Monday, October 08, 2007

தேறுவார்களா இந்தத் தமிழர்கள்?

வரும் புதன்கிழமை, ஐப்பசி[ஒக்ரோபர்] 10,2007 அன்று கனடாவின் முக்கிய மாநிலமான ஒன்ராரியோ[Ontario] மாநிலம் சட்டசபைத் தேர்தலுக்குச் செல்கிறது. ஒன்ராரியோ மாநிலத்தின் தலைநகரம் ரொரன்ரோ[Toronto]. ஆசியாவிற்கு வெளியே தமிழர்கள் அதிகமாக வாழும் நகரம் ரொரன்ரோ எனச் சொல்லப்படுகிறது. சில சட்டசபைத் தொகுதிகளின் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் அளவுக்கு தமிழர்கள் அத் தொகுதிகளில் செறிந்து வாழ்கிறார்கள்.

ஒன்ராரியோ மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் தொகை 12. ஆனால் இவற்றுள் 3 கட்சிகள்தான் முக்கியமான கட்சிகளாகத் திகழ்கின்றன. இந்த 3 கட்சிகளும் தான் இம் மாநிலத்தை மாறி மாறி ஆண்டு வருகின்றன. மற்றைய கட்சிகளுக்குச் சட்டசபையில் கூட உறுப்பினர்கள் இல்லை.

அந்த மூன்று கட்சிகளாவன:
1. லிபரல் கட்சி - LIBERAL PARTY
2. கொன்சவேற்றிவ் கட்சி -- PROGRESSIVE CONSERVATIVE PARTY [PC PARTY]
3. புதிய சனநாயகக் கட்சி - NEW DEMOCRATIC PARTY [NDP]

தற்போது ஆட்சியில் உள்ள கட்சி லிபரல் கட்சி. ஒன்ராரியோ மாநில தற்போதைய மொத்த சட்டசபை ஆசனங்கள் 103.

இம் முறை 4 தொகுதிகள் அதிகமாக உருவாக்கியுள்ளதால் அடுத்த சட்டசபையின் மொத்தத் தொகுதிகள் 107 ஆக உயரும்.

தற்போதைய சட்டசபையில் [103 ஆசனங்கள்] கட்சிகளின் பலம்:

லிபரல் கட்சி --- 67
கொன்சவேற்றிவ் கட்சி --- 25
புதிய சனநாயகக் கட்சி --- 10
வெற்றிடம் [vacant] -- 1

சரி, தலைப்புக்கும் இப்பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா?

மேலே குறிப்பிட்ட முக்கிய மூன்று கட்சிகளில் இரண்டு கட்சிகளின் சார்பாக இலங்கையில் பிறந்த 5 கனேடியப் பிரஜைகள் இத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில் ஒருவர் சிங்களப் பெண்மணி. மற்றைய நால்வரும் தமிழ் கனேடியர்கள்.

போட்டியிடும் இவ் ஐவரில் சிங்களப் பெண்மணி அவர்களே வெல்லக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இது என் தனிப்பட்ட ஊகம். காரணம் அவர் போட்டியிடும் தொகுதி ரொரன்ரோ புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. அத் தொகுதியில் அவர் சார்ந்த கொன்சவேற்றிவ் கட்சிக்கு குறிப்பிட்ட ஆதரவு உண்டு.

இரண்டு தமிழ் வேட்பாளர்கள் [சதீஸ், பாலா] ரொரன்ரோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.ஆனால் இப் பகுதியில் இவர்கள் சார்ந்த கட்சியான புதிய சனநாயகக் கட்சிக்கு ஆதரவு வெகு குறைவு. எனவே இவர்களின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

மற்றைய இரண்டு தமிழ் வேட்பாளர்கள் [நீதன், சாமி] போட்டியிடும் தொகுதிகள் ரொரன்ரோ மாநகரில் உள்ளவை. இத் தொகுதிகளில் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்ந்தாலும், தமிழ்மக்களின் வாக்குகளுடன் மட்டும் அவர்கள் வென்றுவிட முடியாது. அத் தொகுதிகளில் வாழும் மற்றைய சமூகத்தினரின் வாக்குகளும் அவசியம். ஆனால் ரொரன்ரோ மாநகரில் உள்ள தொகுதிகளில் கடந்த சில தேர்தல்களில் தற்போது ஆட்சியில் உள்ள லிபரல் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றி வருகிறது.

போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களில் ஒருவரும் லிபரல் கட்சிக்காக போட்டியிடவில்லை. இதனால் இத் தமிழ் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளதாக நான் நினைக்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்து. தேர்தல் முடிவுகள் புதன் இரவு வெளியாகிவிடும். அதாவது வாக்களிப்பு முடிந்த சில மணித்தியாலங்களில் முடிவுகள் தெரிந்துவிடும். அப்போது தெரியும் இத் தமிழ்க்கனேடியர்கள் தேறுவார்களா[வெற்றி பெறுவார்களா] இல்லையா என்று.

இத் தேர்தலில் போட்டியிடும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கனேடியப் பிரஜைகளான 5 வேட்பாளர்கள் பற்றிய சில குறிப்புகள் கீழே.


பெயர் : கயானி வீரசிங்கே [Gayani Weerasinghe]
தொகுதி : Vaughan
கட்சி : கொன்சவேற்றிவ் கட்சி [PROGRESSIVE CONSERVATIVE PARTY]
பெயர் : சாமி அப்பாத்துரை [Samy Appadurai]
தொகுதி : Scarbrough Centre
கட்சி : கொன்சவேற்றிவ் கட்சி [PROGRESSIVE CONSERVATIVE PARTY]
பெயர் : பாலா தவராஜசூரியர் [Bala Thavarajasoorier]
தொகுதி : Ajax-Pickering
கட்சி : புதிய சனநாயகக் கட்சி [NEW DEMOCRATIC PARTY]
பெயர் : சதீஸ் பாலசுந்தரம் [Satish Balasunderam]
தொகுதி : Mississauga East - Cooksville
கட்சி : புதிய சனநாயகக் கட்சி [NEW DEMOCRATIC PARTY]
பெயர் : நீதன் சண் [Neethan Shan]
தொகுதி : Scarborough-Guildwood
கட்சி : புதிய சனநாயகக் கட்சி [NEW DEMOCRATIC PARTY]

11 comments:

said...

நானறிந்தவை நீதனுக்கும், சாமிக்கும் சிலவேளை பதவிகள் கிடைக்க கூடும். நீதனுக்குப் பிரச்சாரம் செய்தவன்( அதற்காக கட்சிக்காரன் என்று நினைக்காதீர்கள். வாக்குரிமை கூட இல்லை. தமிழன் என்ற எண்ணத்தில் பலன் எதிர்பாக்காத வேலை) என்ற வகையில் பெரும்பாலன வீடுகளில் புதிய ஜனநாயகக்கட்சிக்கு ஆதரவுக்குச் சம்மதித்தார்கள்

said...

கொன்சவேற்றிவ் கட்சி வெற்றிபெற சாத்தியமில்லை. They killed themselves by talking about giving 400 million to faith based schools. இந்த முறையும் லிபிரல் கட்சியே வெற்றிபெறும்.

said...

அனானி,

/* நானறிந்தவை நீதனுக்கும், சாமிக்கும் சிலவேளை பதவிகள் கிடைக்க கூடும்.*/

இவர்கள் இருவரும் போட்டியிடும் தொகுதிகளில் கணிசமான தமிழ் மக்கள் வசிக்கிறர்கள்.

ஆனால் தமிழ் மக்களின் வாக்குடன் மட்டும் இவர்கள் வென்றுவிட முடியாது. இவர்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்கு இத் தொகுதிகளில் எப்படியான ஆதரவு உண்டென்று எனக்குத் துல்லியமாகத் தெரியாது. ஆனால் என் ஊகத்தின் அடிப்படையில் இத் தொகுதிகளில் லிபரல் கட்சிக்கே ஆதரவு அதிகமென நினைக்கிறேன்.

நேற்று சாமி அப்பாத்துரை போட்டியிடும் தொகுதிக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள சில தமிழர்களுடன் கதைத்த போது அவர்கள் சாமி அப்பாத்துரை மீது நல்ல மதிப்பு வைத்திருப்பதாகத் தெரியவில்லை. அதாவது இவர் முந்தி வேலை செய்த இடத்தில் தனது உறவினர்களுக்கு மட்டுமே வேலை எடுத்துக் கொடுத்ததாகவும் மற்றைய தமிழர்களுக்கு உதவவில்லை என குறைபட்டுக் கொண்டனர். இதில் எவ்வளவு உண்மையென எனக்குத் தெரியாது.


/* நீதனுக்குப் பிரச்சாரம் செய்தவன்( அதற்காக கட்சிக்காரன் என்று நினைக்காதீர்கள். */

நீங்கள் அரசியல் பரப்புரைகளில் ஈடுபட்டீர்கள் என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் அரசியலில் தமது வாக்குகள் மூலம் பல விசயங்களைச் சாதிக்கலாம். இதனால் தான் நானும் எனது நண்பர்களும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழ் மக்களை, குறிப்பாக தமிழ் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கிறோம்.

/* தமிழன் என்ற எண்ணத்தில் பலன் எதிர்பாக்காத வேலை */

மாநிலசபைத் தேர்தல்களில் தமிழர்கள் என்ற காரணத்தால் மட்டும் ஆதரிக்காமல் கட்சிகளின் கொள்கையை/திட்டங்களை அறிந்து வாக்குப் போடுவதே சிறந்தது என நினைக்கிறேன். ஆனால் நீதனை ஆதரிப்பது நல்லது. அவர் தமிழ் சமூகத்திற்கு பல விதத்தில் பயனுள்ளவர்.

/* பெரும்பாலன வீடுகளில் புதிய ஜனநாயகக்கட்சிக்கு ஆதரவுக்குச் சம்மதித்தார்கள் */

இங்கே கனடா/அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள ஒரு விடயம் என்னவெனின் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களில் பலர் வாக்களிப்பதில்லை. அதாவது voter turnout என ஆங்கிலத்தில் சொல்வார்கள், வாக்களித்தோர் தொகை என்பதை. கடந்த ஒன்ராரியோ
மாநில சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ளோரில் ஆக 59.5 வீதத்தினரே வாக்களித்தனர்.

எனவே ஒருவரின் வெற்றி என்பது எவ்வளவு மக்கள் வாக்களிக்கின்றனர் என்பதிலும் தங்கியுள்ளது.

நீங்கள் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்ட போது ஓம் என்று சொன்னவர்கள் எத்தனை பேர் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பார்கள், அவர்கள் உங்களுக்குச் சொன்னது போல நீதனுக்குத் தான் வாக்குப் போடுவர்களா, அல்லது வேறு யாருக்காவது போடுகிறர்களா என்பனவற்றிலும் தங்கியுள்ளது.

நான் நீண்ட கால லிபரல் கட்சி அங்கத்தவர். இருப்பினும் நீதன் வெல்ல வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். பாப்போம் என்ன நடக்குதெண்டு.

said...

ஆறு,
வாங்கோ. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

/* கொன்சவேற்றிவ் கட்சி வெற்றிபெற சாத்தியமில்லை...இந்த முறையும் லிபிரல் கட்சியே வெற்றிபெறும். */

நீங்கள் சொல்வது போல, அதாவது லிபரல் கட்சிதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பிந்தி வந்த கருத்துக் கணிப்புகள் சொல்கிறது.

அதேநேரம் யாருக்கு வாக்குப் போடுவது என இன்னும் முடிவெடுக்காத[undecided] வாக்காளர்கள் தொகையும் கணிசமான அளவில் உள்ளது.

ஆகவே இன்னும் முடிவெடுக்காத மக்கள் எப்படி வாக்குப் போடுகிறார்கள் என்பதிலும் முடிவுகள் தங்கியுள்ளது என நினைக்கிறேன்.

/* They killed themselves by talking about giving 400 million to faith based schools.*/

மிகவும் சரியாகச் சொன்னீர்கள் ஆறு. இந்த விடயம் கொன்சவேற்றிக் கட்சியின் பலவீனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கட்சித் தலைவர்களின் தொலைக்காட்சி நேரடி விவாததிலும் கொன்சவேற்றிவ் கட்சித் தலைவர் ஜோன் ரொரி [John Tory] இந்த விடயத்தில் தடுமாறத் தொடங்கிவிட்டார்.

அதைவிட பகிடி என்னவென்றால் தேர்தல் பரப்புரைகள் சூடு பிடித்த நேரம் இந்த மத நம்பிக்கையிலான பள்ளிகள்[ faith based schools] விடயத்தில் அவர் குத்துக்கரணம் அடித்தது.அதாவது அக் கொள்கையில் இருந்து பிசகியது. அதை எல்லாப் பத்திரிகைகளும் தலையங்கமாக முன் பக்கத்தில் போட்டனர்.

எதிர்க்கட்சிகளும் இவரிடம் தெளிவான கொள்கைகள் இல்லையெனவும், நேரத்திற்கு ஒரு கதை கதைக்கிறார் எனவும் பரப்புரை செய்யதனர்.

நீங்கள் சொல்வது போல, இந்த விடயம் John Tory ஐயும் அவரது கட்சியையும் வெகுவாகப் பாதித்தது.

ஆறு, இதில் இன்னுமொரு விடயம் என்னவெனின், இதுதான் John Tory , ஒரு கட்சியின் தலைவராகச் சந்திக்கும் முதல் தேர்தல். அதனால் இவருக்கு அனுபவின்மையாகவும் இருக்கலாம்.:-))

நான் வாழும் பகுதி John Tory போட்டியிடும் தொகுதியில்தான் இருக்கிறது. :-))

said...

உதில ரெண்டு பேர் மொட்டை போட்டிருப்பதற்கு ஏதாவது விசேச காரணங்கள் இருக்கின்றனவாஃ

said...

அனானி,

/* உதில ரெண்டு பேர் மொட்டை போட்டிருப்பதற்கு ஏதாவது விசேச காரணங்கள் இருக்கின்றனவாஃ */

ஆகா! இதல்லவோ கேள்வி. :-))

அனானி, போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் ஒருவருடனும் எனக்கு நேரடிப் பழக்கம் இல்லை. சாமி அப்பாத்துரை அவர்களைச் சில தமிழ் சமூக நிகழ்வுகளில் கண்டிருக்கிறேன். அவ்வளவே.

நீதனையும் சில நிகழ்வுகளில் பார்த்திருக்கிறேன். நான் படித்த பல்கலைக் கழகத்தில்தான் நீதனும் படித்ததாக்கச் சிலர் சொன்னார்கள். ஆனால் நான் அவரை ஒரு நாளும் பலகலைக்கழகத்தில் சந்தித்த ஞாபகம் இல்லை. சிலவேளை வெவ்வேறு ஆண்டுகளில் படித்திருப்போம் போல இருக்கு. ஆனால் நீதனைப் பார்த்தால் என் வயதை ஒத்தவர் போல இருக்கு.ஆக நீதனுடனும் எனக்கு நேரடிப் பழக்கம் இல்லை.

அதனால் உங்களின் கேள்விக்கு என்னால் சரியான்/தெளிவான பதில் சொல்ல முடியாது.

ஆனால் என் ஊகத்தைச் சொல்கிறேன். அது சரியோ பிழையோ தெரியாது. OK யா?

நான் நினைக்கிறேன், சில தமிழர்களுக்கு இங்கத்தைய தண்ணி ஒத்துவரேல்லைப் போல இருக்கு. சிலருக்கு இளம் வயதிலேயே வழுக்கை வந்திருக்கு.

ஆதுபோலத்தான் இவைக்கும் தலை நடுவாலை வழுக்கையாக இருந்திருக்கும். அதாலை முழுக்க மொட்டை அடிச்சிருப்பினம்.

3வது படித்திலை இருக்கிற தமிழ் வேட்பாளரை நோக்குங்கோ. அவர் இளம் வயதுக்காரர் போல தெரியுது. இருப்பினும் அவருக்கும் தலேலை நடுவாலை கன மயிர் போவிட்டுது. அவரும் இன்னும் சில காலங்களில் மேலை உள்ள இரண்டு பேரைப் போலவும் முழுக்க மொட்டையடிக்கலாம். :-))

இல்லாட்டில் ஏதாவது நேர்த்திக்கடனோ ஆர் கண்டார்.

3 வது படத்திலை இருக்கிறவர் இங்கை உள்ள துர்க்கை அம்மன் ஆலயம் ஒன்றின் நிர்வாக சபைத் தலைவர் என நினைக்கிறேன்[அவரின் இணையத் தளத்தில் படித்த ஞாபகம்].


உங்களுக்கு என்ரை பதிலிலை திருப்தி இல்லாட்டில் சொல்லுங்கோ.நான் அவேன்ரை மின்னஞ்சல் விலாசத்தைத் தாறேன். அவேட்டையே நேரடியா நீங்கள் எழுதிக் கேக்கலாம் :-))

said...

Gayani Weerasinghe can never win. It's because the riding she is runniing is strong liberal area. Mostly people of Italian origin live there and the liberal candidate there is the liberal campaign chairman and the current finance minister Greg Sorbera. I think he is also Italian origin. Gayani may not even get 10% of the votes.

said...

/* Gayani Weerasinghe can never win. It's because the riding she is runniing is strong liberal area. */

அனானி, நீங்கள் சொல்வது மிகவும் சரி. 905 - பகுதிகளில் PC செல்வாக்கு உள்ள போதிலும், நீங்கள் சொன்னது போல இங்கே போட்டியிடுபவர் தற்போதைய நிதியமைச்சர். அத்துடன் Vaughan 905 பகுதியில்தான் வருகிறதோ என எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

கயானியை எதிர்த்துப் போட்டி போடும் வேட்பாளர் யாரெனப் பார்க்காமல் எழுதிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.

அப்ப ஒரு இலங்கையர்களூமே தேற மாட்டார்கள் போல இருக்கே?:-))

said...

/* தமிழன் என்ற எண்ணத்தில் பலன் எதிர்பாக்காத வேலை */

மாநிலசபைத் தேர்தல்களில் தமிழர்கள் என்ற காரணத்தால் மட்டும் ஆதரிக்காமல் கட்சிகளின் கொள்கையை/திட்டங்களை அறிந்து வாக்குப் போடுவதே சிறந்தது என நினைக்கிறேன். ஆனால் நீதனை ஆதரிப்பது நல்லது. அவர் தமிழ் சமூகத்திற்கு பல விதத்தில் பயனுள்ளவர்.///

உலகத்தமிழரில் விளம்பரம் போடுகின்ற துணிவுள்ளவர் எம் பக்கமாகத் தான் இருப்பார் என்ற நம்பிக்கை தான் காரணம். அதிகமான தமிழ் பத்திரிகைகள், வானொலிகள் நீதனுக்கும் சாமிக்கும் ஆதரவான போக்கினைக் கொண்டிருப்பதும் அவர்கள் மேலே நம்பிக்கை கொள்வதற்கான காரணமாகும்.

வெள்ளையார் வாக்கெடுப்பில் அக்கறை காட்டாதது, எமக்கு ஒரு வரப்பிரசாதம்.

ரொரன்னோவில் வாழ்கின்ற 25 லட்சம் மக்களில் குறைந்தபட்சம் 4 லட்சம் வரையிலான தமிழ் மக்கள் உள்ளனர். வாக்குரிமை உள்ளவர்கள் 2 லட்சம் பேராக இருந்தாலும் குறைந்தபட்சம் 10 சீட்டுக்களையாவது பெறும் நிலைக்கு வரவேண்டும். ஆனால் வாக்குகள் சிதறி இருப்பதால் கொஞ்சம் கஸ்டம் தான்.

தமிழ்மக்கள் அனைவரும் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

said...

அனானி,
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

/* அதிகமான தமிழ் பத்திரிகைகள், வானொலிகள் நீதனுக்கும் சாமிக்கும் ஆதரவான போக்கினைக் கொண்டிருப்பதும் அவர்கள் மேலே நம்பிக்கை கொள்வதற்கான காரணமாகும். */

இங்குள்ள பத்திரிகைகள், வானொலிகள் நடாத்துபவர்கள் தகுந்த கல்வித் தகைமை கொண்டவர்கள் அல்ல. பலருக்கு கனேடிய அரசியலில் அடியும் தெரியாது, நுணியும் தெரியாது. அவர்கள் சொல்வதை வைத்து நாம் முடிவெடுப்பது நல்லதல்ல என நினைக்கிறேன்.

இருப்பினும் நான் ஏற்கனவே சொன்னது போல நான் லிபரல் கட்சி அங்கத்தவராக இருந்த போதும், நீதன் வெல்ல வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். நீதன் எமது சமூகத்திற்கு மிகவும் உபயோகமாக இருப்பார். அவர் கனடாவில் வளர்ந்த வரும் இளம் தலைமுறையைச் சேர்ந்தவரும் கூட.

/* ஆனால் வாக்குகள் சிதறி இருப்பதால் கொஞ்சம் கஸ்டம் தான்.

தமிழ்மக்கள் அனைவரும் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். */

உங்களின் கருத்துடன் முழுமையாக உடன்படுகிறேன். நீங்கள் சொல்வது போல சில தொகுதிகளில் மட்டுமே தமிழர்கள் செறிவாக வாழ்கிறார்கள். மற்றும்படி அங்குமிங்கும் என்று தான் வசிக்கிறர்கள்.

நீங்கள் சொன்னது போல, நாம் அனைவரும் எமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். விரும்பியோ விரும்பாமலோ நாம் இந் நாட்டின் குடிமக்கள். இது எமது நாடு. எனவே எம் நாட்டின் அரசியல் முடிவுகளில் எமது குரலும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

said...

நாளை[புதன்கிழமை] தேர்தல். வாக்களிப்பு இரவு 9 மணிவரை இடம்பெறும்.

அதன் பின் முடிவுகள் வெளிவரும்.

கடைசியாக வந்த கருத்துக்கணிப்பு:

லிபரல் கட்சி --- 42%
PC --- 32%
NDP --- 17%
Green Party --- 9%

கடைசியாக வந்த கருத்துக்கணிப்பின்படி லிபரல் கட்சி பெரும்பான்மையான ஆசனங்களை வென்று ஆட்சியைப் பிடிக்குமாம்.