Sunday, June 18, 2006

அமெரிக்க, கனடா வாழ் தமிழ்மக்களுக்கு!

அமெரிக்கா மற்றும் கனடா வாழ் தமிழ்மக்களுக்கு ஓர் நற்செய்தி. வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை [Federation of Tamil Sangams of North America - FETNA] வருடா வருடம் நடாத்தும் தமிழர் விழா இம்முறை நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு இடங்களில் இவ் விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ் விழா ஒவ்வொரு முறையும் July முதல் வார இறுதியில் நடைபெறும். July மாதத்தின் முதல் வார இறுதிநாட்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும் Long Weekend என்பது குறிப்பிடத்தக்கது. வழமைபோல் இம்முறையும் இவ் விழா July 1 - 3 வரை நடைபெறுகிறது.

இம்முறை நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவ் விழாவில் உள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால், திருமணம் ஆகாத காளையர்கள் , கன்னியர்கள் தங்களுக்கான வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்ளவும் இங்கே ஓர் நிகழ்ச்சி உள்ளது. அந் நிகழ்ச்சியில் பங்கு பெற நீங்கள் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஆக, இது நல்லதொரு விழா. தவற விடாதீர்கள்.

5 comments:

வெற்றி said...

பின்னூட்ட மட்டறுத்தல் சரியாக வேலை செய்கிறதா எனப் பார்ப்பதற்காக இப் பின்னூட்டம்.

வெற்றி said...

பின்னூட்ட மட்டறுத்தல் சரியாக வேலை செய்கிறதா எனப் பார்ப்பதற்காக இப் பின்னூட்டம்.

பொன்ஸ்~~Poorna said...

// இவ் விழாவில் உள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால், திருமணம் ஆகாத காளையர்கள் , கன்னியர்கள் தங்களுக்கான வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்ளவும் இங்கே ஓர் நிகழ்ச்சி உள்ளது//

ம்ம்ம்ம்.. நடத்துங்க!!

சரி, இந்த பின்னூட்டப் பெட்டி அடுத்தப் பக்கத்தில் திறக்கும் விதத்தைக் கொஞ்சம் மாற்றி அதே பக்கத்தில் திறக்குமாறு செய்யலாமே? அது கொஞ்சம் சீக்கிரமாகவும், வசதியாகவும் இருக்கும் :)

VSK said...

மட்டறுத்தல் மிகவும் சுலபமானதாயிற்றே!

"DELETE" பட்டனை அழுத்தி வெளியேற்றி விடலாமே!!

:)))))))))))

Anonymous said...

அப்பா!!வெற்றி!
இளசுகள்;நீங்க கொடுத்து வைச்சவங்க!!!; கலர்;பிகர் பார்க்க எல்லாம் முடியாதுங்களா,,,சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா கேட்டேன். ஆனாலும் நீங்க ரொம்ம வேகமா?,,பின்பற்றுறீங்க!!ஆண்;பெண் பார்க்கும் விடயங்களுக்கு;பெரிசுகள் சம்மதிச்சாங்களா?, போனவருசம் கூட்டம் கம்மிணு இந்த ஏற்ப்பாடா??,,
ஏதோ நடக்கட்டும்.
யோகன் பாரிஸ்