Wednesday, May 02, 2007

அனைத்துத் தமிழர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ

இந்த விவரணப்படம்[Documentary] BBC யில் ஒளிபரப்பானது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் இந்த விவரணப்படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும் எனும் நோக்கிலேயே இங்கே பதிவாகப் போடுகிறேன்.

இந்த விவரணப்படம் இலங்கை பற்றிய வரலாறு. குறிப்பாக தமிழ்-சிங்கள உறவு எப்படிச் சீரழிந்தது என்பதைச் சொல்கிறது இந்த விவரணப்படம்.

நீங்கள் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவானவரோ, எதிரானவரோ அல்லது ஈழப்போராட்டம் பற்றி அக்கறை இல்லாதவரோ யாராக இருப்பினும் இவ் விவரணப்படத்தைக் கட்டாயம் பாருங்கள். ஈழப் போராட்டம் பற்றிய சில வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ள இந்த விவரணப்படம் உதவும் என நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.

இவ் விவரணப்படம் இனப்பிரச்சனை பற்றி முழு விபரங்களைத் தராவிடினும் சில அடிப்படைத் தகவல்களைத் தருகிறது.

உங்களின் அறிவுப் பசிக்கு ஒரு தீனி இந்த விவரணப்படம்.

மிக்க நன்றி.


பாகம்-1
பாகம்-2
பாகம்-3
பாகம்-4

இன்னும் தொடரும்...

17 comments:

said...

Thanks. looking forward to remaining parts.

said...

Anonymous,

Thanks.

said...

Its said that Srilanka is predominantly a sinhala buddhist state before British and Tamils came in large numbers only for tea plantations. But this is not true.

said...

nantri

said...

Anonymous
/* Its said that Srilanka is predominantly a sinhala buddhist state before British ...But this is not true. */

First of all, thank you so much for your comment.

In the opening statement of the documentary, the narrator claimed: “Sri Lanka, before the British, a sacred Buddhist Kingdom”. Indeed, as you pointed out that’s not true. Before the Europeans came to the island, Tamils had their own kingdom for centuries. Before the British set their foot on the island, the Tamils’ homeland was governed as a separate administrative unit by the Portuguese and the Dutch. The majority of the inhabitants were Saivates [Saiva samayam] in the Tamil areas. I don’t know how anyone could claim that the whole island was a Buddhist Kingdom.

Even the Kandyan Kingdom was ruled by a Tamil king, who was a Saivate, at the time of the British arrival. Even the British governed the Tamil areas as a separate administrative unit until 1833.

Perhaps the people who made this documentary had a lack of knowledge of the pre-independence history of Ceylon or might have been misled by the Sinhala myths.

said...

Anonymous,

/* ...Tamils came in large numbers only for tea plantations... But this is not true. */

Please correct me if I am wrong. I have watched these video clips many times. I don’t think anyone had said what you claimed[above], anywhere in the documentary.

In the documentary, it says, “To work the plantations, a million Tamil laborers were imported from India, altering the ethnic balance”. In fact, this is true. There is no question about that.

It might be misleading and cause confusion to those who have little knowledge or no knowledge of Ceylon’s history. It might mislead some to believe that the entire Tamil race was brought to the island by the British from Tamil Nadu, only after the British came to the island.

But throughout the documentary aboriginal Tamils were referred to as Sri Lankan Tamils and Tamils brought by the British were referred to as Indian Tamils. In fact, these are the terms generally used to distinguish the two groups of Tamils in Ceylon.

The fact of the matter is that the British did bring thousands of Tamils from Tamil Nadu to work in the plantations. Indeed, it did alter the ethnic balance in Ceylon. Tamil population in Ceylon rose to 26% of the total population under the British rule. It enabled the Tamils to gain many seats in the parliament.

That’s why the first government of independent Ceylon, under D.S. Senanayake, brought the law to strip the Indian Tamils of their citizenship, in order to reduce the strength of the Tamils.

Ironically, prominent Tamil leaders like G.G.Ponnambalam and Suntharalingam voted in favor of this bill. But S.J.V. Chelvanayagam [“Thanthai” Chelva] and other Tamil legislators along with Communist Party members, such as Dr. N.M. Perera, voted against this bill.

Since the Tamil Congress leader G.G. Ponnambalam voted in favor of this bill [the Indian Act], S.J.V. Chelvanayagam quit from the Tamil Congress and formed the Federal Party [Ilankai Tamil Arasu Kadchi]. But diehard Tamil Congress members dispute this version. They claim that Chelvanayagam quit the Tamil Congress over a ministerial post dispute with G.G.Ponnambalam.

I don’t believe the latter version. S.J.V. Chelvanayagam was consistent and very committed to the Tamil cause.

----------------------------------
I have a difference of opinion with some of the comments made by a few of the commentators in the documentary. I will express my views later on.

said...

சந்திரவதனா அக்கா,

/* nantri */

"நன்றிக்கு" நன்றி.

said...

/* BBC ஆவணப் படம் பார்த்தேன். மிக்க நன்றி. ராஜீவ் காந்தியை இலங்கை இராணுவவீரர் தாக்கியதோடு நிறுத்தி விட்டீர்கள் :-) */

குப்புசாமி செல்லமுத்து,
முழுவதையும் ஒரே பதிவில் போட்டால் மிகவும் நீண்டு விடும் என்பதால் மிகுதியைப் போடவில்லை.
விரைவில் மிச்சப் பாகங்களையும் இணைக்கிறேன்.

said...

வெற்றி. நான் சொன்னதில் உள்ளர்த்தம் இருந்தாலும், காயப்படுத்தும் நோக்கம் ஏதுமில்லை. உங்களுக்கு அது புரிந்திருக்கும்.

said...

குப்புசாமி செல்லமுத்து,

/* நான் சொன்னதில் உள்ளர்த்தம் இருந்தாலும், காயப்படுத்தும் நோக்கம் ஏதுமில்லை. உங்களுக்கு அது புரிந்திருக்கும். */

உங்களை நான் அறிவேன். இதில் எந்த வருத்தமும் இல்லை. :-) "எதையும் தாங்கும் இதயம்" உண்டு.:-))

said...

தெரியாத பல தகவல்கள்!

விவரணப்படத்திற்கு மிக்க நன்றி, வெற்றி!

said...

தென்றல்,
மிக்க நன்றி.

/* தெரியாத பல தகவல்கள்!*/

உண்மை. இதுதான் என் நோக்கமும். அறிந்திராத பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் அறிய வேணும் என்பதற்காகத்தான் இப் பதிவு.

said...

பார்த்தேன் வெற்றி. நல்லதொரு பதிவு. நல்லதொரு தொகுப்பு. அடுத்த பாகங்களையும் காணக் காத்திருக்கிறேன். இலங்கையில் அமைதி தவழ்ந்து, ஈழத்தமிழர் பீடு வாழும் நாளை விரும்பிக் காத்திருக்கிறேன். அந்த நாள் விரைவில் வரும். கண்டிப்பாக வரும்.

said...

அவசியமான பதிவு..பலருக்குத் தெரிந்திருக்காத விடயங்கள் எல்லாம் சொல்கிறார்கள் மிகுதியையும் போடுங்கள் வெற்றி.

said...

ஈழமும், தமிழும், சைவமும், தேயிலைத்தமிழர்கள் வருகைக்கு முன்னரே இருந்து வந்தது என்பது ஆணித்தரமான உண்மை.

தமிழர்களிலேயே இரு பிரிவுகள் அங்கு இருப்பதே இதற்கு சான்று.

எங்கும் நடப்பது போல், 'வல்லான் வகுத்ததே வாழ்வு' எனும் கொடுமையான கோட்பாட்டுக்கு ஈழமும் பலியானதுதான் சோகம்.

பிரித்தாளும் சூழ்ச்சி மீண்டும் வென்றது.

ஆனால், தருமம் மறுபடி வெல்லும்.

கவலை வேண்டாம்.

முருகனருள் முன்னிற்கும்.

said...

இராகவன்,
வணக்கம்.

/* நல்லதொரு பதிவு. நல்லதொரு தொகுப்பு.*/

BBC க்குத் தான் நன்றி சொல்ல வேணும்.

/*அடுத்த பாகங்களையும் காணக் காத்திருக்கிறேன்.*/

விரைவில் மிகுதிப் பகுதிகளையும் இணைக்கிறேன்.

/* இலங்கையில் அமைதி தவழ்ந்து, ஈழத்தமிழர் பீடு வாழும் நாளை விரும்பிக் காத்திருக்கிறேன். அந்த நாள் விரைவில் வரும். கண்டிப்பாக வரும்.*/

இலங்கையில் அமைதி திரும்பவேண்டுமாயின் சிங்கள அரசியல்வாதிகள் இனவாதம் என்ற வட்டத்திற்குள் இருந்து வெளிவந்து புதிய சிந்தனைகள்/திட்டங்களுடன் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தீர்வுத் திட்டத்தை முன் வைத்து பிரச்சனையைத் தீர்க்க முன்வர வேணும்.

சிங்களத் தலைவர்கள் இனவாத புத்த பிக்குகள் போன்றோரின் அழுத்தங்களுக்கு அடிபணியாது துணிந்து தமிழ்மக்களின் பிரச்சனையை அணுக வேணும். அப்போது தான் பிரச்சனை தீரும். அப்படியான எந்த ஒரு சிங்களத் தலைவரும் இப்போது இலங்கையில் இல்லை என்பது வருத்தமான செய்தி. நேரு போன்ற தலைவர்கள் இலங்கையில் தோன்றாதது இலங்கையின் சாபக்கேடு போலும்.

புலிகளை ஒழிக்க/அழிக்க சிங்கள அரசு விரும்பினால், முதலில் செய்ய வேண்டியது இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி தமிழர்கள் இலங்கையில் சுயகெளரவமாக வாழக்கூடிய, தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை முன்வைத்து பிரச்சனையைத் தீர்க்க வேணும். அச் சந்தர்ப்பத்தில் தமிழர்கள் புலிகளுக்கு வழங்கும் ஆதரவை மறுபரிசீலனை செய்வர்.

மாறாக தமிழ்மக்களைக் கொன்று குவிப்பதன் மூலம் அவர்கள் தமிழ்மக்களைப் புலிகளிடமிருந்து பிரிக்க முடியாது. தமிழ்மக்களை புலிகள் பக்கம் வலுக்கட்டாயமாக தள்ளுவதாகவே முடியும்.

ஆக, இனவாத சிங்கள வெறியர்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாத, தொலைநோக்குப் பார்வையுள்ள சிங்கள தலைமை எப்போ உருவாகுதோ, அப்போதுதான் இப்பிரச்சனை இரத்தமின்றித் தீர்க்கப்படும். இதுவரை இலங்கையில் இப்படியான சிங்களத் தலைவர்கள் இருந்ததில்லை. தற்போதும் இல்லை. இனி வருவார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

said...

சிநேகிதி,
நன்றி.

----------$$$$$---------------
VSK ஐயா,
மிக்க நன்றி.

/* தருமம் மறுபடி வெல்லும். */
உண்மை. அண்மையில் மகாபாரதம் பற்றிய ஒரு சுருக்கமான நூலை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மகாபாரதத்தை வாசித்தபோது, ஈழப்போராட்டத்திற்கும், பஞ்ச பாண்டவர்களின் போராட்டக் கதைக்கும் நிறைய ஒற்றுமைப் பாடுகளைக் காணக் கூடியதாக இருந்தது.

எடுத்துக்காட்டாக, பாண்டவர்கள் ஆளுக்கு ஒரு ஊராவது தரும் வண்ணம் துரியோதனனிடம் கேட்டார்கள். அதுபோலத் தான் ஈழத்திலும் கொழும்பில் தனக்கு என சிங்களத்தலைவர்களால் உறுதியளிக்கப்பட்ட நாடாளுமன்னறத் தொகுதியைத்தான் முதலில் சேர்.பொன்.அருனாசலம் அவர்கள் கேட்டார்கள். துரியோதனன் போலவே சிங்களத் தலைவர்களும் மறுத்தார்கள்.

ஆட்பலத்திலும் துரியோதனன் போலவே சிங்களதரப்பு அதிக ஆட்பலம் கொண்டது.

பாண்டவர்கள் வனவாசம் சென்றது போலவே இப்போது பல தமிழர்கள் பிறந்த மண்ணை விட்டு பிறநாடுகளில் "வனவாசம்" செய்கிறார்கள்.

நீதி எங்கும் பல போராட்டங்களின் பின்னும் துன்பங்களின் பின்னும் தான் கிடைத்து என்பதை தமிழர்களின் குலதெய்வம் முருகன் சூரனை அடக்கிய கதையிலும் மற்றும் நீதிக் கதைகளிலும் அறிகிறோம்.

ஈழத்திலும் அது நீதி ஓங்கி அமைதி தவளும் என நம்புவோம்.