Saturday, December 30, 2006

ஒரு பரத நாட்டிய ஒளிப்படம்[video-clip]

அண்மையில் நான் பார்த்து இரசித்த பரத நாட்டியக் காட்சி இது. இந் நிகழ்ச்சி லண்டன் TTN [Thamil Television Network] தொலைக்காட்சி நிலையத்தினரது தயாரிப்பு. இதே பாடலுக்கு இங்கே கனடாவிலும் கடந்த மாதம் சில பெண்கள் பரத நாட்டியம் ஆடியதை நேரில் பார்த்து இரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஈழத்தமிழர்களால் நடாத்தப்படும் அதிகமான பரத நாட்டியங்கள் தமிழ்ப்பாடல்களுக்கே ஆடப்படும். இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

இன்னுமொரு விடயம், எமது பெம்பிளைப் பிள்ளைகளை[பெண்கள்] நெடுகலும் [தொடர்ந்து] மேற்கத்தைய ஆடைகளிலேயே பார்ப்பதாலோ என்னவோ, அவர்களை இப்படிச் சேலை மற்றும் ஆபரணங்களுடன் பார்க்கும் போது மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். இக் கோலத்தில் அவர்களைப் பார்ப்பதற்காகவே கோவில்களுக்கும் இப்படியான நிகழ்வுகளுக்கும் போய்வருவதை மறுக்கவா முடியும்? :))

சரி, நீங்களும் இந்த அருமையான நடனத்தைக் கண்டு மகிழ இங்கே கிளிக் செய்யவும்.[Load ஆக கொஞ்ச நேரம்(சில வினாடிகள்) எடுக்கும். தயவு செய்து பொறுமை காத்துக் கொள்ளவும்]

22 comments:

said...

லச்சினியே மச்ச லச்சினியே .......

:)

said...

Anonymous,
வணக்கம்.

/* லச்சினியே மச்ச லச்சினியே ....*/

என்ன சொல்கிறீர்கள்? புரியவில்லையே!

said...

கோயிலுக்குப் போனா சாமி குப்புட்டமா கடல தின்னமா என்னு இல்லாம் அது என்ன பொன்னுகள சைட் அடிக்கிறது. :( அபச்சாரம்! அபச்சாரம்! ஈஸ்வரா இந்தக் காலத்துப் பசங்களுக்கு கலி முதுடிச்சு.

said...

லச்சினியே மச்ச லச்சினியே .......
இப்படியொரு சினிமாப் பாடல் இருக்குதல்லா, அது மாதிரி இருக்கு என்று அநாமதேயம் சொல்கிறார் என்று நினைக்கிறன். அவர் சொல்வது சரிதான். எனக்கும் கேட்க அப் பாடல் தான் ஞாபகம் வந்தது.

முன்பு ஒரு பாடல் (அண்ணா, அண்ணா என்றல்லாம் இடையில வந்த நினைவு) இணையத்திலதான் பாத்தேன், அது "ஓ போடு" என்ற சினிமாப் பாடலை ஒத்திருந்தது.

எங்களிடம் கற்பனை வரட்சி அல்லது சினிமாவின் பாதிப்பு அதிகம்ம்

said...

வெற்றி,
அனானி குறிப்பிட்ட பாடலின் தழுவல்தான் இப்பாடல்.
இதுமட்டுமன்றி இதே மாதிரி தென்னிந்தியச் சினிமாப் பாடகர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஈழப் போராட்டத்துக்கான தொகுப்பில் வேறும் தழுவல்கள் இருக்கின்றன. எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய ஒரு பாடல், ஏற்கனவே அவர் சினிமாவில் பாடிய 'வண்ணவண்ண சொல்லெடுத்து வந்தது செந்தமிழ்ப்பாட்டு' என்ற மெட்டிலேயே வரும். (ஒரே பாடகரே இரண்டையும் பாடியது இன்னும் பிரச்சினை)

எங்களுக்கான பாடலை மற்றவர்கள் செய்வதிலுள்ள சிக்கல்கள் பல.
புலிகள் தங்கள் தொடக்க காலத்தில் தமிழகத்திலிருந்து பாடல்கள் பெற்றாலும் அவை நல்ல பொருத்தமாக இருந்தது எப்படியென்ற ஆச்சரியம் எனக்கு உண்டு. சினிமா பின்னணிப் பாடகர்கள், எல்.வைத்தியநாதன் போன்ற இசையமைப்பாளர்களின் பங்களிப்போடு புலிகளே எழுதிய பாடல்கள் போராட்டத்துக்கு மிக நெருக்கமானவையாகவே இப்போதும் உணரப்படுகின்றன. இன்குலாப் எழுதிய பாடல்கள்கூட நன்றாகவே பொருந்துகின்றன. தேனிசைச் செல்லப்பாவின் குரல், வேற்றாள் என்ற நிலையைக் கடந்து, ஈழுத்துப் பாடகராகவே அடையாளங்காணும் வகையில் மிகமிக நன்றாகப் பொருந்திவிட்டது.
ஆனால், பிற்காலத்தில் இந்தியக் கலைஞர்களைக் கொண்டு (செல்லப்பா இதற்குள் வரார்) செய்யப்பட்ட சில இசைமுயற்சிகள் மிக அன்னியமாகவே தெரிகின்றன. புயலடித்த தேசம், கார்த்திகை-27 உட்பட வெளிவந்த சில தொகுப்புக்கள் சரியாக வரவில்லையென்பதே என் கருத்து, அவற்றில் அப்படியே சினிமாச் சாயல் அப்பிடிக் கிடந்தது. அறிவுமதியின் பாடல்கள்கூட போகிறபோக்கில் இந்தக்காதால் கேட்டு அந்தக்காதால் விட்டுச் செல்லும் பாடல்களாகவே எனக்குப்படுகின்றன.

பாடல்கள் கட்டமைக்கப்படும் முறையே பெரிய வித்தியாசத்தைக் கொண்டிருக்கின்றது. சினிமாத்துறையில் பெரும்பாலும் மெட்டமைத்து பிறகு அதற்குப் பாட்டெழுதுவர் (தற்போது இதுதான் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படும் முறை). ஈழத்தில் போராட்டப் பாடல்கள் எதிர்மறையாகச் செய்யப்படுகின்றன. பாடல்வரிகள் எழுதியபின்னர்தான் அதற்குரிய மெட்டமைக்கப்படுகிறது. (நானறிய ஒரேயொரு பாடல் மட்டுமே 'மெட்டுக்குப்பாட்டு' என்ற முறையில் உருவாக்கப்பட்டது. கரும்புலி அறிவரசனை நினைவுகூர்ந்து எழுதப்பட்ட பாடலது)
நீங்கள் தந்த இணைப்பில் ஒலிக்கும் அதிகாலையிலே பாடலென்றாலும் சரி, கார்த்திகை -27 தொகுப்பிலிருக்கும் பாடல்களென்றாலும் சரி, ஒருமுறை கேட்டால் நன்றாகப் புரியும், அவர்கள் ஏற்கனவே இருந்த மெட்டொன்றுக்கு சொற்களைப் பொருத்தும் வேலையைத்தான் செய்திருக்கிறார்களென்பது.

பொடிச்சி, உடனடியாக எம்மவருக்குக் கற்பனை வறட்சி, அல்லது சினிமா மோகம் என்று முடிவு கட்டலாமா தெரியவில்லை. குறிப்பிட்ட பாடல்கள் தமிழகத்தாரால் தயாரிக்கப்பட்டவை.

said...

அருமை தோழர்
நன்றி
ஸ்ரீஷிவ்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

said...

வெற்றி. நல்ல ரசனை உங்களுக்கு :-) இது பரத நாட்டியம் இல்லை. பரத நாட்டியத்திற்கும் திரை நடனத்திற்கும் இடையே பிறந்த கலை வடிவம். நன்றாக இருக்கிறது. வண்ண வண்ண ஆடைகளை அணிந்து கொண்டு ஒவ்வொரு மங்கையாக மேடையில் தோன்றி நன்றாக ஆடியிருக்கிறார்கள். பாடலும் 'மச்சினியே மச்ச மச்சினியே' திரைப்பட பாடலின் மெட்டில் அமைந்திருக்கிறது. ஆனால் வரிகள் மிக நன்றாக ஒரு நல்ல கவிஞரால் எழுதப்பட்டிருக்கின்றன. ஈழத்தமிழர்கள் நடத்தும் பரத நாட்டியம் மட்டுமில்லை வெற்றி. இந்தியத் தமிழர்கள் நடத்தும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் தமிழ் பாடல்களுக்குத் தான் ஆடுகிறார்கள். ஆனால் பரத நாட்டியம் இவ்வளவு வரிகளுடன் கூடிய பாடல்களுக்கு ஆடப்படுவதில்லை; நடுவே நிறைய அபிநயங்கள் (கை, கண், கால், உடல் அசைவுகள் - பாடலின் கருத்தை வெளிப்படுத்துபவை அபிநயங்கள்) பாடல் வரிகள் இசைக்கப்படாமலேயே இருக்கும். அதனால் அவை தமிழ் பாடல்களுக்கு ஆடப்படுகின்றனவா என்ற ஐயம் எழும். பரத நாட்டியம் பார்ப்பதற்கும் கர்நாடக இசையை கேட்பதற்குத் தேவையான பொறுமை வேண்டும். :-)

said...

வெற்றி!
இது பற்றி, குமரன் கூறுவதை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். எனினும் இவர்கள் முயற்சி பாராட்டுக்குரியதே!; பழமையில் புதிய கருத்துக்களைப் புகுத்தும் முயற்சியை வரவேற்போம்.
பகிர்வுக்கு நன்றி
இனிய புதுவருட வாழ்த்துக்கள்
யோகன் பாரிஸ்

said...

வெற்றி!
இந்தக் காச்சல் இப்ப எங்கட ஆட்களிட்ட கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கு. அதே நேரத்தில் நல்லதொரு திசை நோக்கிய கலைப்பயணமும் புலத்தில் புதிய பல வடிவங்களில் புறப்பட்டுக்
கொண்டிருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை.

//புயலடித்த தேசம், கார்த்திகை-27 //

வன்னியன்!

உங்களின் கருத்துக்களோடு நான் ஒத்துப்போகின்றேன். ஒரு சின்னத் தகவல். மேற்குறித்த இரு இறுவட்டுக்களும் சுவிஸில்தான் வெளியிடப்பட்டது.அதன் உருவாக்கத்தில் முழுக்க முழுக்க தென்னிந்தியச் சினிமாக்கலைஞர்களை வைத்து, தென்னிந்தியச் சினிமாத்துறைசார்ந்த ஈழத்தமிழரால் உருவாக்கப்பட்டது. உருவானபின் அதன் உள்ளடக்கம் குறித்து கருத்து வேறுபாடுகள் நிறையவே எழுந்தன. அதனால் அவை குறித்த நேரத்தில் வெளியிடப்படவுமில்லை. பின்பு எப்படியோ வெளிவந்துவிட்டது.

குமரன்!
இது குறித்த உங்கள் கருத்துக்கள் பலவுடன் எனக்கும் உடன்பாடே.

said...

பூசாரி,
உங்களின் பின்னூட்டத்தை வாசித்து வாய்விட்டுச் சிரித்தேன்.

said...

ஒரு பொடிச்சி,
வணக்கம்.

/* லச்சினியே மச்ச லச்சினியே .......
இப்படியொரு சினிமாப் பாடல் இருக்குதல்லா, */

இதுவரை நீங்கள் குறிப்பிடும் பாடலைக் கேட்டதாக ஞாபகம் இல்லை. விளக்கத்திற்கு நன்றி.

/* எங்களிடம் கற்பனை வரட்சி அல்லது சினிமாவின் பாதிப்பு அதிகம்ம் */

சிலவேளைகளில் நீங்கள் சொல்லும் காரணம் சரியாக இருக்கலாம். இருப்பினும் நண்பர் வன்னியன் சொல்வது போல் "உடனடியாக எம்மவருக்குக் கற்பனை வறட்சி, அல்லது சினிமா மோகம் என்று முடிவு கட்டலாமா தெரியவில்லை". எம்மவரின் சில தரமான பதிவுகளைக் கேட்டு, பார்த்து இரசித்திருக்கிறேன்.
சிலவேளைகளில் இது பலரையும் சென்றடைய வேண்டும் எனும் உத்தியோ தெரியவில்லை. நீங்கள் குறிப்பிடுவது போல் இப் பாடல் திரைப் பாடலின் மொட்டில் இருக்குமாயின், பலரையும் குறிப்பாக இளம் சந்ததியினரைச் சென்றடையும் எனும் நோக்கமாகவும் இருக்கலாம்.

said...

வெற்றி,
முதலில் இது எம்மவரின் பாடலில்லை.
எம்மவர் இப்படி பாடல் செய்தால் அது கற்பனைவறட்சியோ சினிமா மோகமோ அன்றி வேறில்லை.
பெரும்பாலானவர்களுக்குப் போய்ச்சேரத்தான் இப்பிடி கொப்பியடிக்கிறம் எண்டு ஆராவது சொன்னா அது அவர்களது நோக்கத்தைப் பொறுத்தது. எதற்காக சினிமாப்பாட்டைக் கேட்கிறானோ அதற்காகவே இந்தப்பாட்டையும் ஒருவன் கேட்கும் நிலையில், தங்கள் வர்த்தக நோக்கில் பாடல் தயாரிப்பாளர்கள் வெற்றிபெறுகிறார்கள்.
மாறாக, பாடல் மூலம் ஏதாவது உணர்வை, உணர்ச்சியை (அது நல்லதோ கெட்டதோ) ஊட்டுவதென்ற பரப்புரை நோக்கத்தை எடுத்துக்கொண்டால் இப்பாடல்கள் வெறும் பூச்சியம்தான். இவை எதையும் சாதிக்கப்போவதில்லை. இந்நோக்கத்தில் காசியானந்தன் & தேனிசை செல்லப்பா கூட்டணியை வெல்ல யாரிருக்கிறார்கள்? அந்தப்பாடல்கள் எல்லோரிடமும் போய்ச்சேர்ந்த அளவுக்கு வேறு யார் செய்துகாட்டியிருக்கிறார்கள்? எல்லாப்பாடல்களும் கிட்டத்தட்ட ஒரேமெட்டைக் கொண்டிருக்கின்றன என்பதைத் தாண்டியும் எல்லாப்பாடல்களுமே அவர்களது நோக்கத்தைப் பொறுத்தவரை மிகப்பெரும் வெற்றிப்பாடல்களே.

said...

மலைநாடான்,
நான் குறிப்பிட்ட இரு தொகுப்புக்களையும் வன்னியிலிருந்த காலத்தில் கேட்டவன்.
ஒலிப்பதிவுத் தரத்தையும் பாடக, பாடகிகளின் குரள்வளத்தையும் தவிர அத்தொகுப்புகளிலிருந்த பாடல்களின் இசையமைப்பும் பாடல்வரிகளும் வன்னித் தரத்துக்கு கிட்டவும் வராதவையென்றே நினைக்கிறேன். சினிமாப் பாடல்களைக் கேட்டு இரசிப்பதுபோல அவற்றையும் கேட்டு இரசித்தோம். அவ்வளவுதான்.
ஆனால், அத்தொகுப்புக்களை வைத்து, "இதோ இந்தியா எம்பக்கம் திரும்பிவிட்டது, சினிமாப் பாடகர்கள் எல்லோரும் எங்களுக்காகப் பாட்டுப் பாடியிருக்கிறார்கள், இனி நாங்கள் தனியர்கள் அல்லர்" என்று சிலர் புலம்பியபோதுதான் இத்தொகுப்புக்கள் மீது எரிச்சல் வந்தது.

said...

ஸ்ரீஷிவ்,

புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

வன்னி,
நீங்கள் ஈழப் போராட்டப் பாடல்கள் பற்றிய பரீட்சயம் நிறைய உள்ளவர்.
என் பரீட்சயம் சில பாடல்களைக் கேட்டதோடு சரி.

நல்ல பல அருமையான தகவல்களை இங்கே பரிமாறிக் கொண்டதற்கு மிக்க நன்றி.

/* காசியானந்தன் & தேனிசை செல்லப்பா கூட்டணியை வெல்ல யாரிருக்கிறார்கள்? */

உண்மை. காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, தேனிசைச் செல்லப்பா ஆகியோரின் கூட்டு முயற்சியில் வந்த பாடல்கள் உணர்வுகளைத் தொடும் பாடல்கள். குறிப்பாக, "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்", "தமிழா நீ பேசுவது தமிழா" போன்ற பாடல்கள் நான் விரும்பிக் கேட்பவை மட்டுமல்ல, உணர்வுகளைத் தொடும் பாடல்களும் கூட.

வன்னி, ஒரு சின்னக் கேள்வி. எனக்கு இசை பற்றிய அறிவு பூச்சியம். அத்தோடு ஈழப் போராட்டப் பாடல்கள் பற்றிய பரீட்சயமும் குறைவு.
அறிய வேண்டும் எனும் ஆர்வத்தில் கேட்கிறேன். குறை நினைக்காது தயவு செய்து பதிலளிக்க முடியுமா?

ஏன் இப் பாடலில்[நான் இணைப்புத் தந்த பாடல்] என்ன குறை? நன்றாகத் தானே இருக்கிறது, இல்லையா? பாடல் வரிகள், காசி ஆனந்தனின் வரிகள் போலோ அல்லது புதுவையின் வரிகள் போலோ தரமாக இல்லாவிட்டாலும், பாடியவர்கள் மிகவும் அழகாக உச்சரித்து உணர்வுடன்தானே பாடியுள்ளார்கள், இல்லையா? பாடல்வரிகளும் சுமாரானைவை என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

said...

குமரன்,
வணக்கம்.

/* நல்ல ரசனை உங்களுக்கு :-) */
நன்றி :)ஹி ஹி...என்ன சொல்கிறீர்கள் என்பது புரிகிறது.

/* இது பரத நாட்டியம் இல்லை.*/

ஐயோ, குமரன் இது பரத நாட்டியமில்லையா? நல்லவேளை கல்லெறி, செருப்படி போன்றவை பரிசாகக் கிடைக்க முன் தக்க நேரத்தில் தெய்வம் போல் வந்து என் அறியாமைச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். இப்படியான ஆடைகளுடன் கை கால்களை அசைப்பதெல்லாம் பரத நாட்டியம் என்று நினைத்திருக்கும் ஞான சூனியம் நான். மிக்க நன்றி குமரன்.

/* பரத நாட்டியத்திற்கும் திரை நடனத்திற்கும் இடையே பிறந்த கலை வடிவம். */

இப்படிப் பட்ட இந்த இடைப்பட்ட நடனத்திற்கு ஏதாவது விசேட பெயர் இருக்கிறதா குமரன். தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள். நான் பதிவிலும் மாற்றி விடுகிறேன்.

நன்றி.

said...

யோகன் அண்ணா,
நன்றி.

said...

மலைநாடான்,
மிக்க நன்றி.

said...

காற்று வெளி (ஈழத்து)படத்தில ஒரு பாட்டு வரும். எழுக எங்கள் மக்களே வெற்றி பெறுவதெங்கள் பக்கமே என்று.
அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து வந்த நேருக்கு நேர் படத்தில ஒரு பாடல் வரும். அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா..

கார்த்திகை 27 பாடலஇகளில் சினிமா சாயல் அப்பட்டமாக இருக்கும். ஆனால் பிறகு வந்த அறிவுமதியின் ஒளிமுகம் தோறும் புலிமுகம் தொகுப்பில் சில பாடல்கள் தேறியதாக நினைக்கிறேன்.

சிறி நிவாஸின் கிட்டண்ணா.. எங்கள் கிட்டண்ணா.. நித்யசிறியின் அழகே அழகே தமிழ் அழகே.. போன்ற பாடல்கள் அழகு.

அனுராதா சிறிராம் பாடிய மாவீரர் பாடலொன்றும் நன்றாக இருந்தது.

ஆனால் இப்போது ஈழத்துப் பாடல்களும் commercial songs என்ற வட்டத்துக்குள்ளை வந்து விட்டது என்று தான் நினைக்கிறேன். music albums. அதாவது ரசனைக்குரிய பாடல்கள்.

said...

கொழுவி,
மிக்க நன்றி.

said...

வெற்றி,

பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

said...

சிவபாலன்,
நன்றி.