்காரர் கால் கழுவி மதம் மாறிய தொலுக்கு பார்த்த முதலி கூட்டம் நாட்டை விட்டு ஓடிய லூசு கூட்டம் ஒன்று யாழ் அரச பரம்பரை என்று பினாத்துது அவ்வளவு தான்.. */

கவனம் ஐயா, மன்னர் கனகராஜரின் காதில் விழுந்திடப் போகுது.:-))

பிறகு கனகர் என்ன தண்டனை தருவாரோ யார் கண்டது!:-))

---------------------------------
Anony#3:
/* This could be the handy work of Sri Lankan government. */

இதென்ன கொடுமையடாப்பா இது!:-))
உங்களுக்கு முதல் வந்த அன்பர் ஒருவர் இது புலிகளின் வேலை என்று சொல்லியிருந்தார்.

சிறீலங்கா அரசாங்கம் அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இப்படிச் செய்வதால் அவர்களுக்கு என்ன இலாபம்?

உண்மையைச் சொல்லப்போனால் சிங்களக் கடும்போக்காளர்கள், இலங்கையில் தமிழர்களுக்கு என்று ஒரு இராச்சியமே இருந்ததில்லை என சொல்லி வருகிறார்கள். அப்படியிருக்க அவர்கள் ஏன் இப்படிச் செய்யப் போகிறார்கள்?

------------------------------
சிவபாலன்,
நன்றி.

said...

"வெற்றி said...
இதென்னடா இது, மதுரைக்கு வந்த சோதனை!
வாறவையெல்லாம் அனானிகளாய்த்தான் வருகினம்:-))
---------------------------------
Anony#1:

/* உது புழுகு என்பதுதான் எனது கருத்து,*/

அப்பிடித்தான் நானும் நினைக்கிறேன்.

/*அவன் சிறைவைக்கப்பட்ட சிறைக்கூடம் இப்போதும் கோவாவில் இருக்கிறது, இப்போது போனாலும் பார்க்கமுடியும்.*/

உண்மையாகவா? இத் தகவலை நான் இதுவரை அறிந்திருக்கவில்லை."

நான் 1994இல் கோவா போனபோது அந்த சிறைசாலையை பார்த்தேன், படமும் எடுத்தேன்,படத்தை இங்கு போடலாம் அதில் ஒரு சின்ன சிக்கல் எல்லா படத்துக்கு முன்னாலும் எனது மூஞ்சி இருக்கிறது அதுதான் ஹீ...ஹீ.....:-))))

said...

Anony:

/* www.jaffnaroyalfamily.org/news.php?id=76 */

சுட்டிக்கு நன்றி. இந்தப் பத்திரிகை எங்கே இருந்து வெளிவருகிறது?
சும்மா பத்திரிகை மாதிரி வடிவமைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

----------------------------------
இராகவன்,
வாங்கோ!

/* ஆனால் கண்டிப்பாக யாழ் அரசத்தின் ஆண் வாரிசுகளைப் போர்ச்சுக்கீசியர்கள் விட்டு வைத்திருக்க மாட்டார்கள். பெண்கள் கன்னியாஸ்திரிகளாப் போனார்கள் என்றால் வாரிசுகள் பெருகியது எப்படி? பல கேள்விகள் எழுகின்றன. விடைகளைக் கொடுக்காத வரை..இவர்களது பேச்சுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே உண்மை. */

உண்மை. நீங்கள் சொல்வதுதான் என் கருத்தும்.
-------------------------------

Anony:

/* இத்தால் அறியத்தருவது யாதெனில்!!!! */

நன்றி.

--------------------------------

Anony:
/* குதிரைக்கு தீனி போட்டவர்கள், சாணம் அள்ளியவர்கள்,
குடிமையாக இருந்தவர்கள் தவிர வேறு யாரும் இருந்ததாக பதிவுகள் இல்லை. */

உங்கட பின்னூட்டத்தைப் படிச்சு சிரிப்பு அடக்க முடியேல்லை. :-))

/*மேலதிக விபரத்திற்கு‍ பேராசிரியர் சி. பத்மனாதன் மற்றும் பேராசிரியர் இந்திரபாலா எழுதிய யாழ்ப்பாண இராட்சியம் என்ற நூல்களை வாசிக்கவும்.
கொல்வின் ஆர் டி சில்வா எழுதிய History of Ceylon என்ற நூலிலும்,
K. de Silவ எழுதிய நூலிலும் காணலாம். */

தகவல்களுக்கு மிக்க நன்றி.

பேராசிரியர் சில்வாவின் புத்தகம் படித்திருக்கிறேன். அதில் அவர் யாழ்ப்பாண இராச்சியம் பற்றி விரிவாகக் கூறியிருந்ததாக ஞாபகம் இல்லை. நீங்கள் குறிப்பிட்ட அவரின் புத்தகம் என்னிடம் இருக்கிறது. மீண்டும் ஒருக்கால் திருப்பிப் படிக்கிறேன்.

பேராசிரியர் இந்திரபாலா மற்றும் பேராசிரியர் பத்மநாதன் ஆகியோரின் புத்தகங்கள் இதுவரை படிக்கவில்லை.
தகவலுக்கு நன்றி. இந்த வார இறுதியில் நூல்நிலையத்தில் இப் புத்தகங்களை எடுத்துப் படிக்க வேண்டும்.

said...

Many members of the Royal familes change there religion, I dont mind about his religion, most importent thing is that he should be a good Prince who will be able to bring peace for us. I dont think that he his work with the Sri Lanka government, when you see his messages in the news site he his working for the tamils.

said...

Anony,

/* நான் 1994இல் கோவா போனபோது அந்த சிறைசாலையை பார்த்தேன், படமும் எடுத்தேன்,படத்தை இங்கு போடலாம் அதில் ஒரு சின்ன சிக்கல் எல்லா படத்துக்கு முன்னாலும் எனது மூஞ்சி இருக்கிறது அதுதான் ஹீ...ஹீ.....:-)))) */

படத்திலிருந்து உங்களின் படத்தை அகற்றி விட்டுப் படத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே! இப்போது பல வசதிகள்[tools] இருக்கிறதே!

----------------------------
Anony,
/* Many members of the Royal familes change there religion, I dont mind about his religion,*/

இங்கே அவர்களின் மதம் அல்ல விவாதப் பொருள். இவர்கள் உண்மையில் சங்கிலியனின் வாரிசுகளா என்பது தான் எமது பிரச்சனை.

said...

யாழ்ப்பாண ராசாவிற்கு பல சின்ன வீடுகள் இருந்தால், வாரிசுகளும் ஊரெல்லாம் இருந்திருக்கும்.

said...

Anony,
/*யாழ்ப்பாண ராசாவிற்கு பல சின்ன வீடுகள் இருந்தால், வாரிசுகளும் ஊரெல்லாம் இருந்திருக்கும்.*/

கருத்திற்கு நன்றி. அரச வாழ்க்கையில் இது சகஜம் என நினைக்கிறேன்.

ஆனால் யாழ் கடைசி மன்னன் சங்கிலியன் அப்படிச் செய்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் சின்ன வயதிலேயே கொல்லப்பட்டார். அத்துடன், அவரது
ஆட்சிக்காலம் மிகவும் கலகங்கள் நிறைந்ததாக இருந்தது. அதைச் சமாளிக்கவே அவருக்கு நேரம் இருந்திருக்காது என நம்புகிறேன்.

அதாவது போர்த்துக்கீசர் பல தடவைகள் போர் தொடுத்த வண்ணம் இருந்தது. உள்நாட்டில் மதம்மாறியவர்கள் போர்த்துக்கீசருடன் சேர்ந்து அவரை தோற்கடிக்க செயற்பட்டது, குடும்பப்பிரச்சனை என பல சிக்கல்கள் நிறைந்ததாகவே இருந்தது அவரின் ஆட்சிக்காலம்.

எனவே சின்னவீட்டு சுகங்களுக்கெல்லாம் அவருக்கு நேரம் கிடைத்திருக்கும் என நான் நம்பவில்லை.

said...

உவையள் யாழ் ராச பரம்பரையோ எண்டு எனக்குத் தெரியாது. ஆனா .. காரைநகர் பகுதிகளில ஆட்சி புரிந்த வெடியரசனின் வாரிசு நான் என்பதை அறிவித்து கொள்கிறேன். விரைவில் இணையத்தளம் தொடங்குவேன். ஒரு தலைப்பாகையும் வாளும் தேவைப்படுகிறது.

said...

கொழுவி,

/* ஆனா .. காரைநகர் பகுதிகளில ஆட்சி புரிந்த வெடியரசனின் வாரிசு நான் என்பதை அறிவித்து கொள்கிறேன். விரைவில் இணையத்தளம் தொடங்குவேன். ஒரு தலைப்பாகையும் வாளும் தேவைப்படுகிறது. */

ஹி ஹி... நல்ல பகிடி. படிச்சு வாய்விட்டுச் சிரித்தேன். உண்மையாகவே காரைநகரில் இப்படி ஒரு அரசன் இருந்தவரா?

said...

கனகராஜா ஒரு அண்டகாசப் புளுகன் என்பது நெருக்கமாகப் பழகியவர்கள் அனைவருக்கும் தெரியும். நாடகக்காரர்களிடம் வாடகைக்கு வாளூம் தலைப்பாகையும் கிடைத்தால் நீங்களும் மன்னர்கள்தான்.

said...

Anony,

வணக்கம்.

/* கனகராஜா ஒரு அண்டகாசப் புளுகன் என்பது நெருக்கமாகப் பழகியவர்கள் அனைவருக்கும் தெரியும். */

கனகராஜருடன் உங்களுக்கு நேரடிப் பழக்கம் உண்டா? அல்லது அவருடன் நேரடிப் பழக்கம் உள்ளவர்களை உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் அவரைப் பற்றி கொஞ்சம் எடுத்து விடுங்கோவேன். :-))

/*நாடகக்காரர்களிடம் வாடகைக்கு வாளூம் தலைப்பாகையும் கிடைத்தால் நீங்களும் மன்னர்கள்தான். */

:-)))

said...

please leave him alone..
why are we not ready to accept him?
is it because hs ia a tamil?

said...

unfulfilled czkap jackson pursued rory arvo misc sammelan ictthe maxygen tenant
lolikneri havaqatsu