கனடா வலைப்பதிவர் கவனத்திற்கு ...
நீங்கள் கனடாவில் வசிப்பவரா?
வீட்டில் தொலைக்காட்சி வைத்திருப்பவரா?
தொலைக்காட்சி கேபிள் இணைப்பு வைத்திருக்கிறீங்களா?
நீங்கள் hip-hop/reggae வகைப் பாடல்களை விரும்பிக் கேட்பவரா?
நீங்கள் M.I.A எனும் பாடகியின் இரசிகரா/இரசிகையா?
மேலே உள்ள கேள்விகளுக்கு 'ஓம்' எனப் பதிலளித்தால், உங்களுக்கு ஒரு உவகையான செய்தி.
இன்று இரவு 11 மணிக்கு[EST] CBC யில் The Hour எனும் நிகழ்ச்சியில் M.I.A கலந்து சிறப்பிக்கிறார். பார்த்து மகிழுங்கள்.
நீங்கள் கனடாவில் ஒன்ராரியோ[Ontario] மாநிலம் தவிர்ந்த வேறு மாநிலங்களில் வசிப்பின், The Hour நிகழ்ச்சி உங்கள் பகுதிகளில் நடைபெறும் நேரத்தை உறுதிசெய்து கொள்ளுங்கள். நிகழ்சி நேரங்கள் பகுதிக்குப் பகுதி வேறுபடலாம்.
The Hour நிகழ்ச்சியின் இணையத் தளம் இதோ!
6 comments:
Thanks 4 sharing this news Vetti.
DJ,
you're very welcome.
//கனடா வலைப்பதிவர் கவனத்திற்கு ..."//
வலைப்பதிவர் மட்டும் தானோ பார்க்கலாம், வாசகர்கள் என்னமாதிரி? ;)
டிஜே விரதம் இருந்து காத்திருக்கிறாராம், மாயா அன்னையின் தரிசனத்துக்காக
Thanks for the information.
வெற்றி - எதேச்சையாக உங்களின் இந்தப் பதிவு கண்ணில் பட்டது. இன்றிரவு கட்டாயம் பார்ப்பேன். நன்றி! - வெங்கட்
கானா பிரபா,
/* வலைப்பதிவர் மட்டும் தானோ பார்க்கலாம், வாசகர்கள் என்னமாதிரி? ;) */
அடடா! நீங்கள் சொன்ன பிறகு தான் பதிவின் தலைப்பில் உள்ள பிழை தெரிய வந்தது. நன்றிகள் சுட்டிக் காட்டியதற்கு.
வாசகர்கள் என்ன, உலகம் பூராவும் உள்ளவர்களும் பார்க்கக் கூடிய வகையில் M.I.A ன் தொலைக்காட்சி நிகழ்ச்சி வீடியோவிற்கு இணைப்புக் கொடுத்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்.
/* டிஜே விரதம் இருந்து காத்திருக்கிறாராம், மாயா அன்னையின் தரிசனத்துக்காக */
அவர் M.I.A இரசிகர் மன்றத் தலைவரல்லோ. :-))
-----------------------------
Sabes
/* Thanks for the information.*/
you're very welcome.
--------------------------------
வெங்கட்,
/* வெற்றி - எதேச்சையாக உங்களின் இந்தப் பதிவு கண்ணில் பட்டது. இன்றிரவு கட்டாயம் பார்ப்பேன். நன்றி! - வெங்கட் */
நீங்கள் இரவு 11 மணிவரை விழித்திருக்கத் தேவையில்லை. அந் நிகழ்ச்சியை online ல் பார்ப்பதற்கு அடுத்த பதிவில் இணைப்புக் கொடுத்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்.
Post a Comment