Wednesday, September 27, 2006

படமும் கதையும் - 2

(படத்தைப் பெரிது படுத்திப் பார்க்க படத்தில் கிளிக் செய்யுங்கள்)

மேலே உள்ள படத்தை பறவைக் காவடி அல்லது தூக்குக்காவடி என்று ஈழத்தில் சொல்வார்கள். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தாவடி-சுதுமலை வீதியில் இப் படம் எடுக்கப்பட்டது. சுதுமலை அம்மன் ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சுதுமலை அம்மனுக்கு தனது நேர்த்திக்கடனைத் தீர்ப்பதற்காக இந்த தூக்குக்காவடியை எடுக்கிறார் இப் பக்தர். இத் தூக்குக்காவடி பனைமரத்தில் இருந்து உருவாக்கிய வளைகளால் செய்யப்பட்டது.

பி.கு:- நான் இப்படத்தை எடுக்கவில்லை. இணையத்தில் இருந்து எடுத்த படம் இது.

5 comments:

said...

காவடிகள் பலவகை. அதில் இது தனி வகை.

படத்திற்கும் செய்திக்கும் நன்றி வெற்றி.

said...

வெற்றி

இப்படியும் செய்வார்களா??!!

என்னமோ போங்க..

said...

வெற்றி, இணையத்தில் இருந்து புகைப்படம் எடுத்து போடுவதுடன் ஒரு பி.கு போடுவதும் அவசியம் என்பதை புரிந்து கொண்டுள்ளிர்கள். :-))

சில பேர் சுட்டு புத்தகமே போட்டுறாங்க பி.கு. போடாமலே. :-))

said...

வெற்றி!
நம் நாட்டில் தான் இந்த வகைக் காவடி உண்டென நினைக்கிறேன்; நல்லூருக்கும் ஒன்று;இரண்டு வருவதுண்டு; மேலும் சுமார் 2 வருடங்களுக்கு முன் ஜேர்மனியில் ஒருவர்;இக்காவடி எடுத்து; மரம் முறிந்து; அவரும் வேறு இருவர்;படுகாயமடைந்து; கெலி வந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு; நிலமையாகி;இனிமேல் இப்படியான ; எதுவும் இருந்தால் கோவிலையே தடை செய்யவேண்டி வரும் என்ற அச்சுறுத்தலின் பின் ,அடுத்த வருடம்; கைவிடப்பட்டது.பக்தியைக் காட்ட இவை தான் வழியென்றில்லை. பக்தி சிலவகை எல்லையைத் தாண்டக் கூடாது. என்பது என்கருத்து.
யோகன் பாரிஸ்

said...

குமரன்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.