சிங்கள விமானப்படைத் தளம் மீது புலிகளின் வான்படை தாக்குதல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பலாலியில் அமைந்திருக்கும் சிங்கள விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடாத்தியதாகவும் இத் தாக்குதலில் சிங்களப் படைகளுக்குப் பலத்த சேதம் விளைவித்துள்ளதாகவும் புலிகளின் இராணுவப் பேச்சாளார் இளந்திரையன் கூறியுள்ளார்.
இது பற்றி தமிழ்நெற்றில் வந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
கீழுள்ள பந்தி EST 22:15 PM க்கு இணைக்கப்பட்டது.
சிறீலங்கா விமானப்படைப் பேச்சாளர் தளபதி அஜந்தா சில்வா[Capt. Ajantha Silva ] அவர்கள், விடுதலைப்புலிகள் எந்தவொரு விமானத் தாக்குதல்களையும் பலாலி விமானப்படைத்தளம் மீது நடத்தவில்லை என்றும் ஆட்டிலெறிகள் மூலமே அவர்கள் தாக்குதலை நடாத்தியதாகவும் சேத விபரங்கள் இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் அசோசியற் பிறஸ்[The Associated Press] செய்தித் தாபனத்திற்குச் சொல்லியுள்ளார்.
அச் செய்தியைப் படிக்க இங்கேகிளிக் செய்யவும்
இத் தாக்குதல் தொடர்புடைய சில செய்திகள்:
பலாலி இராணுவத் தளம் மீது வான்புலிகள் தாக்குதல்Sri Lanka's Tamil Tigers bomb air base in north
Tamil Tigers 'launch air strike' : BBC
பலாலி சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீது தமிழீழ வான்படை தாக்குதல்
7 comments:
மேலதிக தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா விமானப்படைப் பேச்சாளர் தளபதி அஜந்தா சில்வாவின் புலிகளின் கூற்றை மறுக்கிறார் என றொயிற்ரஸ்[Reuters] செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகளின் தாக்குதலில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அத்துடன் தாம் புலிகளின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து விட்டதாகவும்,புலிகள் விமான மூலம் தாக்குதல் நடத்தவில்லையென்றும், ஆட்டிலெறிகள் மூலமே தாக்குதல்களை நடாத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக புலிகள் பொய் சொல்கிறார்கள் என்கிறது இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு.
ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சிக் காலத்திலேயே இந்த "பயங்கரவாதிகள்" விமானங்களை இலங்கைக்குள் கொண்டு வந்தார்கள் என ரணிலையும் சாடுகிறது இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம்.
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேணும் என்றார்கள் எமது முன்னோர்.
இலங்கை அரசு சிங்கள மக்களுக்கும்,உலகிற்கும் உண்மையை மறைப்பது பல காலமாக நடந்து வருகிறது.
புலிகள் விமான மூலம் தாக்குதல் நடத்தவில்லை என்று சொல்லும் சிங்கள அரசின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தித் தலைப்பைப் பாருங்கள்:
LTTE air attack thwarted; 'No damages to Palali military base'
அதாவது, புலிகளின் விமானத் தாக்குதலை முறியடித்து விட்டோம் என்கிறது அந்தச் செய்தியின் தலைப்பு.
விமானத் தாக்குதல் நடக்கவில்லை என்றால் எப்படி அதை முறியடிக்க முடியும்?
நீங்களும் அச் செய்தியைப் படிக்க
இங்கே கிளிக் செய்யவும்.
thangalathu blog caption miga arumai :) perumaiyagavum irukirathu :) nandru
செளமியா,
நன்றி.
Tamil Tigers in deadly air attack : BBC
நேற்று தமது விமானப் படைத்தளம் மீது புலிகளின் விமானங்கள் தாக்குதல்களை மேற்கொண்டன என சிங்கள அரசு ஒப்புக் கொண்டுள்ளது என BBC இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அச் செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Post a Comment