Sunday, September 03, 2006

யாழ்ப்பாணத்து ஊர்கள் சில - பகுதி-1

யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகமான ஊர்கள், பட்டினங்கள் , நகரங்களின் பெயர்கள் காரணப் பெயர்களாகவே உள்ளன. பண்டைய காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதி போலவே ஈழமும் இருந்திருக்கிறது. சேர , சோழ , பாண்டி நாட்டிலிருந்து தமிழர்கள் நினைத்த போதெல்லாம் ஈழத்திற்குப் போவதும், ஈழத்தில் இருந்தவர்கள் சேர, சோழ , பாண்டி நாடுகளுக்குச் செல்வதும் வழக்கமாக இருந்திருக்கிறது. சேர, சோழ , பாண்டி நாடுகளில் இருந்து வந்த தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் காடாக இருந்த பல இடங்களை மேம்படுத்தி ஊர்கள், பட்டினங்கள் என அமைத்தனர். அப்படி அமைக்கப்பட்ட ஊர்களுக்கும் பட்டினங்களுக்கும் காரணப் பெயரைச் சூட்டியுள்ளனர்.[ஐரோப்பியர்கள் தமிழகத்தில் இருந்த தமிழர் இராச்சியங்களையும், ஈழத்திலிருந்த தமிழர் இராச்சியத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக, தமிழர்களுடன் கலந்தாலோசிக்காது தமிழக , ஈழ எல்லைகளை மாற்றியமைத்துத் தமிழர்களைப் பிரித்த பின்னரும் ஈழத்தவர்கள் தமிழகம் சென்று திருமணம் செய்வதும், அங்கு குடியேறுவதும், தமிழகத்தில் உள்ளோர் ஈழத்திற்கு வந்து குடியேறுவதும் நடைபெற்று வந்திருக்கிறது.] யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு இடத்தின் பெயரை ஆய்வு செய்தாலும் அதற்குப் பின்னால் பல சுவையான செவிவழி வரலாற்றுக் கதைகள் உண்டு. அப்படியாக அமைக்கப்பட்ட ஊர்கள், நகரங்களின் பெயர்களையும் அதற்குப் பின்னால் உள்ள செவிவழிக் கதைகளைத் தருவதுமே இப்பதிவின் நோக்கம்.

சரி, இந்த வகையில் முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள இடங்களில் வேலி எனும் சொல்லில் முடியும் இடங்களைப் பார்ப்போம்.

  1. திருநெல்வேலி
  2. அச்சுவேலி
  3. கட்டைவேலி
  4. சங்குவேலி
  5. நீர்வேலி

இவ் இடங்கள் பற்றிய செவிவழி வரலாற்றுக் கதைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்

18 comments:

said...

வெற்றி
என்ரை ஊரையும் எழுதியிருக்கிறியள். நன்றி. என்ரை ஊரைப்பத்தி என்ன வரலாறு எழுதப்போறியள் எண்டு படிக்க ஆசையாய் இருக்கு. கெரியா அடுத்த பதிவிலை எழுதுங்கோ.

said...

அனானி,
//என்ரை ஊரையும் எழுதியிருக்கிறியள். நன்றி. என்ரை ஊரைப்பத்தி என்ன வரலாறு எழுதப்போறியள் எண்டு படிக்க ஆசையாய் இருக்கு. கெரியா அடுத்த பதிவிலை எழுதுங்கோ.//

தங்களின் யாழ்ப்பாணத் தமிழைப் படிக்கும் போதே ஏதோ இனம்புரியாத சுகம் தோன்றுகிறது. நிச்சயமாக விரைவில் அடுத்த பதிவை எழுத முயற்சிக்கிறேன்.

said...

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு இடத்தின் பெயரை ஆய்வு செய்தாலும் அதற்குப் பின்னால் பல சுவையான செவிவழி வரலாற்றுக் கதைகள் உண்டு. அப்படியாக அமைக்கப்பட்ட ஊர்கள், நகரங்களின் பெயர்களையும் அதற்குப் பின்னால் உள்ள செவிவழிக் கதைகளைத் தருவதுமே இப்பதிவின் நோக்கம்.

நன்றி.
எழுதுங்கள்.

said...

வெற்றி!

இது தேவையான ஒரு நன் முயற்சி. தொடங்குங்கள்! தொடருங்கள்!!

said...

சந்திரவதனா அக்கா,
தங்களின் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள். இப் பதிவின் அடுத்த தொடரை நாளை பதிவிலிட தயார் செய்து கொண்டிருக்கிறேன். நிச்சயம் நாளை இப் பதிவின் அடுத்த தொடர் வரும்.

said...

மலைநாடான்,
உங்களைப் போன்றவர்களின் ஊக்கமும் ஆதரவும்தான் இப்படியான பதிவுகளை எழுதத் தூண்டுகின்றன. மிக்க நன்றி.

said...

வெற்றி,
தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மேலும் பல ஊர்களைப் பற்றி எழுதுவீர்கள் என நம்புகிறேன். ஏன் சிலர் "என்ர" என்பதை "என்ரை" என எழுதுகிறர்களோ?

said...

வெற்றி!
நிச்சயம்;நம் ஊர்ப் பெயர்களின் சுவையான தகவல்கள் இருக்கும்; படிக்க மிக ஆவலாக உள்ளேன்.சில காரணப் பெயராகவும் இருக்கலாம். எனினும் தகவல்களைப் பார்ப்போம்.
யோகன் பாரிஸ்

said...

வணக்கம் வெற்றி!

நல்லதொரு முயற்சி.திருநெல்வேலி,நாகர்
கோயில் போன்றவை ஈழத்திலும் உண்டு
தமிழகத்திலும் உண்டு.யாழப்பாணத்தில் இருந்து தொடங்குங்களேன்.

said...

உதில எந்த ஊர்க்காரனப்பா 'கெரி' எண்டுறது?

said...

மாசிலா,
வணக்கம்.

//இது தேவையான நன் முயற்சி. தொடருங்கள் உமது சேவையை. நன்றி. வணக்கம். //

தங்களின் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்.

said...

யாழ்த்தமிழன்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//ஏன் சிலர் "என்ர" என்பதை "என்ரை" என எழுதுகிறர்களோ? //

ஈழத்தில் கூட பகுதிக்குப் பகுதி பேச்சு முறைகளில் வேறுபாடு இருக்கிறது. சிலவேளைகளில் அதுவே காரணமாக இருக்கலாம். இதில் எது சரியானது என்பது எனக்குத் தெரியாது. நானும் அதிகமான நேரங்களில் என்ரை என்றுதான் சொல்வது வழக்கம். பேச்சுத் தமிழில் எது சரி எது பிழை என்று சொல்வது மிகக் கடினமென்றே நான் நினைக்கிறேன்.

said...

யோகனண்ணை,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

said...

கரிகாலன்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//நல்லதொரு முயற்சி.திருநெல்வேலி,நாகர்
கோயில் போன்றவை ஈழத்திலும் உண்டு
தமிழகத்திலும் உண்டு.யாழப்பாணத்தில் இருந்து தொடங்குங்களேன்//

உண்மையில் நானும் யாழ்ப்பாண வரலாற்றில் இருந்துதான் தொடங்கலாம் என்றிருந்தேன். ஆனால் யாழ்ப்பாண வரலாறு மற்றைய இட வரலாறுகளை விட நீண்ட பதிவாகி விடும் என்பதால் குறுகிய பதிவுகளை முதலில் பதிந்த பின்னர் யாழ் வரலாற்றைப் பதியலாம் எனத் துணிந்தேன்.

said...

நல்லதொரு முயற்ச்சி..வாழ்த்துக்கள் தொடருங்கள்

said...

வெற்றி
அங்கே தாவடி என்ற ஊர் உள்ளது அது திருச்சிராப்பள்ளி வட்டத்தில் உள்ள எனது ஊரின் மற்றொரு பெயராகும் துவாகுடி (துழாய்க்குடி). தாவடி என்றும் சொல்வார்கள் தாவடி என்றால் சண்டையிடும் இடம் அல்லது சேணைகளை நிறுத்திவைக்கும் இடம்
பாசரை என அர்த்தம் உள்ளது

said...

சின்னக்குட்டி அண்ணை,
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

said...

என்னார் ஐயா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//
அங்கே தாவடி என்ற ஊர் உள்ளது அது திருச்சிராப்பள்ளி வட்டத்தில் உள்ள எனது ஊரின் மற்றொரு பெயராகும் துவாகுடி (துழாய்க்குடி). தாவடி என்றும் சொல்வார்கள் தாவடி என்றால் சண்டையிடும் இடம் அல்லது சேணைகளை நிறுத்திவைக்கும் இடம்
பாசரை என அர்த்தம் உள்ளது //

உண்மைதான் ஐயா. தாவடி எனும் ஊர் யாழ்ப்பாணத்திலுண்டு. சிலவேளைகளில் உங்களின் பகுதியிலிருந்து வந்த மக்கள் குடியேறிய இடமோ தெரியவில்லை. இதுபற்றி இன்னும் ஆய்வுகள் செய்து விபரமாக எழுதுகிறேன்.

யாழ்ப்பாணத்தில் அடி எனும் சொல்லில் முடியும் சில ஊர்கள்:
ஆத்தியடி
உப்புமடத்தடி
கள்ளவேம்படி
குருக்கள்மாவடி
சப்பாச்சிமாவடி
காரையடி
சிதியம்புளியடி
சூளையடி
தாவடி
தாழையடி
தொட்டிலடி
நாவலடி
பத்துப்பனையடி
பந்தியடி
புறாப்பொறூக்கிஆலடி
மஞ்சத்தடி
மருதடி
முல்லையடி
வங்களாவடி
வேம்படி
றாத்தலடி
[கலாநிதி இ. பாலசுந்தரம், பக்.382]