அன்பர்கள் கட்டளை ஆறு!
ஆண்டவன் அன்பர்கள் கட்டளை ஆறு. அன்பர்கள்
சுகா மற்றும் மலைநாடான் ஆகியோர் என்னை இந்த ஆறுப் பதிவுக்கு அழைத்திருந்தனர். முதலில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நண்பர் சுகா அவர்கள் என்னை அழைத்த பதிவில் SK அய்யா அவர்களையும் அழைத்திருந்தார்கள். SK அய்யா அவர்களும் சுகாவின் அழைப்பை ஏற்று கவிநயத்துடன் பதிவிட்டிருந்தார்கள். SK அய்யாவின் பதிவைப் பார்த்ததும் , பறையாமல்[பேசாமல் என்பதற்கு இணையான யாழ்ப்பாணச் சொல்] நண்பர் சுகாவிடம் எனக்கு விடுத்த அழைப்பைத் திருப்பிப் பெறுமாறு கேட்டுக்கொண்டால் என்ன என ஓர் எண்ணம் உதித்தது. காரணம், SK அய்யா அவர்களின் தமிழ் போல் என்னால் எழுத முடியுமா? அவரின் தமிழறிவுக்கு முன் நான் nothing. நான் இப்படிக் குழம்பியிருந்த நேரத்தில்
நாகை சிவா அவர்களின் பதிவு கண்ணில்பட்டது. சரி, அவரின் ஆறுப் பதிவு போல பதிவு போடலாம் என தீர்மானித்தேன். எப்படி எழுதுவதென்பதை முடிவெடுத்த பின் எதை எழுதுவது, எதை விடுவது என்பதில் குழப்பம். எனினும் ஆறுப்பதிவின் விதியை மீறக்கூடாதென்பதற்காக, பிடித்த பல விடயங்களைக் குறிப்பிட முடியவில்லை என்பதையும் இங்கே நினைவு கூர விரும்புகிறேன்.
- படித்ததில் பிடித்த தமிழ் நூல்கள்
- குறளோவியம்
- சங்கத் தமிழ்
- வியாசனின் உலைக்களம்
- தொல்காப்பியப் பூங்கா
- வனவாசம்
- அவளும் அவனும்
நூலாசிரியர் : கலைஞர் மு. கருனாநிதி.
நூலாசிரியர் : கலைஞர் மு.கருனாநிதி
நூலாசிரியர் : புதுவை இரத்தினதுரை
நூலாசிரியர் : கலைஞர் மு. கருனாநிதி
நூலாசிரியர் : கவியரசு கண்ணதாசன்
நூலாசிரியர் : நாமக்கல் இராமலிங்கம் - சந்திக்க விரும்பும் நபர்கள்
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- நெல்சன் மண்டேலா
- பழ. நெடுமாறன்
- முத்துவேலர் கருனாநிதி
- மெல்லிசை மன்னர் விசுவநாதன்
- காணாமல் போன என் பால்ய நண்பன்
Nursery வகுப்பிலிருந்து ஆண்டு 6 வரை என்னுடன் படித்த என் அயல்வீட்டு நண்பன். பல வருடங்களுக்கு முன் ஈழத்தில் எமது ஊர் சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பல இளைஞர்களை கைது செய்யப்பட்ட போது இவரும் கைது செய்யப்பட்டார். இது வரை இவருக்கு என்ன நடந்தது, உயிரோடு இருக்கிறாரா என்றே தெரியாது இன்னும் வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர் இவனை ஈன்றவர்களும் அவனது உடன்பிறப்புக்களும். - பிடித்த (இந் நூற்றாண்டின்) தமிழ்க் கவிஞர்கள்
(பாரதி , பாரதிதாசன் தவிர்த்து)
- கவியரசர் கண்ணதாசன் [தமிழகம்]
- புதுவை இரத்தினதுரை [தமிழீழம்]
- கவிஞர் காசி ஆனந்தன் [தமிழீழம்]
- வீரமணி ஜயர் [தமிழீழம்]
- நாமக்கல் இராமலிங்கம் [தமிழகம்]
- கவிக்கோ அப்துல் ரகுமான் [தமிழகம்]
- போனதில் பிடித்த நகரங்கள்
(Toronto தவிர்த்து)
- யாழ்ப்பாணம் - Jaffna [தமிழீழம்]
- நியூயோர்க - New York [அமெரிக்கா]
- பாரீஸ் - Paris [பிரான்ஸ்]
- கவானா - Havana [கியூபா]
- உரோம் - Rome [இத்தாலி]
- (f)பிராங்போர்ட் - Frankfurt [ஜேர்மனி]
- போக விரும்பும் இடங்கள் (இதுவரை போகாத இடங்கள்)
- இந்தியா [தமிழகம்]
- எகிப்து
- சீனா
- எதியோப்பியா
- ஸ்பெயின்
- பிறேசில்
- பிடித்த தமிழ்ப்பாடல்கள்
குளியலறையில் குளிக்கும் போதும் தனியாக வண்டி ஓட்டிச்செல்லும் போதும் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல்கள்.(பாடல்களைக் கேட்டு மகிழ பாடல்களின் மேல் கிளிக் செய்யுங்கள்.)- கற்பக வல்லியின் பொற்பதங்கள் பிடித்தேன்
- சிறீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
- துள்ளாத மனமும் துள்ளும்
- பொன் என்பேன் சிறு பூவென்பேன்
- முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
- எனக்காகவா நான் உனக்காகவா
ஈழத்து இசைமேதை வீரமணி அய்யர் அவர்கள், சென்னை மயிலாப்பூரில் உள்ள கபிலேசுவரர் ஆலயத்தில் உள்ள இறைவனைப் போற்றி இயற்றிய பாடல். திருமதி விசாலாச்சி நித்தியானந் அவர்களின் குரலில்.
கவியரசர் கண்ணதாசன், இசைஞானி இளையராஜா, ஜேசுதாஸ் ஆகியோரின் கூட்டுமுயற்சியில் உருவானது இப்பாடல்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், A.M.ராஜா, அவரது துணைவியார் திருமதி.ஜிக்கி ஆகியோரின் கூட்டுமுயற்சியில் உருவான பாடல்.
கவியரசர், மெல்லிசை மன்னர்கள், P.B.சிறீனிவாஸ் , திருமதி. ஜானகி ஆகியோரின் கூட்டுமுயற்சியில் வந்த பாடல்
பாடலாக்கம் : கவியரசர் , இசை : மெல்லிசை மன்னர், பாடியவர்கள் :- T.M. செளந்தரராஜன், P. சுசீலா
39 comments:
உங்களுக்குப் பிடித்த பாடல்கள் எல்லாமே நன்றாக உள்ளது வெற்றி! அதிலும் சுட்டி கொடுத்தது மிக்க நன்று.. பாட்டைக் கேட்டுக் கொண்டே பின்னூட்டம் போடுகிறேன் :)
பறைதல் என்னும் பதத்தைத் தமிழ் நாட்டிலும் நீங்கள் சொல்லும் பொருளில் பயன்படுத்துவோம்.
ஆட்சேபணை இல்லையெனில் ஆங்காங்கே உள்ள எழுத்துப் பிழைகளைச் சுட்டலாமா? (கருணாநிதி, முணுமுணுக்கும்)
அன்பு நண்பரே!
அழகாக, அமைதியாக, அதே சமயம் ஆழமாக ஆறு போடத் தெரிந்த நீங்கள் என்னை ஏன் இழுக்கிறீர்கள்!!?
வலைப்பூவில், என்னைப் பொறுத்தவரை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதே கிடையாது!
ஏதோ ஒரு பலத்துடந்தான் இங்கு வந்திருக்கிறோம்.
அவரவர் பலம் அவர்க்கு!
அத்தனை ரசனையும் அருமையான தேர்வுகள்!
நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆறு பாடல்களும் எனக்கும் பிடித்தவையே!
SK அய்யா,
//என்னை ஏன் இழுக்கிறீர்கள்!!?
வலைப்பூவில், என்னைப் பொறுத்தவரை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதே கிடையாது! //
தங்களை வேண்டும் என்று இக்கட்டில் மாட்டுவது என் நோக்கமல்ல. உங்களின் மீதும், உங்களின் தமிழறிவு மீதும் நான் வைத்துள்ள மரியதையின் வெளிப்பாடே. நான் ஏற்கனவே முன்னைய பதிவென்றில் சொல்லியிருந்தது போல் , உங்கள் தமிழுக்கு நான் பரம இரசிகன்.
//அத்தனை ரசனையும் அருமையான தேர்வுகள்!//
மிக்க நன்றி.
//நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆறு பாடல்களும் எனக்கும் பிடித்தவையே! //
உண்மைதான். காலத்தால் அழியாத கானங்கள் இவை.
வெற்றி..
வண்ணமயமான பதிவுக்கு நன்றி.. நிறைய புத்தகங்கள் படித்துள்ளீர்கள் போல ..
பாடல்கள் தேர்வும் அருமை.. மியூஸிக் இண்டியாவில்.. ஜிக்கி அவர்களின் பாடல்களை தேர்ந்து இரவினில் கேட்பதுண்டு.. அந்நேரம் எதார்த்தங்கள் தொலைந்து சொர்க்கமாக இருக்கும்.. நினைவுபடுத்திவிட்டீர்கள்.. கேட்க ஆரம்பித்துவிட்டேன்..
வாழ்த்துக்கள்
சுகா
வெற்றி!
உங்கள் ஆறின் ஆழமும், அனுபவ ஆழமும் அற்புதம்.
பொன்ஸ்,
//உங்களுக்குப் பிடித்த பாடல்கள் எல்லாமே நன்றாக உள்ளது வெற்றி! அதிலும் சுட்டி கொடுத்தது மிக்க நன்று.. //
மிக்க நன்றி.
//பாட்டைக் கேட்டுக் கொண்டே பின்னூட்டம் போடுகிறேன் :)//
:))
//பறைதல் என்னும் பதத்தைத் தமிழ் நாட்டிலும் நீங்கள் சொல்லும் பொருளில் பயன்படுத்துவோம்//
உண்மையாகவா? இச் சொல் தமிழகத்தில் புழக்கத்தில் இல்லை என்றே இதுவரை எண்ணியிருந்தேன். யாழ்ப்பாணத்திலும், கேரளாவிலும் தான் இச் சொல் புழக்கத்தில் உள்ளதென நினைத்திருந்தேன். தகவலுக்கு மிக்க நன்றிகள்.
//ஆட்சேபணை இல்லையெனில் ஆங்காங்கே உள்ள எழுத்துப் பிழைகளைச் சுட்டலாமா? (கருணாநிதி, முணுமுணுக்கும்//
ஆட்சேபனையா? பொன்ஸ் எனது முதற் பதிவிலேயே நான் தெளிவாகச் சொல்லியிருந்தேனே! நான் தமிழ் மணத்திற்கு வந்ததே தெரிந்த தமிழறிவை தக்க வைத்துக் கொள்ளவும், என் தமிழறிவை வளர்த்துக் கொள்ளவும் தான். நான் தமிழ் படித்தது ஆக ஆண்டு 6 வரை தான். எனவே நீங்கள், SK அய்யா, இராகவன், குமரன் போன்றோர் நான் விடும் இலக்கணப் பிழைகள், சொற்பிழைகள், எழுத்துப்பிழைகள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டுவீர்களென எதிர்பார்த்தேன். எதிர்பார்க்கிறேன். எனவே அவ் வகையில் நீங்கள் பிழைகளைச் சுட்டிக்காட்டியது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.மிக்க நன்றி. எதிர்காலத்திலும் என் பதிவுகளில் வரும் பிழைகளை, குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுமென மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பி.கு:- அடடா, நீங்கள் இப்போது அமெரிக்காவிலா இருக்கிறீர்கள்? இதுவரை தெரியாமல் போச்சே! உங்களிடம் நேரில் வந்தே தமிழ் கற்றிருப்பேனே!
சுகா,
//நிறைய புத்தகங்கள் படித்துள்ளீர்கள் போல .. //
உண்மை. சிறு வயதிலிருந்தே இப் பழக்கம் உண்டு.
//பாடல்கள் தேர்வும் அருமை//
நன்றி.
//அந்நேரம் எதார்த்தங்கள் தொலைந்து சொர்க்கமாக இருக்கும்.. //
உண்மைதான் சுகா. இப்படியான பாடல்களைக் கேட்கும்க போது எண்ணப் பறவை எங்கெங்கோ சிறகடித்துப் பறக்கும்.
அந்தப் பாடல்களை எனக்கும் பிடிக்கும்
மலைநாடான்,
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
//அவரின் தமிழறிவுக்கு முன் நான் nothing. நான் இப்படிக் குழம்பியிருந்த நேரத்தில் நாகை சிவா அவர்களின் பதிவு கண்ணில்பட்டது.//
ஏங்க வெற்றி, அம்புட்டு மோசமாகவாக இருந்தது.:(((
நல்லா இருங்கு உங்க ஆறு....
இந்தியாவிற்கு விரைவில் வர அன்புடன் அழைக்கின்றேன். சீக்கிரம் வாங்க. வரவேறக தயாராக உள்ளோம்.
அருமையான ஆறு வெற்றி. உங்கள் நண்பர் விரைவில் திரும்ப வேண்டுகிறேன்.
வெற்றி,
6..6..6..மிக அருமை.
நன்றி.
வெற்றி,
ரசித்தேன் !
நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தும் எனக்கும் மிகவும் பிடிக்கும் :)
வெற்றி,
அழைப்பிற்கு நன்றி. கொஞ்சநாளாய் வேலை மென்னியைப் பிடிக்கிறது. இந்த வாரயிறுதியில் பதிவாயிட முயற்சி செய்கிறேன்.
வெற்றி,
நீங்க கூப்பிட்டபடி நானும் ஆறு போட்டிருக்கிறேன் இங்கே பாருங்க.
சந்தரவதனா அக்கா,
வணக்கம்.
/* அந்தப் பாடல்களை எனக்கும் பிடிக்கும் */
உண்மைதான் அக்கா. இப் பாடல்கள் சாகாவரம் பெற்ற பாடல்கள் மட்டுமல்ல எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை.
அழைப்பிற்கு நன்றி வெற்றி. நான் எழுதக் கொஞ்சம் நாட்களாகும். எழுதாமலேயும் போகலாம். பொறுக்கவும்.
நாகை சிவா,
//ஏங்க வெற்றி, அம்புட்டு மோசமாகவாக இருந்தது.:(((//
இல்லை சிவா. மிகவும் அழகாகவும் , எளிமையாகவும் இருந்தது உங்களின் ஆறுப்பதிவு. அதனால் தான் உங்களின் பதிவைப் பின்பற்றினேன். மோசமாக இருந்திருந்தால் உங்களின் பதிவு மாதிரியைப் பயன்படுத்தியிருக்க மாட்டேன் அல்லவா? :))
//நல்லா இருங்கு உங்க ஆறு....//
மிக்க நன்றி சிவா.
//இந்தியாவிற்கு விரைவில் வர அன்புடன் அழைக்கின்றேன். சீக்கிரம் வாங்க. வரவேறக தயாராக உள்ளோம்.//
உங்களின் அன்புக்கும் , தமிழ்ப் பண்புக்கும் நன்றி. வரும் ஏப்பிரல் மாதமளவில் வருவதாக உத்தேசம். இப்போது தென்னிந்தியா பற்றி பல தகவல்களைத் திரட்ட ஆரம்பித்துள்ளேன். பெங்களூரில் இருக்கும் என் மராட்டிய நண்பன் இந்தியாவின் பல பகுதிகளின் படங்கள் அனுப்பியிருந்தார். எங்கு போவது, எதைப் பார்ப்பது போன்ற திட்டங்களை இப்போதே ஆரம்பிச்சாச்சு. பார்ப்போம்.
எல்லாப்பாடல்களைப் பற்றியும் எழுதிவிட்டு அந்தக் கடைசிப் பாடலைப்பற்றி ஒன்றும் எழுதவில்லையே. எனக்கு மிகவும் பிடித்த பாடல். தாராபுரம் சுந்தரராஜன் ஜானகியுடன் (??) பாடியது. எந்த படத்தில் வந்தது?
உங்களுக்குப் பிடித்த பாடல்கள் எல்லாமே எனக்கும் பிடிக்கும்
வணக்கம் வெற்றி...நல்லாயிருக்கு ... உங்களின் தெரிவு ஆறு...நிறைய வாசிச்சு இருக்கிறீர்கள்....வாழ்த்துக்கள்....
குமரன்,
/* அருமையான ஆறு வெற்றி.*/
மிக்க நன்றி.
/* உங்கள் நண்பர் விரைவில் திரும்ப வேண்டுகிறேன். */
குமரன் பிரார்த்தனைக்கு நன்றி. எனக்காக இல்லாவிட்டாலும், அவனது தாயாருக்காக அவன் பற்றிய தகவல்கள் வரவேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனையும். அவனைப் பிரிந்த நாளில் இருந்து ஒழுங்கான உணவின்றி, தூக்கமின்றி அத் தாய் நோயில் வாடுவதைக் கண்கொண்டு பார்க்க இயலாது.
சிவபாலன்,
//6..6..6..மிக அருமை.//
மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன் பாலா,
வணக்கம்.
/* ரசித்தேன் ! */
மிக்க நன்றி.
/* நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தும் எனக்கும் மிகவும் பிடிக்கும் :) */
இப் பாடல்கள் மிகவும் அருமையான பாடல்கள். தெவிட்டாத பாடல்கள்.
சோழ நாடான்,
அழைப்பை ஏற்று ஆறுப்பதிவு போட்டமைக்கு மிக்க நன்றிகள். தங்களின் ஆறுப்பதிவைப் படித்தேன். சுவையாகவும் சுருக்கமாகவும் எழுதியுள்ளீர்கள்.
நன்றி
Thankyou for ur invitation...
I will post it...
செல்வராஜ் அண்ணா,
அழைப்பை எற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றிகள்.
/* நான் எழுதக் கொஞ்சம் நாட்களாகும். */
இப் பதிவு போடுவதற்கு காலக்கெடு ஒன்றும் இல்லை. எனவே உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஆறுதலாகப் போடுங்கள். அவசரம் இல்லை.
நன்றி
வெற்றி,
தலைப்பு அருமை!:) அதோடு தங்கள் ஆறுகளும் படித்தறியச் சுவையாக இருந்தன!
பொன்ஸ்:
//பறைதல் என்னும் பதத்தைத் தமிழ் நாட்டிலும் நீங்கள் சொல்லும் பொருளில் பயன்படுத்துவோம். //
தமிழ் நாட்டில் எந்த ஊரில் இப்படிப் பேசுவர். என்னக்கு இத் தெரிவிப்பு புதிதாயுள்ளது. அறிய ஆவல்.
கனக்ஸ்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
/* எல்லாப்பாடல்களைப் பற்றியும் எழுதிவிட்டு அந்தக் கடைசிப் பாடலைப்பற்றி ஒன்றும் எழுதவில்லையே. எனக்கு மிகவும் பிடித்த பாடல். தாராபுரம் சுந்தரராஜன் ஜானகியுடன் (??) பாடியது. எந்த படத்தில் வந்தது? */
இப்பாடலை வாலி இயற்றி , தாராபுரம் சுந்தரராஜன் , ஜமுனாராணி ஆகியோர் பாடியுள்ளதாக musicindiaonline.com சொல்கிறது. இத் தகவல்களை என்னால் உறுதி செய்து கொள்ள முடியவில்லை. உறுதிப்படுத்தாத தகவலைப் போட விரும்பவில்லை. அதனால்தான் அப்பாடல் பற்றிய விபரங்களை இணைக்கவில்லை.
வெற்றி,
//பி.கு:- அடடா, நீங்கள் இப்போது அமெரிக்காவிலா இருக்கிறீர்கள்? இதுவரை தெரியாமல் போச்சே! உங்களிடம் நேரில் வந்தே தமிழ் கற்றிருப்பேனே! //
சின்னாள் தங்கும் விருந்தாளி நான், என்னை விடுங்க.. முருகனே இங்கே தானே இருக்கிறார். தலைவரைப் (எஸ்கே) பிடியுங்க.. புதுசா ஏதாவது கற்றால் எனக்கும் சொல்லுங்க.. :)
யாழ்த்தமிழன்,
//தமிழ் நாட்டில் எந்த ஊரில் இப்படிப் பேசுவர். என்னக்கு இத் தெரிவிப்பு புதிதாயுள்ளது. அறிய ஆவல். //
எனக்குச் சரியாகத் தெரியாதுங்க.. நான் முழுக்க முழுக்க நகரத்தில் வளர்ந்தேன்.. வட்டார வழக்குகள் எனக்குத் தெரியவே தெரியாது.. ஆனால், இலக்கியங்களிலும் மற்றபடி பொதுவாக பேசும்ப்போதும் இதைப் பயன்படுத்தியது உண்டு..
வெற்றி,
//பி.கு:- அடடா, நீங்கள் இப்போது அமெரிக்காவிலா இருக்கிறீர்கள்? இதுவரை தெரியாமல் போச்சே! உங்களிடம் நேரில் வந்தே தமிழ் கற்றிருப்பேனே! //
சின்னாள் தங்கும் விருந்தாளி நான், என்னை விடுங்க.. முருகனே இங்கே தானே இருக்கிறார். தலைவரைப் (எஸ்கே) பிடியுங்க.. புதுசா ஏதாவது கற்றால் எனக்கும் சொல்லுங்க.. :)
யாழ்த்தமிழன்,
//தமிழ் நாட்டில் எந்த ஊரில் இப்படிப் பேசுவர். என்னக்கு இத் தெரிவிப்பு புதிதாயுள்ளது. அறிய ஆவல். //
எனக்குச் சரியாகத் தெரியாதுங்க.. நான் முழுக்க முழுக்க நகரத்தில் வளர்ந்தேன்.. வட்டார வழக்குகள் எனக்குத் தெரியவே தெரியாது.. ஆனால், இலக்கியங்களிலும் மற்றபடி பொதுவாக பேசும்போதும் இதைப் பயன்படுத்தியது உண்டு..
சின்னக்குட்டி அண்ணை,
வணக்கம்.
வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.
வணக்கம் வெற்றி
உங்களின் ஆறு பதிவு ஒரு மார்க்கமாத் தான் இருக்குது
:-)
நல்ல ரசனைத் தேர்வு. வாழ்த்துக்கள்.
///பறையாமல்[பேசாமல் என்பதற்கு இணையான யாழ்ப்பாணச் சொல்] ///
மலையாள வார்த்தை என்று இதுவரை எண்ணி இருந்தேன்...நீங்களும் பயன்படுத்தி வருகிறீர்களா...
கானா பிரபா,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.
யாழ்த்தமிழன்,
வணக்கம்.
/* வெற்றி,
தலைப்பு அருமை!:) அதோடு தங்கள் ஆறுகளும் படித்தறியச் சுவையாக இருந்தன! */
மிக்க நன்றி.
/* தமிழ் நாட்டில் எந்த ஊரில் இப்படிப் பேசுவர். என்னக்கு இத் தெரிவிப்பு புதிதாயுள்ளது. அறிய ஆவல். */
உங்களின் கேள்விக்கு பொன்ஸ் பதிலுரைத்துள்ளார்கள். சகோதரி பொன்சுக்கு என் நன்றிகள்.
மணிகண்டன்,
அழைப்பை ஏற்றுப் பதிவு போட்டமைக்கு மிக்க நன்றிகள்.
செந்தழல் ரவி,
வணக்கம்.
/* ///பறையாமல்[பேசாமல் என்பதற்கு இணையான யாழ்ப்பாணச் சொல்] ///
மலையாள வார்த்தை என்று இதுவரை எண்ணி இருந்தேன்...நீங்களும் பயன்படுத்தி வருகிறீர்களா... */
பறையாமல் என்பது பண்டைய தமிழ்ச்சொல். பறைசாற்றுதல் என்ற சொல் பறைதல் எனும் சொல்லில் இருந்து வந்ததுதான். பறைசாற்றுதல் என்றால் சகலரும் அறியச் செய்தல். இந்த பறைதல் எனும் சொல் சேர நாட்டில் தான் அதிகம் புழக்கத்தில் இருந்தது. யாழ்ப்பாணத் தமிழர்களில் கணிசமானோர் சேர நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள். அதனால் இச் சொல் இன்றும் யாழ்ப்பானத்தில் புழக்கத்தில் உள்ளது. அதேபோல், தற்போதைய கேரளா மாநிலம் சேரநாட்டின் பகுதியாக இருந்தது. அத்துடன் மலையாள மொழி தமிழ்-சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் இருந்து பிறந்தது. எனவே அச் சொல் கேரளாவிலும் புழக்கத்தில் உள்ளது.
[ரவி, மேலே நான் எழுதியுள்ள விளக்கம் தவறாகவும் இருக்கலாம். இவ் விளக்கம் நான் படித்தறிந்த , கேட்டறிந்த தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது]
நல்ல பதிவு. என்றும் தமிழ் நாட்டு எமது உறவுகள் எப்பபோதும் எமக்குத் தேவை. என்றும் அவர்களின் உதவி எங்களின் தேவை. என்றும் எங்களின் நன்றி எங்களை எங்கள் உணர்வுகளை உணர்ந்தது கொன்டவர்களுக்கு.
Post a Comment