Friday, October 05, 2007

இப் புகைப்படத்தில் உள்ள பிரபலம் யார்?

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

- தமிழ்வேதம் (1033)

மேலே உள்ள புகைப்படத்தில் கலப்பை [ஏர்] பிடித்து நிலத்தை உழுபவர் யார் எனத் தெரிகிறதா?

இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள்தான் சாறம் [sarong] உடுத்துக்கொண்டு நிலத்தை உழுகிறார். சாறத்தை இப்படி மடித்துக் கட்டுவதை 'சண்டிக்கட்டு' என்று எனது ஊரில் சொல்வார்கள். சண்டை போடுவதற்காக இப்படி மடித்துக்கட்டுவதுதான் சண்டிக்கட்டு என்று மருவி வந்ததிருக்கக்கூடும் என நான் நினைக்கிறேன்.

இவர் ஏன் வயலில் உழுகிறார்? "உள்ளூர் உணவு உற்பத்தியை மேம்படுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாக உழவர் திருநாள் நிக்கவரெட்டிய பகுதியிலுள்ள மாகல்லவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற" நிகழ்வில் எடுக்கப்பட்ட படம்.

படம் : Daily Mirror

தகவல் : Daily Mirror , தினக்குரல்

5 comments:

ILA (a) இளா said...

இலங்கையில் எருமை மாட்டை வைத்தா ஏர் பூட்டுவார்கள்?

Sundar Padmanaban said...

அவருக்கு எங்க ஊர் அரசியல்வாதிகள் மாதிரி ஏரைப் பிடிச்சுக்கிட்டே போட்டோவுக்குச் சிரிச்சிக்கிட்டே போஸ் கொடுக்கத் தெரியாதா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
அசல் சண்டியன் தான்!

இளா! சிங்களப் பகுதியில் அதிகம் எருமையே ஏரில் இணைப்பார்கள்>

வசந்தன்(Vasanthan) said...

//ILA(a)இளா said...
இலங்கையில் எருமை மாட்டை வைத்தா ஏர் பூட்டுவார்கள்?
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இளா! சிங்களப் பகுதியில் அதிகம் எருமையே ஏரில் இணைப்பார்கள்//

யாழ்ப்பாணத்தில்தான் எருமையை வைத்து உழுவதில்லை, ஏனென்றால் அங்கே எருமையே காணக்கிடைக்காது.
ஆனால் ஏனைய தமிழர் பகுதிகளில் உழவுக்கு எருமை பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வன்னியில் எருமை மாடுகள்தாம் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
'சேறடித்து' விதைப்பதென்றால் எருமை மாடுகள் மட்டுமே பயன்படுத்த ஏதுவானவை.
இதுபற்றி வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -1 என்ற இடுகையில் ஓரிரு வரிகள் எழுதியிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் எருமை உழவுக்குப் பயன்படுத்தப்படுவதில்லையா? என்னை்பபொறுத்தவரை உழவுக்கு எருமைதான் சிறந்ததென்று நினைக்கிறேன்.

வெற்றி said...

இளா,

/* இலங்கையில் எருமை மாட்டை வைத்தா ஏர் பூட்டுவார்கள்? */

உங்களின் கேள்விக்கு எனக்கு விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை யோகன் அண்ணரும், வசந்தனும் பதில் சொல்லிவிட்டனர்.

---------------------------------

வற்றாயிருப்பு சுந்தர்,

/* அவருக்கு எங்க ஊர் அரசியல்வாதிகள் மாதிரி ஏரைப் பிடிச்சுக்கிட்டே போட்டோவுக்குச் சிரிச்சிக்கிட்டே போஸ் கொடுக்கத் தெரியாதா? */

சாதாரண [ordinary] சிங்கள மக்களைத் தன் பக்கம் இழுப்பதில் மனுஷன் மிகவும் கெட்டிக்காரன். இன்னும் சொல்லப்போனால் தமிழக அரசியல்வாதிகளை விட "போஸ்" கொடுப்பதில் வல்லவர். இவர் வழக்கறிஞர் மட்டுமல்ல, ஒரு நடிகனாகவும் இருந்தவர். எனவே இவருக்கு "போஸ்" கொடுப்பதெல்லாம் கைவந்த கலை.

அதிகமான சாதாரண சிங்கள மக்கள் ரணிலை விட இவருடன் தான் உணர்வு பூர்வமாக நெருக்கமாக இருப்பதாக நினைப்பதாக சொல்வார்கள்.

--------------------------------
யோகன் அண்ணை,

/* அசல் சண்டியன் தான்! */
ஆளிடை உடம்பையும் சண்டிக்கட்டையும் பார்த்தால் நீங்கள் சொல்லுறதும் சரியெண்டுதான் படுது.

இளாவின் கேள்விக்குப் பதிலளித்தமைக்கும் மிக்க நன்றிகள் அண்ணை.

---------------------------------
வசந்தன்,
இளாவின் கேள்விக்கான உங்கடை பதிலுக்கும் , உங்கடை பதிவின் சுட்டிக்கும் மிக்க நன்றி.