படித்ததில் பிடித்த கவிதை வரிகள்
அண்மையில் சில கவிதைகளை வாசிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அப்படி நான் வாசித்த கவிதைகளில் நேசித்த அல்லது மனதை நெகிழ வைத்த சில வரிகள் கீழே.
சாருமதியின் "சுனி ஒரு கலகக்காரி" என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் இருந்து சில வரிகள்.
சீதையைப் பாயச் சொன்னான்
தீயுக்குள் இராமன்
தனக்கும் அந்த
நியாயத்தைப் பிரயோகிக்காமல்
இந்திரனுக்கு ஏமாந்தவள்
அகலிகை மட்டும் தானா?
இல்லையே!
தபோமுனியும்
தவறிழைத்தான் தானே?
ஆனால்,
தண்டிக்கப் பட அகலிகை
தண்டிக்கக் கெளதமன்
இது என்ன நியாயம்?
மாதவியும்
மனிதப் பிறவி தானே!
கானல் வரி பாடி
அவளை
வேசை யென்று சொல்லி
விட்டு விலகிப் போன
கோவலன் மட்டு மென்ன
கற்புக்கு அரசனா?
ஈழத்துக் கவிஞர் குறிஞ்சித் தென்னவன். இவர் வறுமையில் பிறந்து வறுமையிலே வளர்ந்தவர். இவரின் இள வயதுடைய சொந்தமகள் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டாள். அவளது வையித்திச் செலவுக்குக் கூட கவிஞரிடம் பணம் இருக்கவில்லை. தன் அருமை மகள் இறந்ததும் இயற்றிய , "கண்ணீர் அஞ்சலி" எனும் தலைப்பில் அமைந்த பாடல்கள் நெஞ்சை உருக்கும். அதிலிருந்து சில வரிகள்.
மல்லிகையின் மலர்தூவி வாழ்த்த நினைத்திருந்தேன்!
எள்ளுப் பொரி தூவி இறைக்கும் நாள் வந்ததையோ!
முல்லைப் பூச்சூடி முகமலர நாள் பார்த்தேன்
அல்லி விழிமூடி அழுத இதழ்மூடி
வெள்ளைத் துகில்மூடி மேனியிலே மலர்மூடி
சொல்லாது நீ போகும் துயரநாள் வந்ததையோ
9 comments:
//சுனி ஒரு கலகக்காரி//
இதை ஒருமுறை சரிபார்க்கவும்.
பதிவுக்கு நன்றி
கா.பி,
மிக்க நன்றி.
/* இதை ஒருமுறை சரிபார்க்கவும் */
பிரபா, என்னிடம் சாருமதியின் கவிதைப் புத்தகம் இல்லை. இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் க.அருனாசலம் அவர்கள் எழுதிய 'மலையகத் தமிழ் இலக்கியம்' எனும் புத்தகத்தில் மலையகக் கவிதைகள், மற்றும் சில தமிழகக் கவிஞர்களின் கவிதைகளை ஆய்வு செய்திருந்தார்.அதில் இருந்து எடுத்ததுதான் இக் கவிதை.
மேலே உள்ள கவிதை சாருமதியின் "சுனி ஒரு கலக்காரி" எனும் தலைப்பில் அமைந்த கவிதை எனக் குறிப்பிட்டிருந்தார்.
நீங்கள் சொன்ன பிறகு, மீண்டும் ஒரு முறை அப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். அதில் அப்படித்தான் இருக்கிறது. இதில் தவறு இருப்பின் சிலவேளை அச்சுப்பிழையாகவோ, அல்லது பேராசிரியரின் கவனக் குறைவால் ஏற்பட்ட தவறாக இருக்கலாம்.
அவர் கவிதையின் தலைப்பு என்று தான் சொல்லியுள்ளாரே தவிர சாருமதியின் புத்தகத்தின் தலைப்பு எனச் சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனக்கு சாருமதி பற்றி ஒன்றும் தெரியாது. பேராசிரியரின் இப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சாருமதியின் படைப்புக்கள் தவிர வேறொன்றும் படித்ததில்லை. அத்துடன் சாருமதியின் கவிதைப் புத்தகங்கள் ஒன்றும் என்னிடம் இல்லை.
எனவே பேராசிரியரின் புத்தகத்தைத் தவிர இதைச் சரிபார்த்துக் கொள்ள வேறு ஒரு நூலும் இல்லை.
பிரபா, இதில் ஏதாவது தவறிருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். உங்களிடம் இக் கவிதைப் புத்தகம் இருந்தால் தயவு செய்து ஒருக்கால் சரிபார்த்துச் சொல்லுங்கள்.
மிக்க நன்றி.
//சீதையைப் பாயச் சொன்னான்
தீயுக்குள் இராமன்
தனக்கும் அந்த
நியாயத்தைப் பிரயோகிக்காமல்//
super. enakku puriyadha oru matter idhudhaan. theekkulla paya sonnavan en kadavul aanaan? vera edhavadhu karanangal irukko?
படித்துப் பிடித்தை இங்கு
படிக்கப் பிடித்தது.
பதிவுக்கு நன்றி:-)
சர்வேசன்,
/* super. enakku puriyadha oru matter idhudhaan. theekkulla paya sonnavan en kadavul aanaan? vera edhavadhu karanangal irukko? */
இதுபற்றி எனக்குள்ளும் பல கேள்விகள் உண்டு. இராமர் உண்மையிலேயே இப்படிச் சொன்னாரா? அல்லது பின்னர் வந்தவர்கள் இதை இடையில் சொருகினார்களா?
நான் அறிந்த இராவணன் கதைக்கும் இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களுக்கும் பலத்த வேறுபாடுகள் இருக்கின்றது. :-))
----------------------------------
செல்லி,
/* பதிவுக்கு நன்றி:-)*/
நன்றி.நன்றி...
அருமையாகவுள்ளது பதிவுக்கு நன்றி
யாழ்_அகத்தியன்,
வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.
Please take part in testing Tamil Domain
http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்
சீதையை கடத்தியதாக அன்றைய ராவணன், இன்றைய சீதைகளை பற்றி ஒரு புதுக்கவிஞன்.
"ராமா, ராமா! சீ, சீ ராவணா, ராவணா நீயாவது,
புஷ்ப வாகனத்தில் இல்லாவிட்டாலும் கள்ளத்தோணியலாவது,"
என்ற காலத்தின் கவிதை வெளிப்பாடுகள் தான் இவை.
Post a Comment