Friday, January 26, 2007

சிங்கப்பூர் செய்தது சரியா?

சிங்கப்பூர் நேற்று இரு ஆபிரிக்க இளைஞர்களைத் தூக்கிலிட்டிருக்கிறது. போதைவஸ்து கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதோ BBC online இல் இருந்து எடுத்த செய்தியைக் கீழே பாருங்கள்.

Singapore has executed two African men for drug smuggling after rejecting appeals for clemency by Nigeria's president, the UN and rights groups. Iwuchukwu Amara Tochi, 21, of Nigeria, and 35-year-old Okeke Nelson Malachy, a stateless African, were hanged at dawn.

A small group of activists held an overnight vigil outside the prison.
Singapore has some of the strictest drugs laws in the world and a long history of ignoring pleas for clemency from foreign governments.

Tochi was arrested at the airport in Singapore in 2004, carrying almost a million dollars worth of heroin.
Malachy was convicted as the intended recipient of the drugs.

'Duty'

Both men were hanged at around 0600 (2200GMT Thursday) at Changi Prison, officials said.

About 10 activists held an overnight vigil outside the prison compound, hanging a football shirt on the wall as a mark of Tochi's love of the game.

He maintained he had gone to Singapore to take part in a football tournament.

On the eve of their execution, the Singapore government released a letter Prime Minister Lee Hsien Loong had sent to Nigeria's President Olusegun Obasanjo.

"Mr Tochi's family will find Singapore's position difficult to accept, but we have a duty to safeguard the interests of Singaporeans, and protect the many lives that would otherwise be ruined by the drug syndicates," he wrote.

Mr Obasanjo, along with the UN and human rights groups, had appealed for restraint.

Singapore is believed to have one of the world's highest rates of execution per capita, the BBC's Andrew Harding reports from the tiny city state.

Just over a year ago, the Australian government angrily condemned the hanging of one of its citizens convicted on drug trafficking charges.

19 comments:

said...

மிகச் சரி!

தன் ஊரை சுத்தமாய் வைத்திருக்க அவர்கள் செய்யும் விஷயம் இது.

கொட்டை எழுத்தில் போட்டிருப்பார்களே, போதை மருந்துக்கு தூக்கு தண்டனை கிடைக்கும்னு.

படிக்காத பயலுவளோ?

said...

BNI,

/* மிகச் சரி */

உங்களின் கருத்தோடு நான் உடன்படுகிறேன். நிச்சயமாக இப்படியான குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், மரண தண்டனை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடுங்காவல் சிறைவாசம் போன்ற தண்டனைகள் OK

said...

சரிதாங்க. அதுதான் விதிமுறைகள், அதுக்கு தலைவணங்கி நடக்கறாங்க. இது எல்லாம் தெரிஞ்சே நடக்கிற தப்புகள். ஒரு நாட்டில் தப்பு செய்து அது ருசுவாகி விட்டால் அந்நாட்டு சட்டதிட்டங்களின் படி தண்டனை கிடைக்கத்தான் கிடைக்கும்.

சின்னச் சின்ன தப்புகளுக்கே தண்டனை தர நாடுங்க அது. அதுனாலதான் நம்ம பசங்க குப்பை போடாம இருக்காங்க.

வட்டியும் முதலுமா ப்ளேனில் இருந்து இறங்கிய உடன் நம்ம விமான நிலையத்தில் இருந்து இந்த பொதுச்சேவையை ஆரம்பிக்கறாங்க.

சரி விடுங்க. பதிவு ஹைஜாக் ஆயிடப் போகுது.

said...

சரிதான்.

ஒரு முறை ஒரு அமெரிக்க இளந்தாரியை ஒரு சிறு குற்றத்திற்காக மூங்கில்குச்சி அடி கொடுத்தார்களே.. அமெரிக்க ஜனாதிபதி வரை வேண்டுகோள் வைத்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

சட்டம் என் கையில் என்று ஆளாளுக்கு எடுத்து கம்பு சுழற்றுவதால்தான் இந்தியாவில் குற்றவாளிகள் எல்லாம் மந்திரிகள் ஆக முடிகிறது.

said...

நூற்றுக்கு நூறு சரி.
இங்கு செய்தியில் சொன்ன தகவல் இது.சிங்கப்பூர் மக்களை பாதுகாப்பதே முதல் கடமை.அதற்கு இடையூறு என்று வந்தால் யார் சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.
இத்தனைக்கும் நைஜீரியா பிரதமரோ/பிரசிடெட்டோ விடுத்த கடிதத்துக்கும் இதே பதில் தான்.
பணம் சம்பாதிக்க இங்கு வழிகள் அதிகம்--நேர்மையான வழியில்.

said...

//வட்டியும் முதலுமா ப்ளேனில் இருந்து இறங்கிய உடன் நம்ம விமான நிலையத்தில் இருந்து இந்த பொதுச்சேவையை ஆரம்பிக்கறாங்க.//

நான் சிங்கையில் இருந்து திரும்புகையில், விமானத்திலேயே இந்த பொதுச்சேவை தொடங்கியதைப் பார்த்தேன்!

ஒன் மோர் ப்ராண்டி, ஒன் மோர் ப்ராண்டி என என் சக பயணி தொந்தரவு செய்ய ஆரம்பிக்க, எங்கள் பக்கம் வருவதையே நிறுத்தி விட்டார், பணிப்பெண்!

:))

said...

//சட்டம் என் கையில் என்று ஆளாளுக்கு எடுத்து கம்பு சுழற்றுவதால்தான் இந்தியாவில் குற்றவாளிகள் எல்லாம் மந்திரிகள் ஆக முடிகிறது.//

ரொம்பச் சரி.

குற்றவாளிகள் எல்லாம் கூட....ன்னு இருக்கலாம்:-)

said...

தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்தான்,
ஆனால் மரணதண்டனை என்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். சட்டத்தின் பெயரால் செய்யப்படும் ஒரு காட்டுமிராண்டித்தனம்

said...

இ.கொ,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

/* சின்னச் சின்ன தப்புகளுக்கே தண்டனை தர நாடுங்க அது.*/

உண்மை.

said...

தூக்குத்தண்டனையெல்லாம் சரிதானுங்க. ஆனா இதே மாதிரி நைஜீரியாக்காரங்களை இந்தியாவும் உள்ளே வெச்சாங்க. என்ன ஆனாங்க? அதென்ன நைஜீரியாக்காரங்க எல்லாம் போதை வஸ்துவுலயே மாட்டுறாங்க?

said...

ஓரிரு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவரை (வியட்நாமியர்) சிங்கப்பூரில் இதே குற்றத்திற்காகத் தூக்கிலிட்டார்கள்.

இதே போல் இந்தோனீசியாவில் அவுஸ்திரேலியத் தமிழ் இளைஞர் (இலங்கை வம்சாவளி 26வயது மயூரன்) இதே குற்றத்திற்காகத் தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கிறார். இப்படிக்கடுமையான சட்டதிட்டங்கள் இருந்தும் குற்றம் விளைவிப்பவர்கள் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.

said...

அருமை நண்பர் பாலபாரதி அவர்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கருத்து.

--------------------------------
மரணதண்டனை என்பது தவறு தான். பழிக்கு பழி என்பதோ, கண்ணுக்கு கண் என்பதோ ஒவ்வாத நிலை.
மாறாக உயிருடன் வைத்து அந்த தவற்றை உணரும்படியான.. ஆகக்கொடிய தண்டனை என்றாலும் எனக்கு ஓகே தான்.

ஆனால் என்ன செய்வது...?

WWF ரசிக்கப்படும் உலகில் இப்படியான மனித் நேயத்தை எதிர்பார்பது கூட அறிவிலித்தனமாகத்தான் தோன்றும். :-(

--
balabharathi,

said...

திருவடியான்,

/* சட்டம் என் கையில் என்று ஆளாளுக்கு எடுத்து கம்பு சுழற்றுவதால்தான் இந்தியாவில் குற்றவாளிகள் எல்லாம் மந்திரிகள் ஆக முடிகிறது.*/

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. நீங்கள் சொல்வது போல் இக் குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டும்தான். ஆனால் மரணதண்டனை என்பது மிகவும் மோசமான தண்டனை என்பதே என் கருத்து. மரணதண்டனை புழக்கத்தில் இருக்கும் நாடுகளில் குற்றச் செயல்கள் இல்லாது போய்விட்டனவா, என்ன?

said...

/* நூற்றுக்கு நூறு சரி.
இங்கு செய்தியில் சொன்ன தகவல் இது.சிங்கப்பூர் மக்களை பாதுகாப்பதே முதல் கடமை.அதற்கு இடையூறு என்று வந்தால் யார் சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.*/

வடுவூர் குமார்,
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. குமார், சட்டங்கள் மக்களைப் பாதுகாப்பப்தற்கும், குற்றம் புரிந்தவர்களைத் தண்டித்து திருத்துவதற்கும் தானே. ஆக குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதன் மூலம் அவர்கள் தம் தவறை உணர்ந்து திருந்தி வாழக் கூடிய சந்தர்ப்பத்தை பறிப்பதாகத்தானே அமைகிறது. உலகில் யாரும் குற்றம் புரிவதில்லையா? குற்றம் புரிந்தவர்கள் திருந்தி வாழ்வதில்லையா? இப்படி ஒருவரின் உரிமையையும் உயிரையும் சட்டத்தின் பெயரால் பறிப்பதும் ஒரு மனிதாபிமானமற்ற செயல்தானே, இல்லையா?

said...

வெற்றி

"மரணதண்டனை" என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாத விசயம்..

மரணதண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்துக்கொள்கிறேன்..

said...

SK ஐயா,
/* நான் சிங்கையில் இருந்து திரும்புகையில், விமானத்திலேயே இந்த பொதுச்சேவை தொடங்கியதைப் பார்த்தேன்!
ஒன் மோர் ப்ராண்டி, ஒன் மோர் ப்ராண்டி என என் சக பயணி தொந்தரவு செய்ய ஆரம்பிக்க, எங்கள் பக்கம் வருவதையே நிறுத்தி விட்டார், பணிப்பெண்! */

ஹிஹிஹி... உண்மை. நானும் பல இடங்களில் நம்மவர்களின் இப்படியான கூத்துக்களைப் பார்த்திருக்கிறேன்.:)

said...

வெற்றி!
சிங்கப்பூர் உலகில் குற்றம் குறைந்த நாடுகலில் முதன்மையான நாடு. மகாத்மா சொன்ன நள்ளிரவில் நகையுடன் ஓர் பெண் நடமாடக் கூடியதாக உள்ள நாடு. அதை அனுபவமாகக் கண்டவன்.
இதன் காரணம் குற்றம் செய்தால் எவருமே! தப்பமுடியாது. என்ற பயம் ஒவ்வொரு சிங்கப்பூரியனிலும் உள்ளது. அத்துடன் கடமை,கண்ணியம் மிக்க பொலிஸ் துறை...
இவற்றையெல்லாம் மீறி அப்பபோ ஒரு குற்றம் நடக்கிறது. இவ்வளவு கடுமையான சட்டம் இருக்கு எனத் தெரிந்தும் குற்றம் புரியத்துணிகிறார்கள் என்றால் ;இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற கோணத்தில் பார்த்தால்; கடும் தண்டனைகள் தேவை போல்தான் உள்ளது.
சவூதியில் களவுக்குக் கையை வெட்டுவதால் தான் கடையைப் பூட்டாமல் தொழுகைக்குப் போகமுடிகிறது.
எனினும் மரணதண்டனை...பற்றிப் பார்க்கும் போது; போதைப் பொருள் கடத்துவது விற்பது....பல்லாயிரம்
கொலைக்குச் சமமானது;அத்துடன் எதிர் காலச் சமுதாயத்தையே அழிப்பது....இதை நிறுத்த வேண்டுமா??
இல்லையா?? ஒரு சிலரின் சுகபோக வாழ்வுக்கு எத்தனை சின்னஞ்சிறுசுகள்..மானத்தை விற்கின்றார்கள்;உயிரையே விடுகிறார்கள்.கவலை தரவில்லையா??வாழ இதைத் தவிர வழியில்லையா??
சிங்கபூரில் 15 வருடங்களுக்கு முன் ஒரு அமெரிக்க தொழிலதிபரின் மகனுக்கு; சவுக்கடித்தண்டனை தீர்ப்பானது. சுவரில் "கிறவிற்ரி"- கிறுக்கியதற்காக அப்போ! றீகனேன நினைக்கிறேன்; பிரதமரைத் தொடர்பு கொண்டார். சர்வ வல்லமைபடைத்த அந்தத் தொழிலதிபரின் மகனைத் தண்டனையில் இருந்து காப்பற்ற; ஆலால் பிரதமர்(சிங்கப்பூரின் தந்தையெனப் போற்றப்பட்டவர்) மறுத்துவிட்டார். அத்துடன்
எனது உள்ச் சட்டவிவகாரங்களில் தலையிடுவதைத் தான் விரும்பவில்லை என ரைம்ஸ் சஞ்சிகைக்குப் பேட்டியும் கொடுத்தார்.தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இன்று கொலைகள் குறைவாக இருப்பதற்கு, இந்த மரண தண்டனைப் பயமும் காரணமாக இருக்கலாம்.
மரண தண்டனைகள் இருக்க கொலைகள் நடக்குதென்பதால்; அதை நீக்குவது; வண்டிக்குப் பிறேக் இருந்தும் விபத்து நடக்குதே! என்பதால் பிறேக்கை நீக்கிவிட்டு வண்டியோட்டுவதற்கு ஒப்பானது.
மேலும் இலங்கை;இந்தியா;பாகிஸ்தா,பங்களாதேஸ்;பிலிப்பைன்ஸ்;மெக்சிகோ;கொலம்பியா,பிறேசில்;பல ஆபிரிக்க நாடுகளில் கொலைக் கைதிகள்; சிறையில் இருந்தே கூட்டத்தைவைத்து ;சாட்சிகளைக் கொலை செய்கிறார்கள்.
ஆகவே! மனிதாபிமானம் பார்க்கையில்; அதன் பாதிப்பையும் பார்க்க வேண்டியுள்ளது.மனித உயிரின் மகிமை அவர்களுக்குத் தெரியவில்லை.
அதனால் ஜோர்ச் புஸ்சானாலும்; கொலை புரிந்தால் ;அதை சரியாக ,நாயத்துடன் நிரூபித்தால் ;
எவருக்குமே வளைந்து கொடுக்காத சட்டமாக இருந்தால் .மரணதண்டனை தப்பில்லை.
சமீபத்தில் யூனியர் விகடனில் படித்தது; காமவியாதி கொண்ட கணவன்; தன் மனைவியிடம் அவள் முந்திய தாரத்துப் 13 வயது மகளையும்; கலவிக்கு விடும்படி ஆக்கினை கொடுக்கிறான்;அவளோ! இந்த
மிருகம் வாழ்ந்தென்ன? செத்தென்ன? என நினைத்து; தலையில் அம்மிக்குழவியால் போட்டு முடிக்கிறாள்;
நேரே பொலிஸ் சென்று விபரம் கூறி..தன்னைத் தூக்கில் போடுங்கள்..எனக் கேட்கிறாள்.
அந்த ஏழைப் பெண் தன் குற்றத்திற்குத் தண்டனையை வாயால் கேட்கிறாள்; கொலைகாரி எனும் பட்டம் சுமந்து வாழமுடியாது எனும் தவிப்பு.
ஆனால் வசதி படைத்தோர் தான் ;மனிதாபிமான மாமணிகள் பின் போய் ஒழிக்கிறார்கள்.
மரண தண்டனை வேண்டும். கோழி திருடியவர்களுக்கல்ல!; சக மனிதனைக் கொலை செய்தவர்களுக்கு!
கொலை செய்யத் தூண்டியவர்களூக்கும்.சக மனிதனின் மரணத்துக்குக் காரணமாக இருப்பவர்களுக்கும்.
யோகன் பாரிஸ்

said...

/* குற்றவாளிகள் எல்லாம் கூட....ன்னு இருக்கலாம்:-)*/

துளசியம்மா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

----------------------

ஆதிபகவன்,
/*தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்தான்,
ஆனால் மரணதண்டனை என்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். சட்டத்தின் பெயரால் செய்யப்படும் ஒரு காட்டுமிராண்டித்தனம் */
உங்களின் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடும்.
-------------------------------
/* அதென்ன நைஜீரியாக்காரங்க எல்லாம் போதை வஸ்துவுலயே மாட்டுறாங்க? */

இளா(ILA), வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. நியாயமான கேள்வி. ஆனால் இக் கேள்விக்கு என்னிடம் விடை இல்லையே!
--------------------------

said...

கனக்ஸ்,
/*இப்படிக்கடுமையான சட்டதிட்டங்கள் இருந்தும் குற்றம் விளைவிப்பவர்கள் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள். */

சிந்திக்கப்பட வேண்டிய நல்ல கருத்து.
------------------------------
asalamone
/*சிங்கப்பூர் அரசின் நடவடிக்கை பாராட்டுகள். */

இப்படியான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் மரணதண்டனை சரியில்லை என்பதே என் கருத்து. ஒருவர் குற்றம் செய்தால் அவரைத் தண்டித்து திருத்துவதற்குத்தான் சட்டங்கள் இருக்க
வேண்டுமே தவிர ஒரு உயிரைப் பறிப்பதற்கல்ல.
--------------------------
பாலபாரதி
/*மாறாக உயிருடன் வைத்து அந்த தவற்றை உணரும்படியான.. ஆகக்கொடிய தண்டனை என்றாலும் எனக்கு ஓகே தான்.*/
அருமையாகச் சொன்னீர்கள். இதுதான் என் நிலைப்பாடும்.

/* WWF ரசிக்கப்படும் உலகில் இப்படியான மனித் நேயத்தை எதிர்பார்பது கூட அறிவிலித்தனமாகத்தான் தோன்றும்*/

சோகமான உண்மை.
---------------------------------
யோகன் அண்ணை,
நீங்கள் சொல்வது சரி. இப்படியான கடும் சட்டங்களால் இந் நாடுகளில் குற்றச் செயல்கள் குறைவு. அதேநேரம் ஒருவன் ஒருமுறை தவறு செய்தால் அவன் உயிரையே பறிப்பது மனிதாபிமானமற்ற செயல் இல்லையா? ஒருவன் தன் தவறை உணர்ந்து திருந்தி நடக்க மாட்டானா?