Sunday, June 18, 2006

நடிகர் திலகத்தின் ஆதங்கம்

"ஒரு கலைஞனுக்கு விருது என்பது அவன் வேகமாக வளரும் இளம் வயதில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவன் அதைக் கொண்டாட முடியும். நான் இதையெல்லாம் கடந்தவன். ஆனாலும் ஒன்றை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். உரிய காலத்தில் உரிய விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும், வருத்தமும் என் மனதில் ஓரத்தில் இருக்கத்தான் செய்கின்றன."

1977-ம் ஆண்டு நடிகர்திலகம் அளித்த பேட்டியென இச் செய்தியை 26-2-2003 அன்று வெளிவந்த தேவி வார இதழ் 47வது பக்கத்தில் போட்டிருந்தது.

அன்பர்களே, தமிழ்மணத்தில் பதிவுகளை ஏற்ற ஆகக் குறைந்தது 3 பதிவுகளாவது எழுத வேண்டும் எனும் நிபந்தனையால் தேவி வார இதழில் வந்த செய்தியை இங்கே பதித்தேன். நடிகர் திகலத்திற்கு உரிய நேரத்தில் விருது வழங்கப்படவில்லை என்பதில் எனக்கும் ஆழ்ந்த வருத்தம் உண்டு.

16 comments:

VSK said...

அட! இதிலும் நமக்குள் ஒற்றுமை!

நானும் நடிகர்திலகத்தின் ரசிகன்!

G.Ragavan said...

மாற்றுக்கருத்து இருக்க முடியாத கருத்து. மிகவும் நியாயமான ஆதங்கம். ஆனால் அரசியல் படுத்திய பாடுதான் தெரியுமே.

Anonymous said...

எமது நாடுகளில் பிரதேச;மொழிப் பாகுபாடு உண்டென்பதற்கு! இன்னும் ஓர் உதாரணம் இது. நடிகர் திலகம் இந்தியாவுக்கும்;தமிழுக்கும் கிடைத்த பொக்கிசம். அவர் ரிசியல்ல!! அவர் ஆதங்கம் சரி.
யோகன் பாரிஸ்

Anonymous said...

இலங்கை வரலாறு குறித்து எழுதப்போவதாக முன்னர் எங்கையோ பின்னூட்டம் இட்டது ஞாபகம் வருகிறது. எதிர்பார்க்கிறேன்.

சின்னக்குட்டி said...

வணக்கம் வெற்றி....உங்கள் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி

வெற்றி said...

SK அய்யா,

//நானும் நடிகர்திலகத்தின் ரசிகன்! //

நீங்களும் நடிகர்திலகத்தின் இரசிகனா?
நடிகர்திலகத்தின் பரம இரசிகன் நான்.
என்ன அற்புதமான கலைஞர். குறிப்பாக அரச படங்கள், புராணப்படங்களில் அவரைப் போல் வசம் பேசுவதற்கு தமிழ்த்திரை உலகில் யாரும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

வெற்றி said...

இராகவன்,
வணக்கம்.

//மாற்றுக்கருத்து இருக்க முடியாத கருத்து. மிகவும் நியாயமான ஆதங்கம். ஆனால் அரசியல் படுத்திய பாடுதான் தெரியுமே. //

உண்மைதான். அரசியல் தலையீடுகளால் ஓர் அற்புதமான கலைஞனுக்குக் கிடைக்கவேண்டிய விருது கிடைக்காமல் போனது மிகவும் வருத்தப்படவேண்டியது மட்டுமல்ல, கண்டிக்கப்பட வேண்டியதும் கூட.

வெற்றி said...

யோகன் அண்ணா,
வணக்கம்.

//அவர் ரிசியல்ல!! அவர் ஆதங்கம் சரி.//

உண்மைதான். அவரும் ஓர் சாதாரண மனிதர்தான். அவருக்கும் ஆசைகள் விருப்பங்கள் உண்டு. அவரின் இந்த ஏக்கம் நியாயமானதும் கூட.

வெற்றி said...

கனக்ஸ்,
வணக்கம்.

//இலங்கை வரலாறு குறித்து எழுதப்போவதாக முன்னர் எங்கையோ பின்னூட்டம் இட்டது ஞாபகம் வருகிறது. எதிர்பார்க்கிறேன். //

உண்மைதான். அந்த எண்ணம் இன்றும் என் மனதில் உள்ளது. அண்மையில் பேராசிரியர் ஸ்ரான்லி தம்பையா, பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன், பேராசிரியர் Mark Whittaker போன்றோரை நேரில் சந்த்தித்து உரையாடக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடமிருந்து ஈழம் சம்மந்தப்பட்ட பல சங்கதிகளை அறிந்து
கொள்ளக்கூடிய அரிய வாய்ப்பு அது. நிச்சயமாக நேரம் கிடைக்கும் போது ஈழப்போராட்ட வரலாற்றை எழுத உள்ளேன். இன்னும் ஈழப்போராட்டம் பற்றி பல ஆய்வுகள் செய்து கொண்டிருக்கிறேன். ஆகஸ்ட் மாதக் கடைசியில் பதிவிலிடத் திட்டம். பார்ப்போம். தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

வெற்றி said...

சின்னக்குட்டி அண்ணை,
வணக்கம்.

//உங்கள் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி //

மிக்க நன்றி.

ஜோ/Joe said...

வெற்றி,
இந்த பதிவுக்கு நன்றி.

நடிகர் திலகத்தின் வெறித்தனமான ரசிகன் நான்!

வெற்றி said...

ஜோ,
வணக்கம்.

//வெற்றி,
இந்த பதிவுக்கு நன்றி.
நடிகர் திலகத்தின் வெறித்தனமான ரசிகன் நான்!//

மிக்க நன்றி. அந்த மாபெரும் கலைஞனின் நடிப்பாற்றலை யாரால்தான் இரசிக்க முடியாமல் இருக்கும்!

ஜோ/Joe said...

வெற்றி,
நடிகர் திலகம் என்ற என்னுடைய பதிவை பாருங்கள்!

Anonymous said...

thookku thookki is my favourite movie. still. haven't seen parasakthi as yet. i like karunanidhi and would like to see the raw anger in him as a young man. he has mellowed, and keen on passing laws, so dear to his heart and belief. good wishes to him.

வெற்றி said...

அநோமதயப் பதிவருக்கு,
வணக்கம்.
//still. haven't seen parasakthi as yet. i like karunanidhi and would like to see the raw anger in him as a young man//

கட்டாயம் பாருங்கள். கலைஞரின் அனல்பறக்கும் வசனங்களுக்கு உயிர் கொடுத்துள்ளார் நடிகர் திலகம். பராசத்தி படத்தில் வரும் சில பாடல்களும் அருமை.

ஜோ/Joe said...

வெற்றி,
இங்கே நடக்கும் நடிகர் திலகம் பற்றிய விவாதங்களில் நீங்களும் பங்கு பெறலாமே?

http://www.mayyam.com/hub/viewtopic.php?t=2132&start=1245