Tuesday, October 23, 2007

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல : ஹிலறி கிளின்ரன் [Hillary Clinton]

இன்று வெளிவந்த [ஐப்பசி 23, 2007] லண்டன் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் போன்ற விடுதலைப் போராட்ட அமைப்புக்களுக்கும் அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புகளுக்கும் வேறுபாடுகள் உண்டு எனவும் அவர்களின் நோக்கங்கள் வேறுபட்டவை எனவும் திருமதி.ஹிலறி கிளின்ரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலம் காலமாக பல விடுதலை அமைப்புக்கள் தமது இலக்கை அடைவதற்கு சில பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது வரலாறு என்றும் இருப்பினும் அவை பயங்கரவாத அமைப்புக்களாக கருத முடியாது எனவும் தெரிவித்தார். அடக்கு முறைகளை எதிர்த்துப் போராடும் போராட்ட அமைப்புக்களையும், அடிப்படைவாத அமைப்புக்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"நான் என்ன நினைக்கிறேன் என்றால், நாம் அமெரிக்கர்கள் விட்ட தவறு என்னவெனின், விடுதலைப் போராட்ட அமைப்புக்களையும் , அடிப்படைவாத அமைப்புக்களையும் வேறுபடுத்தாது எல்லா அமைப்புக்களையும் ஒன்றாக வரையறுத்ததுதான்" எனவும் சொன்னார் திருமதி ஹிலறி கிளின்ரன்.

அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றியும் மற்றைய சில விடுதலை அமைப்புக்கள் பற்றியும் சொன்ன தகவல்கள் கீழே [கார்டியன் நிருபரின் கேள்வியும் ஹிலறியின் பதிலும்]:

Yeah. Do you think that the terrorists hate us for our freedoms, or do you think they have specific geopolitical objectives?

Well, I believe that terrorism is a tool that has been utilized throughout history to achieve certain objectives. Some have been ideological, others territorial. There are personality-driven terroristic objectives. The bottom line is, you can't lump all terrorists together. And I think we've got to do a much better job of clarifying what are the motivations, the raisons d'être of terrorists. I mean, what the Tamil Tigers are fighting for in Sri Lanka, or the Basque separatists in Spain, or the insurgents in al-Anbar province may only be connected by tactics. They may not share all that much in terms of what is the philosophical or ideological underpinning. And I think one of our mistakes has been painting with such a broad brush, which has not been particularly helpful in understanding what it is we were up against when it comes to those who pursue terrorism for whichever ends they're seeking.

முழுப் பேட்டியையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

12 comments:

said...

Hillary - அம்மையார் ஈழவிடுதலையை பற்றி அறிந்திருப்பது மகிழ்ச்சியே! இந்த அம்மையார் ஆட்சிக்கு வந்து நமது தமிழ் ஈழ விடுதலையை அங்கிகரித்தால் நமக்கு வேறு என்ன வேண்டும்?

said...

:)

said...

இவன் said...
Hillary - அம்மையார் ஈழவிடுதலையை பற்றி அறிந்திருப்பது மகிழ்ச்சியே! இந்த அம்மையார் ஆட்சிக்கு வந்து நமது தமிழ் ஈழ விடுதலையை அங்கிகரித்தால் நமக்கு வேறு என்ன வேண்டும்?///

அவர்கள் யார் நம் போராட்டத்தை அங்கிகரிக்க! அவர்கள் உண்மையை மிக தாமதமாக புரிந்து கொண்டதுக்காக நாம் சந்தோச படலாமே தவிர, அமெரிக்காவே அங்கிகரித்துவிட்டது என்று கொண்டாடுவது சரி அல்ல.
(தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்)

said...

இவன், ஆறு, குசும்பன்!
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

said...

வெற்றி,

ஹிலறி கிளிண்டன் எங்கேயும் 'விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல' எனக்கூறவில்லை. மாறாக எல்லா 'பயங்கரவாதிகளையும்' ஒரே கட்டுக்குள் போடுவதனால் எழும் சிக்கல்கள் பற்றியே கூறுகிறார். இந்த 'சிக்கல்' அமெரிக்காவுக்கு வெளியுறவுக்கொள்கையில் ஏற்படும் சிக்கலே அன்றி ஜனநாயகத்துக்கோ அன்றி மனித உரிமைகளுக்கோ அல்ல. இதில் ஊன்றிக் கவனிக்க வேண்டியது யாதெனில் அமெரிக்கா 9/11 இன்பின் 'பயங்கரவாததுக்கு எதிரான' கொள்கையை நீ அல்லது நான் என கறுப்பு/வெள்ளை தனமாக கைக்கொண்டது தான். இந்த கறுப்பு/வெள்ளை கொள்கை வண்டியில் உலகில் உள்ள 'கீழ்த்தரமான' நாடுகளும் இலகுவாக ஏறிக்கொண்டன. அமெரிக்கா நினைத்ததென்னவோ இந்த இராக்/ஒசாமா விடயம் ஒன்று இரண்டு வருடங்களில் முடிந்து விடும். பின்னர் இந்த 'கீழ்த்தரமான ' நாடுகளை கழற்றி விட்டு தமது உயர் கொள்கைகளை பீற்றிக்கொள்ளலாம் என்று. நடந்ததோ வேறு.
இப்போது வேறு வழியில்லை.
மற்றையது ஹிலரி ஒருபோதும் ஒரேமாதிரிப்பேசுவது கிடையாது. சுற்றி வளைத்து பிற்காலத்தில் 'சிக்கல்' வராமல் பேசுபவர். இவரை நம்பி ஆற்றில் இறங்க முடியாது.
இத்தனைக்கும் எனக்கு புஷ்ஷையோ அவரது கட்சியையோ பிடிக்காது.

said...

/* ஹிலறி கிளிண்டன் எங்கேயும் 'விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல' எனக்கூறவில்லை. மாறாக எல்லா 'பயங்கரவாதிகளையும்' ஒரே கட்டுக்குள் போடுவதனால் எழும் சிக்கல்கள் பற்றியே கூறுகிறார்.*/

உண்மை. உங்களின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். இது சும்மா பரபரப்புக்காக வைக்கப்பட்ட தலைப்பு. :-))

said...

//அவர்கள் யார் நம் போராட்டத்தை அங்கிகரிக்க! அவர்கள் உண்மையை மிக தாமதமாக புரிந்து கொண்டதுக்காக நாம் சந்தோச படலாமே தவிர, அமெரிக்காவே அங்கிகரித்துவிட்டது என்று கொண்டாடுவது சரி அல்ல.
(தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்)//

ரிப்பீட்டேய்.........

said...

தஞ்சாவூரான்,
வணக்கம்.

தஞ்சை என்று சொல்லும் போதே பெருமையாகவும், மகிழ்வாகவும் இருக்கிறது.

உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

said...

தஞ்சாவூரான்,
வணக்கம்.

தஞ்சை என்று சொல்லும் போதே பெருமையாகவும், மகிழ்வாகவும் இருக்கிறது.

உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

said...

உன்னை மாதிரி ஏஸி ருமில் கருத்து எழுதும் ஆட்களின் கருத்தை எவர் கேட்டார்.ஒரு தலித்தின் கருத்தை கேள் .வெள்ளாள ஆதிக்க விடுதலை புலிகள் பயங்கரவாதிகள் என்பது தெளிவான விடயமே

said...

Happy New Year! And best wishes for a healthy and successful 2008

said...

வணக்கம் ,

தமிழீழ வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும் நோக்கில் இந்தத் தளம் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது .

http://www.pageflakes.com/rishanthan

இங்கு தங்களின் வலைபூவானது இணைக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன் .

உங்களை தொடர்புகொள்ள வேறு வழிகள் தெரியவில்லை ,

நீங்கள் ஈழத்தமிழரா ?

நீங்கள் ஈழத்தமிழராக இருக்கும் பட்சத்தில் இந்த வலைப்பதிவு தொடர்பாக
ஏனைய வலைப்பதிவர்களுக்கும் அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி !