Sunday, September 10, 2006

மனதைப் பாதித்த பதிவு

நேற்று இப்பதிவைப் படித்ததிலிருந்து மனதில் ஏதோ ஒருவித சோகம் சூழ்ந்து கொண்டது. தமிழகத்தில்தான் இக் கொடுமை நடக்கிறது என்பதை அறிந்ததும் சோகம் இன்னும் இரட்டிப்பானது. அதுவும் தாம் பெரியாரின் வாரிசுகள் ,அண்ணாவின் வாரிசுகள் என்று மார்புதட்டிக் கொள்பவர்களினால்தான் தமிழகம் கடந்த 40 ஆண்டுகளாக ஆளப்பட்டு வருகிறது. இருந்தும் இப் பாதகச் செயல்கள் இன்றும் அதாவது 21ம் நூற்றாண்டிலும் நடந்து கொண்டிருப்பது மனவேதனையாகவும் வெட்கமாகவும் உள்ளது. உலகில் வாழும் தமிழர்கள் அனைவரையும் நாணித்தலைகுனிய வைக்கும் செயல்.

சக வலைப்பதிவ நண்பர் கோ.சுகுமாரன் அவர்கள் தனது தளத்தில் மேலளவு வாக்குமூலங்கள் உணர்த்தும் உண்மைகள் எனும் தலைப்பில் தமிழகத்தில் நடந்தேறும் இவ் அநாகரீகச் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று செய்தியாகப் பதிந்துள்ளார்.

மனிதநேயம் உள்ள அன்பர்கள் அனைவரும் இப் பதிவைக் கட்டாயம் படிக்க வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். படித்துவிட்டு , இக் கொடுமைகளைத் தடுக்க தங்களால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர் கோ.சுகுமாரன் அவர்கள் பற்றி ஒரு சில வரிகள்( இவை அவரின் Profileல் அவரே சொல்லியுள்ளவை):
தமிழகம், புதுவையில் மனித உரிமை தொடர்பான பணிகளை மேற்கொள்கிறார். ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது வீரப்பனை காட்டில் சென்று சந்தித்து, ராஜ்குமாரை மீட்ட மூவர் குழுவில் இடம் பெற்றவர்.

22 comments:

said...

Dear Vettri,
Thank you for the link. I really appreciate it. We must spread this story to all the prograssive minded people.

said...

நான் இப்பதிவை ஏற்கனவே படித்து, மறுமொழியும் இட்டு அன்பர் சுகுமாரனுக்கு ஊக்கம் கொடுத்து ஒரு சில வரிகள் எழுதி உள்ளேனய்யா. எனக்கு கண்களே கலங்கிவிட்டது. சொல்லப்போனால், அவர் பதிவு முழுதையும் படிக்கக்கூட எனக்கு தைரியம் இல்லாமல் மனம் உடைந்துவிட்டது.

said...

வெற்றி!21 நூற்றாண்டிலும் இப்படிக் கொடுமையா!!;தமிழன் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது. பதிவை தந்ததற்கு நன்றி!
யோகன் பாரிஸ்

said...

வெற்றி

அந்தப் பதிவைப் பற்றி இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி..

said...

ரகு,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

said...

வெற்றி
அந்தப் பதிவைப் பற்றி இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி.. என்னாலும் முழுப்பதிவையும் படிக்க தைரியம் இன்றி ஆனால் படித்தேன், மனது மிகவும் கனக்கிறது!


அன்புடன்...
சரவணன்.

said...

மாசிலா,
வணக்கம்.

//எனக்கு கண்களே கலங்கிவிட்டது. சொல்லப்போனால், அவர் பதிவு முழுதையும் படிக்கக்கூட எனக்கு தைரியம் இல்லாமல் மனம் உடைந்துவிட்டது. //

உண்மைதான் மாசிலா. மனிதநேயம் உள்ள எவராலும் ஜீரணிக்க முடியாத நிகழ்வுகள். நண்பர் சுகுமாரன் போன்றோரை ஊக்கப்படுத்தி அவர்களுக்கும் அவர்கள் மூலம் இந்த அடக்கப்பட்ட மக்களுக்கும் துணையாக நின்று இக் கொடுமைகளை இல்லாதொழிக்க வேண்டும். நான் கோ.சுகுமாரன் அவர்களின் பதிவைப் பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். முதல்வர் கலைஞர், மற்றும் வைகோ, மருத்துவர் இராமதாசு ஆகியோருக்கு நாளை மின்னஞ்சல் மூலமோ அல்லது தொலைநகல் மூலமோ அனுப்ப உள்ளேன்.

said...

//கோ.சுகுமாரன் அவர்களின் பதிவைப் பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். முதல்வர் கலைஞர், மற்றும் வைகோ, மருத்துவர் இராமதாசு ஆகியோருக்கு நாளை மின்னஞ்சல் மூலமோ அல்லது தொலைநகல் மூலமோ அனுப்ப உள்ளேன்.//
நீர் ரொம்பவும் நல்லவர். உம் குலம் தழைக்க நல்வழி செய்கின்றீர். "என்ன செய்கிறோம் என்பது பெரிதல்ல. எதற்கு அதை செய்கிறோம் என்பதே முக்கியம்." சமுதாயம் என்றென்றும் உமக்கு கடமைப் பட்டாகிவிட்டது. நான் வணங்கும் ஆத்தா உமக்கு துணையிருப்பாள்.
வீர வணக்கம்!
மாசிலா!

said...

அந்தப் பதிவைப் பற்றி இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி..

said...

அந்தப் பதிவைப் பற்றி இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி..

said...

அந்தப் பதிவைப் பற்றி இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி..

said...

மனதிப் பாதித்த பதிவுதான் வெற்றி.

அந்தப்பதிவினைப் பார்க்காதவர்களையும் பார்க்க வைக்கும்
உங்களுக்கு நன்றி

said...

நண்பர் வெற்றி அவர்களுக்கு நன்றி!

இப்பதிவுக்கு வந்த மாசிலா Johan-Paris, Sivabalan, Chandravathanaa மதுமிதா ஆகியோருக்கு நன்றி.

மாசிலா அவர்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்.

said...

யோகன் அண்ணா,
//21 நூற்றாண்டிலும் இப்படிக் கொடுமையா!!;தமிழன் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது//

உண்மைதான், நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறது. ஈழத்தமிழர்களான நாம் எத்தனையோ கொடுமைகளை சிங்களவர்களால் அனுபவித்து வருகிறோம். ஆனால் தமிழகத்தில் தமிழனே தமிழனை அடக்கியாள்வதுதான் கொடுமையிலும் கொடுமை.

said...

நண்பர் சிவபாலன், மற்றும் சந்திரவதனா அக்கா,
உங்கள் வருமைக்கு மிக்க நன்றி.

said...

சரவணன்,

//அந்தப் பதிவைப் பற்றி இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி.. என்னாலும் முழுப்பதிவையும் படிக்க தைரியம் இன்றி ஆனால் படித்தேன், மனது மிகவும் கனக்கிறது!//

உண்மைதான். என்றுதான் இக் கொடுமைகள் இல்லாதொழியுமோ!

said...

நல்ல பணி ஆற்றியுள்ளீர்கள் வெற்றி. கிணற்றுத்தவளையாய் தமிழகத்தில் தலித் கொடுமைகள் இல்லை, பீஹாரும் ஆந்திராவும்தான் என இருந்தவர்களை உலுக்கும் பதிவு. நாமெல்லோரும் வெட்கப்பட வேண்டிய நிகழ்வுகள். இன்று கொள்கைகள் கோஷம்போட மட்டும்தான் என்பதை நிதர்சனமாக்கிய பதிவு.

said...

மாசிலா,

//நான் வணங்கும் ஆத்தா உமக்கு துணையிருப்பாள்.
வீர வணக்கம்!//

மீண்டும் வந்து என்னை ஆசீர்வதித்தமைக்கு மிக்க நன்றிகள். எம்மினத்தில் புரையோடிக்கிடக்கும் இந்த சாதி வெறி எனும் குப்பையை துப்பரவு செய்ய வேண்டியது எம்மினத்தவர் அனைவரினது கடமையுமல்லவா? நண்பர் சுகுமாரன் போன்றோரை ஊக்கிவித்து , இப்படியான கொடுஞ்செயல்களை அனைவரும் அறியச்செய்யும் உதவியைக் கூட நாம் செய்யாவிட்டால், நாம் தமிழரெனச் சொல்லலாமோ?

said...

வெற்றி,

சக மனிதர்கள் குடிக்க தண்ணீரெடுத்தமைக்காக பொதுக்கிணற்றில் மலத்தைக் கொட்டியவர்களை என்ன செய்வது? தமிழ்நாட்டில் இது மாதிரிக் கொடுமைகள் இன்னும் இருப்பதை வெளிக்காட்டிய தி.ரு.சுகுமாரனுக்கு
நன்றிகள்.

பாதிக்கப்பட்டவர்களது இடத்தில் என்னை வைத்துப் பார்க்க்கின்ற போது கொடுமையின் கேவலம் உறைக்க சுகுமாரன் பதிவை அதிர்ச்சி+வெட்கத்தில் முழுமையாய்ப் படித்து முடிக்க இயலவில்லை.

மனிதன் மனிதனாய் நடந்து அடுத்தவரை மனிதராய் நடத்துவதற்கு பதிலாக வெட்கக்கேடான செயல்!

எளியாரை வலியார் வாட்டினால் வலியாரை தெய்வம் வாட்டும்!

said...

மதுமிதா,

//அந்தப்பதிவினைப் பார்க்காதவர்களையும் பார்க்க வைக்கும்
உங்களுக்கு நன்றி//

இக் கொடுமையைப் பலரும் அறிந்து , இக் கொடுமைகளை இல்லாதொழிக்க தங்களாலான முயற்சியை மேற்கொள்வார்கள் எனும் நம்பிக்கையில் தான் இதைப்பற்றித் தனிப்பதிவு போட்டேன். நண்பர் சுகுமாரனுக்கும் அவரது அமைப்பினருக்கும் தான் நாம் நன்றிக்கடமைப்பட்டுள்ளோம்.

said...

மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய அருமை நண்பர் கோ.சுகுமாரன் அவர்களே,

//நண்பர் வெற்றி அவர்களுக்கு நன்றி!//

நாமல்லவா தங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். எத்தனை இடர்களுக்கு மத்தியில் நீங்கள் உங்களின் இந்த நற்பணியைச் செய்கிறீர்கள் என்பது நான் அறிவேன். தங்களின் பணி மகத்தானது. தங்கள் போன்றோர்க்கு உலகில் வாழும் முழுத் தமிழினமும் நன்றிக்கடமைப் பட்டுள்ளது என்றால் மிகையாகாது. தங்களின் இந்த அரிய பணிக்கு என்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமாயின் அதைச் செய்ய நான் தயாராகவுள்ளேன். என் மின்னஞ்சல் முகவரி என் தளத்தில் உள்ளது.

said...

மணியன் ஐயா,
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
//நல்ல பணி ஆற்றியுள்ளீர்கள் //

உண்மையில் நண்பர் சுகுமாரனுக்கும் அவர்தம் அமைப்பினர்க்கும்தான் இந்தப் பாராட்டுக்கள் சேர வேண்டும்.