கனேடியப் பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துக்க்கள்.
இன்று தமிழ்-சிங்கள புத்தாண்டு தினம். இந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்க்கனேடியர்களுக்கு கனடாவின் பிரதமர் மேதகு ஸ் ரீபன் காபர் [Hon. Stephen Harper]அவர்கள் தனது சித்திரைப் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.வாழ்த்துச் செய்தியை பெரிதாக்கி வாசிக்க கீழுள்ள வாழ்த்துச் செய்தியில் கிளிக் செய்யுங்கள்.
படம், தகவல் : தமிழ்க்கனேடியன்
19 comments:
அடடே அருமையான செய்தியப்பா! ஆச்சரியமாக இருக்கிறதே. அவருக்கு மிகவும் நன்றி.
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் வெற்றி.
பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.
தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அருமை!
தீபாவளி, பொங்கல் என்று மட்டும் இல்லாது, மற்ற தமிழ் விழாக்களுக்கும் அரசு சார்பாக வாழ்த்து தெரிவிப்பது என்பது புதிய செய்தி தான்!
தங்கட்கும், குடும்பத்தார் நண்பர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் வெற்றி!
அட ஒன்று கவனித்தீர்களா?
புத்தாண்டின் பெயர் கூட "வெற்றி" தான்.
சர்வஜித் = அனைத்திலும் "வெற்றி"
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் கால்கரி காரர் அவருக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வெற்றி மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கல் வெற்றி
மாசிலா,
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
-----------------------------------
சிவபாலன்,
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
-----------------------------------
ரவிசங்கர்,
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ரவி, உண்மையிலேயே இந்தப் புத்தாண்டுப் பெயரின் விளக்கம் என்னவென்று கேட்க வேண்டும் என்றிருந்தேன். நீங்கள் இங்கு சொன்ன விளக்கமும் சர்வேசனின் பதிவில் கொடுத்த விளக்கமும் படித்துத் தெளிந்தேன். மிக்க நன்றிகள்.
---------------------------------
சந்திரன்,
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
----------------------------------
கல்கேரி சிவா அண்ணா,
வாங்கோ, வாங்கோ!!
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சிவா அண்ணா, நீங்கள் சொல்வது சரி. பிரதமர் உங்கள் ஊரவர்தான். உங்களின் மாநிலம் தானே அவர்களது கோட்டை. உங்கள் மாநிலத்தில் அவர்கள் மண் கவ்வியிருந்தால் ஆட்சியே அமைத்திருக்க முடியாதல்லவா!
----------------------------------
கானா பிரபா,
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஓஹோ! சிங்களருக்கும் இன்று தான் புத்தாண்டா..? நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
அட.. உங்களுக்கு முதலில், என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Bharateeyamodernprince,
வணக்கம். உங்களுக்கும் என் இதயம் கனிந்த [தாமதமான] புத்தாண்டு வாழ்த்துக்கள்.
/* ஓஹோ! சிங்களருக்கும் இன்று தான் புத்தாண்டா..? நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் */
ஆம் பெளத்த சிங்கள மக்களும் இதே தினத்தில்தான் புதுவருடத்தைக் கொண்டாடுகிறார்கள்.
உண்மையில் சிங்களப் பெளத்த மக்களின் வாழ்வு முறைக்கும் சைவத்தமிழர்களின் வாழ்வு முறைக்கும் வேறுபாடுகளைத் தவிர ஒற்றுமைபாடே அதிகம்.
இன்னும் சொல்லப்போனால், புத்த கோயில்களில் மாணிக்கவாசகர் போன்ற சைவத் தொண்டர்கள் மற்றும் பல சைவக் கடவுள்களின் உருவச் சிலைகள் எல்லாம் வைத்துப் பூசிக்கிறார்கள்.
கிரூஷ்ணரின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம்தான் புத்தர் என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள்.
"..உண்மையில் சிங்களப் பெளத்த மக்களின் வாழ்வு முறைக்கும் சைவத்தமிழர்களின் வாழ்வு முறைக்கும் வேறுபாடுகளைத் தவிர ஒற்றுமைபாடே அதிகம்..."
ஒம்...ஒம்மோம்...இப்படி சொல்லி சொல்லியே தமிழரை எமாத்துங்கோ!
எப்ப சிக்கல் வருகுதோ எல்லா சிங்களத்தலைவர்களும் அவையளுக்கு வால் பிடிக்கிற தமிழரும் அதோட எலும்பு நக்கிற கோஷ்டியும் 1972இல இருந்து உதே கதையைத்தான் விடுகிறாங்கள்!!!
உந்த பம்மாத்தை கொஞ்சம் நிப்பாட்டுங்கோ!
Anonymous ஐயா/அம்மணி
வணக்கம். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உங்களின் கருத்துக்களைச் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. எல்லோரும் ஒரே மாதிரிச் சிந்திப்பதில்லை என்ற அடிப்படை யாதார்த்தத்தை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே எல்லோரும் உங்களை மாதிரித்தான் சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
/*ஒம்...ஒம்மோம்...இப்படி சொல்லி சொல்லியே தமிழரை எமாத்துங்கோ! */
கொள்கைத் தெளிவுள்ளவர்கள், சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள் யார் சொல்வதைக் கேட்டும் உடனே முடிவுக்கு வர மாட்டார்கள். உங்களுக்கு சிந்திக்கும் திறன் இருக்குதோ இல்லையோ எம் மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அத் திறன் உண்டு.
எமது போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. நாம் போராடுவது எமது உரிமைகளுக்காக. அதற்காக வரலாறுகளையோ நடைமுறையில் உள்ள யதார்த்தங்களையோ மறைக்கவோ திரிக்கவோ மறுக்கவோ வேண்டிய அவசியம் இல்லை.
/* சிங்களத்தலைவர்களும் அவையளுக்கு வால் பிடிக்கிற தமிழரும் அதோட எலும்பு நக்கிற கோஷ்டியும் 1972இல இருந்து உதே கதையைத்தான் விடுகிறாங்கள்!!!
உந்த பம்மாத்தை கொஞ்சம் நிப்பாட்டுங்கோ! */
ஐயா/அம்மணி,
நீங்கள் வளர்ந்த சூழல், உங்களின் பின்புலம், உங்களின் கல்வித்தகமை, நான் வளர்ந்த சூழல் பின்புலங்களைவிட மாறுபட்டது என்பதை உங்கள் பதிலில் இருந்து உணரக் கூடியதாக உள்ளது.
ஐயா, எனக்குப் பல சிங்கள நண்பர்கள் உண்டு. கடந்த ஞாயிற்றுக் கிழமையும் சிங்கள மக்கள் நடாத்திய புதுவருடக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டேன். நான் பல்கலைக்கழக நாட்களில் இருந்து ஒற்றுமையகத்தான் பழகுகிறோம். பல விடயங்களை, [இலங்கையின் இனப்பிரச்சனையையும்] விவாதிக்கிறோம். எமக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஐயா, ஆள் மட்டும் வளர்ந்தால் போதாது, அறிவும் வளர வேணும்.;-))
"கத்தியைத் தீட்டாதே, உன் புத்தியைத் தீட்டு"
-- தமிழ்ப் திரைப்பாடல்
//ஒற்றுமையகத்தான் பழகுகிறோம். பல விடயங்களை, [இலங்கையின் இனப்பிரச்சனையையும்] விவாதிக்கிறோம். எமக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஐயா, ஆள் மட்டும் வளர்ந்தால் போதாது, அறிவும் வளர வேணும்.;-))
//
வெற்றி, மேற்சொன்ன வார்த்தைகள் உங்கள் மேல் இருந்த மரியாதையை மேலும் உயர்த்திவிட்டது.
எனக்கும் நல்ல இஸ்லாமிய நண்பர்கள் உண்டு கொள்கை அளவில் காரசாரமான விவாதங்கள் புரிவதும் உண்டு. ஆனாலும் நாங்கள் நல்ல நண்பர்களே.
கொள்கைகளை மீறி நம்முள்ளும் மனிதம், நட்பு பாசம் இருப்பதை இவர்கள் ஏன் மறக்கிறார்கள்?
கல்கேரி சிவா அண்ணா,
/* வெற்றி, மேற்சொன்ன வார்த்தைகள் உங்கள் மேல் இருந்த மரியாதையை மேலும் உயர்த்திவிட்டது. */
மிக்க நன்றி.
/* கொள்கைகளை மீறி நம்முள்ளும் மனிதம், நட்பு பாசம் இருப்பதை இவர்கள் ஏன் மறக்கிறார்கள்? */
போதிய உலக அனுபவம் இல்லாமை, அறிவு முதிர்ச்சி இல்லாமை, போதிய கல்வியறிவு இல்லாமை, குறுகிய மனப்பாண்மை உள்ள சமூகங்களில் வாழ்வதால், வளர்ப்பு முறை, பல விடயங்களையும் பல கோணங்களிலும் அலசி ஆராயும் திறன் இல்லாமை, கொள்கைத் தெளிவு இல்லாமை... இப்படிப் பல காரணங்கள் இருக்கும் என நான் நினைக்கிறேன்.
தாங்கள் சிந்திப்பது போலவே மற்றவர்களும் சிந்திக்க வேண்டும், பேச வேண்டும் என நினைக்கிறார்கள். இல்லையேல் அவன், இவன் என்று முத்திரை குத்துவது.
உண்மையில் இவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டியுள்ளது.
அண்மையில் செல்வராஜ் அண்ணர் தனது பதிவில் மிகவும் அழகாகச் சொல்லியிருந்தார்:
"கேள்வி கேட்பதோ, எதிர்த்துக் கருத்துக்கள் வைப்பதோ துரோகம், தீவிரவாதத்தனம், பாவம், என்ற புரட்டுரைகள் மதியை மயக்க வரும்போது அவ்வூர் இவ்வூர் எவ்வூராயினும் எம்மக்களுக்கு இந்த முருகன் ஒரு தெளிவைக் கொடுக்கட்டும். "
இவர்களுக்கு இறைவன் ஒரு தெளிவைக் கொடுக்கட்டும் ...
வெற்றி அண்ணை/அம்மா,
கல்கரி சிவா அண்ணை,
எல்லாம் கேட்க இனிப்பாகத்தான் இருக்கிறது. கவிதையில் எல்லாம் கனிவாயிருக்கும். எங்களுக்கும் இந்த சகோதரத்துவம், எம்மதமும் சம்மதம், மற்றது எமது போராட்டம் 'சிங்களவர்களுக்கு எதிரானதல்ல' போன்ற கதைகள் கதைக்க விருப்பம். அப்படி 1980 களில் முயற்சியும் பண்ணிப்பார்த்து களைத்துபோனோம். அதால தான் உதில எல்லாம் நம்பிக்கை போச்சுது அண்ணைமார் அம்மா அம்மணி மார்!!!!!
Anonymous,
முதலில் உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
/*எங்களுக்கும் ...களைத்துபோனோம்.*/
இங்கே எங்களுக்கும் என்று யாரைச் சுட்டுகிறீர்கள்? உங்களின் பதிலைப் பார்த்தால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களைப் பிரதிநிதிப்படுத்துவது போல் பன்மையில் சொல்கிறீர்கள், அதனால் தான் கேட்கிறேன். :-))
நிற்க. ஒவ்வொருவரும் தமது அனுபவங்களின் அடிப்படையில் முடிவுக்கு வருவது இயல்பு. எனவே உங்களின் அனுபவம் இப்படியான ஒரு முடிவுக்கு வரக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் எனது அனுபவம் அப்படி ஒரு முடிவுக்கு வர விடாது.
சிங்கள ஆட்சியாளர்கள் வேறு[Ruling class]. சிங்கள மக்கள் வேறு. சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்கள ஆட்சியாளர்களாலும், புத்த பிக்குகளினாலும் மூளைச்சலைவை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
உண்மையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சிங்கள மக்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஒரு சிங்களப் பேராசிரியர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்த போது அவர் சொன்னார், தான் இலங்கையில் படித்த காலத்தில் தான் படித்த இலங்கையின் வரலாறு வேறு எனவும் இப்போது பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாறு வேறு எனவும் சொன்னார்.
தற்போதுள்ள வரலாறு வெளியிடும் அச்சகங்கள் இனவெறி பிடித்த புத்த குருமாராரினதும் பதவி வெறிபிடித்த அரசியல்வாதிகளின் ஆதிக்கத்திலும் இருப்பதாகச் சொன்னார்.
எனவே சிங்கள அறிவுஜீவிகள் முதலில் செய்ய வேண்டிய செயல், மகாவமிசம் அப்பிடி இப்பிடி எனும் புனைகதைகளாலும் , திரிக்கப்பட்ட வரலாறுகளாலும் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள சிங்கள மக்களை விழிப்படையச் செய்ய வேணும் எனச் சொன்னார். அவர் இதுபற்றி மிகவும் வருத்தப்பட்டார்.
இப்போதுகூட வடக்கு, கிழக்கில் நடக்கும் உண்மையான சம்பவங்கள் சிங்கள மக்களுக்குச் சொல்லப்படுவதில்லை.
அன்றிருந்த எம் தலைவர்கள் விட்ட பிழைகளில் ஒன்று, அப்போதிருந்த சிங்கள முற்போக்குவாதிகளுடன் இணைந்து சிங்கள மக்களுக்குத் தமிழ்மக்களின் நியாயமான அபிலாசைகளை எடுத்துச் சொல்லாதது[reach out].
மலையக மக்களின் பிராஜாவுரிமை பறிப்புப் பிரேரணை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்த போது ஆதரவாக G.G.பொன்னம்பலமும் இன்னும் சில தமிழ் நா.உ க்களும் வாக்களித்தனர். அதேநேரம், பல சிங்கள உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 22 பேர் அடங்கிய புத்த பிக்குகள் இச் சட்டமூலத்தை அமுல்படுத்த வேண்டாம் என பிரதமரைக் கேட்டுக் கொண்டனர்.
நான் என்ன சொல்ல வரூகிறேன் என்றால் ஈழத்தில் எம்மினத்தின் இன்றைய அவலநிலைக்கு சிங்கள மக்களை மட்டுமோ அல்லது அவர்களின் தலைவர்களை மட்டுமோ குறை சொல்ல முடியாது.
எமது தலைவர்களின் பதவி ஆசை, தொலைநோக்குப் பார்வையின்மை, நடைமுறைக்குச் சாத்தியமாகச் சிந்திக்கத் தெரியாதது, சிங்கள முற்போக்குவாதிகளுடன் இணைந்து சிங்கள மக்களை reach out பண்ணாதது ஆகிய காரணங்களும் எமது இன்றைய அவலநிலைக்குச் சில காரணங்கள்.
எரித்திரியா எப்படி விடுதலை அடைந்தது என்பதைச் சற்றுத் திரும்பிப் பாருங்கள்.
எமது அன்றைய தலைவர்கள் விட்ட வரலாற்றுப் பிழைகளை விரைவில் ஒரு பதிவாகப் போடுகிறேன்.
எங்களுக்கு என்று எங்களைத்தான் சொல்லுகிறேன். எனக்கு உங்களைப்போல 'விரிவான மக்கள் கூட்டத்தை' பிரதி நிதித்துவப்படுத்தத் தெரியாது :-((((
இந்த அனுப அடிப்படை முடிவு என்பது நல்ல தப்பியோடல் கதை. இப்படித்தான் எனது நண்பரொருவர் சொன்னார் மச்சான் சிங்களவனை உனக்குத்தெரியாது அவனோட ஒரு ட்ரிங்க் அடிச்சுப்பார் எவ்வளவு நல்லவனெண்டு தெரியும் என்று. நான் அவருக்கு ஞாபகப்படுத்தினேன் நீதானே சொன்னாய் உனனுடன் சேர்ந்து ட்ரிங்க் அடிச்சவன் தான் உன்னை மட்டும் விட்டிட்டு (மன்னிச்சு???:-))) 1983இல் உனது தோழர்களை வெட்ட வெளிக்கிட்டவன் என்று!
எல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கும்.
சிங்கள ஆட்சியாளர்கள் வேறு[Ruling class]. சிங்கள மக்கள் வேறு என்பது எனக்குத்தெரியாது என ஏன் நினைக்கிறீர்கள். சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்கள ஆட்சியாளர்களாலும், புத்த பிக்குகளினாலும் மூளைச்சலைவை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதில் இருந்து ஏன் வெளிவரமுடியவில்லை (மறுக்கிறார்கள்??) தமிழ் இனமே இவ்வளவு இழப்புக்களின் பின்னரும் இந்த மூளைச்சலவை மன்னிப்பை ஏற்கவேண்டுமா? இதையே இஸ்ரேலின் அடாவடி பற்றி பாலஸ்தீனியர்களுக்குச் சொன்னால் ஏற்பீர்களா. அவர்களாவது வெறும் 50 வருடங்களின் முன்னான கிட்லரின் அழித்தொழிப்பில் இருந்து மீண்டவர்கள் மன்னிக்கலாம். ஆனால் சிங்களவர்கள் ஏன் 2500 வருட நினைவை கட்டிப்பிடித்து அழுகிறார்கள்???
இப்போது பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாறு வேறென்றால் அதை ஏன் உங்களிடம் இரகசியமாக சொன்னார். ஏன் பகிரங்கமாக சொல்லத்தயங்குகிறார்?
தற்போதுள்ள வரலாறு வெளியிடும் அச்சகங்கள் இனவெறி பிடித்த புத்த குருமாராரினதும் பதவி வெறிபிடித்த அரசியல்வாதிகளின் ஆதிக்கத்திலும் இருப்பதாகச் சொன்னதை எண்ணி புல்லரிக்கிறது. எங்கள் நிலமை பாருங்கள் அச்சகங்கள் கூட சரித்திரம் எழுதும் நிலைக்கு சிங்கள மக்கள் 'மூளைச்சலவை' செய்யப்பட்டுள்ளார்கள் :-)))))))
"... சிங்கள மக்களை விழிப்படையச் செய்ய வேணும் எனச் சொன்னார். அவர் இதுபற்றி மிகவும் வருத்தப்பட்டார்..."
அவ்வளவுதானா? தான் அதற்காகப் போராடுவேன் எனச்சொல்லவில்லையா?
எனது விரிவுரையாளரோ இராக் போரின்போது வோஷிங்ரன் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டது மட்டுமல்லாது தெடர்ச்சியாக இந்த அநீதியான போரையும் அதன் சூத்திரதாரியான தனது அமெரிக்க அரசையும் கண்டித்துக்கொண்டே இருக்கிறார்.
எனது சக தொழிலாளியோ 9/11 இன்போது என்னிடம் வந்து உனக்கு எவராவது வாய்மொழி அச்சுறுத்தல் விட்டால் கூட தன்னை அழைக்குமாறும் தேவை எற்படின் உள்ளூர் காவல் துறையுடன் பேசுவதாகவும் கூறினார்!
"...இப்போதுகூட வடக்கு, கிழக்கில் நடக்கும் உண்மையான சம்பவங்கள் சிங்கள மக்களுக்குச் சொல்லப்படுவதில்லை. ..."
எவ்வளவு நாளுக்குத்தான் உதுக்குப் பின்னால் ஒளிக்கிறது. ஏன் 100,000 பேர் செத்த்தார்கள் என்று ஒருமுறை யோசித்தாலே போதும் 'மூளைச்சலவை' நீங்கிவிடுமல்லவா? 1970 களில் ஜேவீபி கிளர்ச்சிபோதே நாம் அரசு ஏதோ ஒளிக்கிறது என உணர்ந்து கொண்டோம். ஒருபோதும் எமக்கு தெற்கில் என்ன நடக்கிறது என தெரியாது என தட்டிக்கழிக்கவில்லை!!!!
"...அன்றிருந்த எம் தலைவர்கள் விட்ட பிழைகளில் ஒன்று, அப்போதிருந்த சிங்கள முற்போக்குவாதிகளுடன் இணைந்து சிங்கள மக்களுக்குத் தமிழ்மக்களின் நியாயமான அபிலாசைகளை எடுத்துச் சொல்லாதது[reach out]...."
அப்படியா? கொல்வின் ஆர் டி சில்வாவின் 'ஒரே நாடு இரு மொழி அல்லது இரு நாடு ஒரு மொழி' பேச்சும் தொடர்ந்த துரோகமும் மறந்து விட்டதா? அது மட்டுமல்ல 1972 அரசியலமைப்பில் 'பெளத்த மதத்துக்கு முன்னுரிமை மொழிந்த முற்போக்கு வாதி அல்லவா அவர்.
"...22 பேர் அடங்கிய புத்த பிக்குகள் இச் சட்டமூலத்தை அமுல்படுத்த வேண்டாம் என பிரதமரைக் கேட்டுக் கொண்டனர்..."
Budhism Betrayed வாசிக்கவில்லையா? கிடைத்தால் வாசியுங்கள். யார்கண்டார்கள் ஸ்ரீலங்காவில் தடை செய்தாலும் செய்திருப்பார்கள்!!!
"...நான் என்ன சொல்ல வரூகிறேன் என்றால் ஈழத்தில் எம்மினத்தின் இன்றைய அவலநிலைக்கு சிங்கள மக்களை மட்டுமோ அல்லது அவர்களின் தலைவர்களை மட்டுமோ குறை சொல்ல முடியாது...."
அதற்க்காக தொடர்ந்தும் சுயகுற்ற்ம் சுமத்தியும் சுயபச்சாதாபம் சொல்லியும் (Self-accucation and self-pitty) காலம் கழிக்க முடியாது!
".., நடைமுறைக்குச் சாத்தியமாகச் சிந்திக்கத் தெரியாதது.."
எந்த நடை முறை பற்றி சொல்கிறீர்கள்? அப்படியாயின் 'மூளச்சலவை' செய்யப்பட்டவர்களின் 'நடைமுறையை' அனுசரித்துப்போக வேண்டுமென்கிறீர்களா?
"... சிங்கள முற்போக்குவாதிகளுடன் இணைந்து சிங்கள மக்களை reach out பண்ணாதது ஆகிய காரணங்களும் எமது இன்றைய அவலநிலைக்குச் சில காரணங்கள். ..."
:-( ,:-), :-(, :-)...
வெற்றி,
இன்னுமொரு விடயம் மறந்துவிட்டேன்.
"....சிங்கள மக்களை விழிப்படையச் செய்ய வேணும் எனச் சொன்னார். அவர் இதுபற்றி மிகவும் வருத்தப்பட்டார்...."
இப்படித்தான் ஒரு சிங்கள நண்பரும் எம்மிடையே இருக்கும்போது சொல்வார். ஆனால் 9/11 இன் போது நடந்த 'பயங்கரவாததுக்கு எதிரான போரில்' தமக்கு (ஸ்ரீலங்காவுக்கு) ஆதாயம் தேடி கொடிபிடித்தபோது உண்மை சொரூபம் வெளிவந்து விட்டது! அவர் பிடித்திருந்த பாதாகையில் 'அமெரிக்காவே உனது வேதனையை நாம் புரிந்து கொள்கிறோம் ஏனெனில் நாமும் அதை அனுபவித்தவர்கள் தான்' என இருந்தது!!!!
Anonymous,
உங்களின் நீண்ட பின்னூடத்திற்கு நன்றி.
இந்த வார இறுதியில் என் கருத்தைச் சொல்கிறேன்.
/* Budhism Betrayed வாசிக்கவில்லையா? **/
பேராசிரியர் ஸ்ரான்லி தம்பையா [Stanley Tambiah ] அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்தைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இப் புத்தகத்தை இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் இப் புத்தகத்தை எழுதியவரைத் தனிப்பட்ட முறையில் தெரியும். பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் அவர்களின் மிக நெருங்கிய நண்பர்.
கடந்த முறை சந்தித்த போது தமது நட்பைப்பற்றியும் பல பழைய சுவாரசியமான தகவல்களையும்
சொன்னார். சிங்கள மக்கள் பற்றி நான் சொன்ன நிலைப்பாடு உடையவர் தான் அவர் என நான் நம்புகிறேன்.நான் அவருடைய பேச்சாளன் அல்ல. எனவே அவரின் உண்மையான நிலைப்பாடு எனக்குத் தெரியாது. எதற்கும் அவரின் புத்தகத்தை வாசித்த பின் கருத்துச் சொல்கிறேன்.
/* நீதானே சொன்னாய் உனனுடன் சேர்ந்து ட்ரிங்க் அடிச்சவன் தான் உன்னை மட்டும் விட்டிட்டு (மன்னிச்சு???:-))) 1983இல் உனது தோழர்களை வெட்ட வெளிக்கிட்டவன் என்று! */
ஆக உங்கள் நண்பரின் சிங்கள நண்பன் அப்படிச் செய்ததால் எல்லாச் சிங்களவர்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்று முடிவுக்கு வந்து விட்டீர்கள், இல்லையா?! பலே!
1983ம் ஆண்டு கொழும்பில் நடந்த தமிழினப் படுகொலையின் போது எனது சகோதரரைச் சிங்களக் காடையர்களிடமிருந்து தமது வீட்டிற்குள் மறைத்து வைத்துக் காப்பாற்றியவர்களும் சிங்களவர்கள் தான். இப்படி பல தமிழர்களுக்கு உதவி செய்த சிங்கள மக்கள் பலர் இருக்கிறார்கள். ஒரு இனத்தில் ஒரு குறிப்பிட்டவர்கள் செய்யும் செயலை வைத்து முழு இனத்தையும் மதிப்பிட்டால், எமது போராட்டத்திற்கு எதிராகச் செயற்படும் டக்கிளசு தேவானந்தா, கருணா குழு போன்றவர்களும் தமிழர்கள் தான். கருணா குழு துரோகக் குழு, தமிழ்மக்களின் பிரதிநிதிகள் இல்லையெனும் நீங்கள், இனவெறி பிடித்த சிங்களவரையும் மற்றைய சிங்கள மக்களையும் வேறுபடுத்திப் பார்க்க மறுப்பது ஏன்? இனவெறி பிடித்த சிங்களவர்களால் அப்பாவிச் சிங்கள மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டது போல் நீங்களும் மூளைச் சலவை செய்யப்பட்டீருக்கிறீகள் போல :-))
ஆக, அவர்களை[கருனா குழு, தேவானந்தா] வைத்து ஒட்டு மொத்தத் தமிழினமே எமது போராட்டத்திற்கு எதிரானது என்று சொல்ல முடியுமா?
நல்லவேளை. தலைவர் பிரபாகரன் நீங்கள் சிந்திப்பது போல சிந்திக்கவில்லை. சிங்கள மக்களுக்கு எமது பக்க நியாயங்கள், வட கிழக்கில் நடக்கும் சம்பவங்களைத் தெரியப்படுத்த வேணும் என்ற எண்ணத்தில் தான் புலிகளின் குரல் வானொலி சிங்களத்திலும் ஒலிபரப்புச் சேவையை நடாத்துகிறார்கள்.
மிகுதி இவ் வார இறுதியில்!
நன்றி.
Anonymous,
Oh...இன்னுமொரு விடயத்தைச் சொல்ல மறந்து விட்டேன்.
/* Budhism Betrayed வாசிக்கவில்லையா? */
இப் புத்தகத்திற்கு முன்னுரை [Foreword] எழுதியவரே ஒரு சிங்களக் கல்விமான் தான். Lal Jayawardena அவர்கள்.
இப் புத்தகத்திலும் நான் சொன்ன விடயத்தைத் தான் பேராசிரியர் தம்பிராஜா அவர்களும் சொல்கிறார்.
இணையத்தில் அப் புத்தகம் பற்றி எடுத்த சுருக்கம் கீழே:
"This volume seeks to answer the question of how the Buddhist monks in today's Sri Lanka—given Buddhism's traditionally nonviolent philosophy—are able to participate in the fierce political violence of the Sinhalese against the Tamils."
Post a Comment