Thursday, June 08, 2006

Quotes of the Day : சும்மா - 1

எனக்குத் தெரிந்த தமிழறிவை தக்க வைத்துக் கொள்ளவும், என் தமிழறிவை வளர்க்கவும் தான் நான் தமிழ்மணத்தில் இணைந்தேன். இணைந்தது ஏப்பிரல் மாதத்தில். ஆனால் இது வரை ஒரு பதிவும் எழுதவில்லை. காரணம் என்ன எழுதுவதென்று குழப்பம். சரி, என்னைப் பற்றி சுருக்கமாக ஓர் அறிமுகப் பதிவை எழுதுவோமென்றால், ஆகக் குறைந்தது மூன்று பதிவுகளாவது எழுதினால்தான் பதிவுகள் தமிழ்மணத்தில் ஏற்றப்படும் என நிபந்தனை வந்தது. ஒரு பதிவுக்கே இவ்வளவு சிரமப்படும் போது, மூன்று பதிவுக்கு நான் எங்கே போவது!. ஒரே ஒரு வழி cut & paste தான். எனக்கு Quotes விரும்பிப்படிக்கும் பழக்கம் உண்டு. அதனால படித்ததில் பிடிதத Quotes ஜ இங்கே பதிகிறேன்.
நன்றி.

அன்புடன்
வெற்றி

"I have not failed. I've just found 10,000 ways that won't work."
- Thomas Alva Edison

"Never give up on something that you can't go a day without thinking about."
- Unknown

"Its not whether you get knocked down. Its whether you get up again."
- Vince Lombardi

"Never regret. If it's good, it's wonderful. If it's bad, it's experience. "
- Victoria Holt, writer

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it."
-Voltaire

19 comments:

said...

வெற்றி....உங்களுக்கு எழுத நேரம் இருந்தால் நீங்கள் சந்தித்த அனுபவங்கள்...பார்த்த விஷயங்கள் குறித்து எழுதலாமே...ஏன் தயக்கம்....

said...

செந்தழல் ரவி,
தங்களின் ஆலோசனைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. நேரமின்மை ஓர் முக்கிய பிரச்சனை. நிச்சயம் நேரம் கிடைக்கும் போது பல விடயங்கள் பற்றி எழுத உள்ளேன்.

மீண்டும் நன்றிகள்.

அன்புடன்
வெற்றி

said...

கலக்குங்க....காத்திருக்கேன்...

said...

வெற்றி புது பதிவிற்கு அரிய வாய்ப்பு :)


http://sukas.blogspot.com/2006/06/blog-post_15.html

இந்த விளையாட்டுக்கு வாங்க.. நான் தான் அநியாயத்துக்கு சுருக்கி எழுதீட்டேன்.. நீங்களாவது நல்லா எழுதுங்க..

said...

வெற்றி, என்னங்க எல்லாம் இங்கிலீஸ்காரன் கோட்டாவே போட்டுட்டீங்க?
தமிழ்ப் பழமொழி ரெண்டு போட்டிருக்கலாமே?

said...

வெற்றி, எனக்கு இந்தப் பொன்மொழி பிடிச்சிருக்குங்க..

//நான் கவிஞனும் இல்லை.
நல்ல இரசிகனும் இல்லை.
வலைப்பதிவுலகில் நான் ஊமையுமில்லை.
//

வரவேற்புகள், வாழ்த்துக்களுடன் :)

said...

கனடாவில் நேரத்தின் பெறுமதி எப்படிப்பட்டது எனபது எல்லோரும்
அறிந்ததே.இருந்தும் நேரம் ஒதுக்கி
சிலவற்றை எழுதலாமே.

said...

இந்தப் பொன்மொழிகளைத் தமிழாக்கி ஒரு பதிவு!
அப்புறம் விட்டுப்போன சில என இன்னுமொரு பதிவு!
ஆக மொத்தம் மூன்று ஆகிவிடும்.
பிறகென்ன!
எழுதித் தள்ளுங்கள்!
உங்களிடம் நிறையத் தகவல்களும், செய்திகளும், நிகழ்வுகளும்,விதயங்களும், விடயங்களும், விஷயங்களும், சமாச்சாரங்களும், சேதிகளும் இருக்கின்றன என்பது உங்களைப் பற்றிய அறிமுகத்திலேயே தெரிகிறதே!!

வாழ்த்துகள்!

said...

வெற்றி!
நான் வாசிப்பதும்;பின்னூட்டுவது மட்டுமே! உங்கள் பின்னூட்டங்கள் படித்துள்ளேன். ஆக்கபூர்வமானதாகவும், அரவணைத்துச் சொல்லுவதாகவும் இருப்பதை அவதானித்துள்ளேன்.நீங்கள் ஆங்கிலத்தில் படித்ததை ,எங்களுக்குத் தரலாம்.மேலும் "குமரனின்" கூடல் பக்கம் சென்றால்;அதில் 08-03- 2006 ல்; "ஈழத்தில் இசைவளர்ச்சியில் நாதஸ்வர தவில் கலைஞர்கள் பங்கு" எனும் கட்டுரை ஒன்று உண்டு. படித்தீர்களோ! தெரியவில்லை. படித்துப் பார்த்துக் கருத்துக் கூறவும்.எனக்கென பக்கம் எதுவும் இல்லை.
யோகன் பாரிஸ்

said...

வெற்றியின் பக்கம் - வலைப்பூவின் தலைப்பே அமர்க்களமாக இருக்கிறது வெற்றி. நீங்கள் மட்டுமன்று; நாங்களும் எப்பொதும் வெற்றியின் பக்கமே. இறைவன் கொஞ்சம் காலம் தாழ்த்துகிறான். நமக்கு வெற்றி அளித்து நம் உடன்பிறவா சகோதரர்களெல்லாம் தங்கள் தாயகம் திரும்பும் நாள் மிக மிக விரைவில் வரும் என்று நினைக்கிறேன். அதற்கே வேண்டுகிறேன்.

வெற்றி, மறந்துவிடாதீர்கள், நீங்கள் வெற்றியின் பக்கம். மகாபாரதத்தில் ஒரு சொலவடை உண்டு. யதோ தர்ம ததோ கிருஷ்ண; யதோ கிருஷ்ண ததோ ஜய: - எங்கே தருமம் இருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான்; எங்கே இறைவன் இருக்கிறானோ அங்கே வெற்றி இருக்கிறது.

said...

என்ன வெற்றி, இப்படி சொல்லிவிட்டீர்கள். எழுதுவதற்கா சங்கதி இல்லை? எழுத வேண்டும் என்று நான் நினைத்துப் பட்டியல் இட்டுள்ளவற்றை எல்லாம் எழுதினாலே இன்னும் ஒரு வருடத்திற்குப் பதிவுகள் போடலாம். ஆனால் நீங்கள் எழுத என்ன இருக்கிறது என்கிறீர்கள். நேரமின்மை என்றால் அது வேறு விதயம். ஆனால் எழுத சங்கதி இல்லை என்றால் நம்பமுடியவில்லை. :-)

said...

சுகா,

//இந்த விளையாட்டுக்கு வாங்க.. நான் தான் அநியாயத்துக்கு சுருக்கி எழுதீட்டேன்.. நீங்களாவது நல்லா எழுதுங்க..//

அழைப்புக்கு மிக்க நன்றிகள். இன்று கட்டாயம் நான் பதிவு போடுகிறேன்.
மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

said...

பொன்ஸ்,
வணக்கம்.

//வெற்றி, என்னங்க எல்லாம் இங்கிலீஸ்காரன் கோட்டாவே போட்டுட்டீங்க?
தமிழ்ப் பழமொழி ரெண்டு போட்டிருக்கலாமே? //

நிச்சயமாக தமிழ்ப் பழமொழிகள் மற்றும் தமிழர்கள் சொன்ன பொன்மொழிகள் எல்லாம் வரும். இப்பதிவு சும்மா அவசர பதிவென்பதால் ஆங்கிலப் பொன்மொழிகளுடன் சுருக்கமாக முடித்தேன். தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

said...

பொன்ஸ்,


//வரவேற்புகள், வாழ்த்துக்களுடன் :) //

வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

//வெற்றி, எனக்கு இந்தப் பொன்மொழி பிடிச்சிருக்குங்க..
நான் கவிஞனும் இல்லை.
நல்ல இரசிகனும் இல்லை.
வலைப்பதிவுலகில் நான் ஊமையுமில்லை.
//

உண்மையாகவா? நக்கல்/உள்குத்து ஏதும் இல்லையே? :)
மிக்க நன்றி.

said...

கரிகாலன்,
வணக்கம்.

//கனடாவில் நேரத்தின் பெறுமதி எப்படிப்பட்டது எனபது எல்லோரும்
அறிந்ததே.இருந்தும் நேரம் ஒதுக்கி
சிலவற்றை எழுதலாமே. //

உண்மைதான். நேரமின்மை என்பது முக்கிய பிரச்சனை. நிச்சயமாக நேரம் கிடைக்கும் போது பல சங்கதிகள் பற்றி எழுத உள்ளேன். கரிகாலன், உங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள்.

said...

SK அய்யா,
வணக்கம்.

//வாழ்த்துகள்! //

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

//உங்களிடம் நிறையத் தகவல்களும், செய்திகளும், நிகழ்வுகளும்,விதயங்களும், விடயங்களும், விஷயங்களும், சமாச்சாரங்களும், சேதிகளும் இருக்கின்றன என்பது உங்களைப் பற்றிய அறிமுகத்திலேயே தெரிகிறதே!!
//

அய்யய்யோ! அய்யா, உங்களைப் போன்றவர்கள் எழுதும் இணையத்தளத்தில் நான் எழுதுகிறேன் என்று சொல்லவே மிகவும் பயமாகவும் வெட்கமாகவும் உள்ளது. உங்களின் தமிழ்நடைக்கும் தமிழறிவுக்கும் முன்னால் நான் nothing. நான் இப் பதிவில் மேலே சொன்னது போல் நான் தமிழ்மணத்திற்கு வந்ததே என் தமிழறிவை வளர்த்துக்கொள்ளத்தான். உங்கள் போன்றவர்களின் பதிவுகள் அதற்கு உறுதுணையாக இருக்கின்றன. அய்யா, நான் எழுதும் பதிவுகளில் இருக்கும் சொற்பிழை, இலக்கணப்பிழை, பொருட்பிழை ஏதாவது இருந்தால்(நிச்சயம் இருக்கும்) நீங்கள் அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.

said...

அன்பின் யோகன் அண்ணா,
வணக்கம்.

//உங்கள் பின்னூட்டங்கள் படித்துள்ளேன். ஆக்கபூர்வமானதாகவும், அரவணைத்துச் சொல்லுவதாகவும் இருப்பதை அவதானித்துள்ளேன்.//

மிக்க நன்றிகள்.

//நான் வாசிப்பதும்;பின்னூட்டுவது மட்டுமே! //

யோகன் அண்ணா, நானும் உங்களின் பல பின்னூட்டங்களைப் படித்திருக்கிறேன். உங்களின் பின்னூட்டங்களைப் படிக்கும் போது ஈழத்தில் நீங்கள் எல்லா இடமும் அடிபட்டவர் போல் தெரிகிறது. அதனால் உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள பல சங்கதிகள் உண்டு என என்னால் ஆணித்தரமாகக் கூற முடியும். எனவே நீங்கள் ஏன் தனிப் பதிவுகள் போடக் கூடாது? ஈழத்தில் நீங்கள் சந்தித்த அனுபவங்களைக் கட்டாயம் எழுதுங்கள்.

//
மேலும் "குமரனின்" கூடல் பக்கம் சென்றால்;அதில் 08-03- 2006 ல்; "ஈழத்தில் இசைவளர்ச்சியில் நாதஸ்வர தவில் கலைஞர்கள் பங்கு" எனும் கட்டுரை ஒன்று உண்டு. படித்தீர்களோ! தெரியவில்லை. படித்துப் பார்த்துக் கருத்துக் கூறவும்.எனக்கென பக்கம் எதுவும் இல்லை. //

யோகன் அண்ணா, சுட்டிக்கு நன்றிகள். இது வரை படிக்கவில்லை. நிச்சயம் படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்.

said...

குமரன்,
வணக்கம்.

//வெற்றியின் பக்கம் - வலைப்பூவின் தலைப்பே அமர்க்களமாக இருக்கிறது //

மிக்க நன்றி.

//நம் உடன்பிறவா சகோதரர்களெல்லாம் தங்கள் தாயகம் திரும்பும் நாள் மிக மிக விரைவில் வரும் என்று நினைக்கிறேன். அதற்கே வேண்டுகிறேன். //

தங்களின் அன்புக்கும், ஆறுதல் வார்த்தைகளுக்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றிகள்.

//எங்கே தருமம் இருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான்; எங்கே இறைவன் இருக்கிறானோ அங்கே வெற்றி இருக்கிறது.//

குமரன், அருமையாகச் சொன்னீர்கள். ஈழத்தமிழர்களின் போராட்டம் ஓர் தர்மயுத்தம். தர்மயுத்தத்தில் நீதியின் பக்கம் நிற்பவர்கள் பல சோதனைகளைச் சந்த்தித்த பின்னர் தான் நீதியைப் பெறுகிறார்கள் என்பது அன்றைய பாரதக் கதையில் இருந்து இன்று நடக்கும் பல விடுதலைப் போராட்டங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. நிச்சயம் தர்மதேவதை கண் திறப்பாள். ஈழம் விடுதலை பெறும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

//எழுதுவதற்கா சங்கதி இல்லை? //

உண்மைதான். பல சங்கதிகள் பற்றி எழுத ஆசைதான். நேரமின்மை முக்கிய பிரச்சனை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிச்சயம் எழுதும் எண்ணம் உண்டு. தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

said...

செந்தழல் ரவி,

//கலக்குங்க....காத்திருக்கேன்... //

மீண்டும் வந்து ஊக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.