Wednesday, December 13, 2006

Anonymous எனும் பதிவருக்கு என் பதில்

Anonymous எனும் பெயரில் எழுதும் அன்பர் ஒருவர் "புலிகளைக் கண்டு பார்ப்பனர் நடுக்கம்" எனும் தலைப்பில் ஒரு பதிவு போட்டுள்ளார்கள். ஈழத் தமிழர்கள் மீதான அவரின் கரிசனைக்கு ஒரு ஈழத்தமிழன் எனும் வகையில் அவருக்கு நன்றி சொல்லுகிறேன். அதேநேரம், அவரின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடில்லை என்பதையும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என் கருத்தை அவ்ரின் பதிவில் பின்னூட்டமாக இட்டிருந்தேன்.தேவை கருதி அதை இங்கேயும் தனிப்பதிவாகத் தருகிறேன்.


ஐயா,
தேவையற்ற பதிவு. தமிழகப் பிரச்சனைகளோடு ஈழப் பிரச்சனையை தயவு செய்து முடிச்சுப் போடாதீர்கள் என ஈழத்தமிழன் என்ற வகையில் கேட்டுக் கொள்கிறேன்.

ஐயா, தமிழீழ விடுதலைப் புலிகளும் சரி, தமிழீழ மக்களும் சரி தமது எதிரி யார் நண்பர் யார் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளார்கள். எனவே தயவு செய்து தேவையில்லாமல், எழுத வேண்டும் என்பதற்காக எதையோ எழுதி , தமிழக மக்களைக் குழப்பி எமது போராட்டத்திற்கு ஊறு விளைவிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.ஈழத்தில் இப்படியான பார்ப்பனன், ஆரியன் , திராவிடன் எனும் அரசியல் குழப்பங்கள் இல்லை என்பதையும் இங்கே உங்களுக்கு நினைவு கூர விரும்புகிறேன்.
மிக்க நன்றி.

12 comments:

said...

அதுவும் சரிதான்.

இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் தனி ஈழம் சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.
பிராமணர்களின் ஆதரவில்லாமல் இந்தியாவின் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகமே.

அதுவும் சரிதான்.

பிராமணர்களை பகைத்துக் கொள்ள நினைக்காமலிருக்கும் உங்கள் எண்ணமும் சரிதான்.

எல்லாமும் சரிதான்.

said...

விஷமத்தனமான ஒரு பதிவிற்கு, விவேகமான, அதே சமயம் அடக்கமான உங்கள் பதிலுக்கு இப்படியும் ஒரு அனானி பின்னுட்டமா, திரு.வெற்றி?

ம்ம்....யாரை நோவது ?

said...

தனி ஈழத்திற்கான முதல் ஆதரவை இந்தியாவில் இருந்து கொடுத்தவர் யார் என முழுமையான விபரங்கள் எனக்கு கிடைக்கவில்லை. என்றாலும் எனது வயதுக்கு தெரிந்தவற்றை நான் இங்கே கூறுகிறேன்.

எம்ஜிஆர்தான் முதன்முதலாக ஈழத்தினையும் ஈழத்தமிழர்களையும் பகிரங்கமாக ஆதரித்தவர். நிறைய உதவிகள் செய்தார். நான் எல்லாம் சிறு பிள்ளை. ஈழத்தில் போர் நடந்தபோது தைரியமாக உதவிகள் செய்தார். எங்கள் கிராமங்களில் விடுதலைப்புலிகள் (அல்லது) அவர்களின் ஆதரவாளர்கள் வந்திருந்து வீட்டு வீடாக வசூல் செய்தார்கள். யாரையும் யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. அதிமுக என்று சொல்லக்கூடிய எம்ஜிஆரின் கட்சி நிர்வாகிகளே முன்னே நின்று வசூல் செய்தார்கள். நான் சிறு பிள்ளை. எங்கள் வீட்டிலும் கொடுத்தார்கள். அதேபோல பள்ளிப் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து வசூல் செய்து ஈழத் தமிழர் நிதி அனுப்பி வைத்தோம். ஈழத் தமிழர்களுக்காக பள்ளியின் தலைவன் என்ற முறையில் போராட்டங்கள் பல நடத்தி இருக்கிறேன். எங்கள் பள்ளியின் நண்பர்களை சைக்கிளில் அழைத்து சென்று மற்ற பள்ளிகளின் நண்பர்களுக்கும் மாணவிகளுக்கும் ஈழத்தமிழர் பிரச்சினையை விளக்கி இருக்கிறேன். துண்டு பிரசுரங்கள் வினியோகித்து இருக்கிறோம்.

அன்று முதல் இன்று வரை ஈழத்திற்கும், ஈழத்தமிழருக்கும் எதிராக நடக்கும் ஒரே ஜாதி என்றால் அது பார்ப்பனர் ஜாதிதான். இதனைச் சொல்ல எனக்கு வெட்கமாக இல்லை.

நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம், ராஜீவ் கொலைக்குப் பின்னர்தான் அய்யர்களும் அய்யங்கார்களும் ஈழத்தினரை வெறுத்தார்கள் என!


அது தவறு. ஆரம்பம் தொட்டே... அதாவது ராமர் காலம் தொட்டே ஈழத்தவரையும் புலிகளையும் பார்ப்பனர்களுக்கு பிடிக்காது.

அதனால்தான் தன் ஜாதி என்று தெரிந்தும் ராவணனை ஆதரிக்காமல் திராவிடன் என்று தெரிந்தும் ராமனைக் கும்பிடுகிறார்கள்.

எங்கள் தலைவர்கள் பழ.நெடுமாறன்,வைகோ,திருமாவளவன், கொளத்தூர் மணி போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் இருக்கும்வரை கண்டிப்பாக திராவிடர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும்!

said...

kid be awake. never ever bite anything these people write even with the good intention. See what have you done

said...

அனானியின் கருத்திற்கு உடன்பாடு இருந்தால் மட்டுமே பதிவுவரை கூட்டிச் செல்லுங்கள் இல்லையென்றால் உங்கள் மின்னஞ்சல் பெட்டியிலே அவரை அடித்துத் துரத்தி விடுங்கள்

சில அனானிகளுக்கு பள்ளியில் படிக்கும் போது கழிப்பறைச் சுவர்களில் கண்டதை எழுதிப் பழக்கம். அதை இப்போது பின்னூட்டங்களில் செய்கின்றார்கள்

அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!

நல்ல அனானிகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்

அப்போதுதான் உங்கள் நேரம் மிச்சமாகும்!

Natrayan, Vellakkovil

said...

"ஈழத்தில் இப்படியான பார்ப்பனன், ஆரியன் , திராவிடன் எனும் அரசியல் குழப்பங்கள் இல்லை என்பதையும் இங்கே உங்களுக்கு நினைவு கூர விரும்புகிறேன்."

திரு.வேற்றி அவர்களே,
ஈழத்தில் இத்தகய சாதி வேற்றுமைகள் இல்லை என்பது பெருமைகொள்ள வைக்கிறது.
சகோதர தமிழனாகவும் ஓரு பொதுநலம் கொண்ட மனிதனாகவும்.
மிக்க நன்றி!

said...

முதலாவதாக வந்த அநோமதய நண்பருக்கு,

ஐயா, நாம் எமது கொள்கைகள், குறிக்கோள் என்பவற்றில் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறோம். எமது போராட்டம் இலங்கையில் உள்ள சிங்கள அதிகார வர்க்கத்துக்கு எதிராக மட்டுமே. நாம் சிங்கள மக்களைக் கூட எதிரிகளாகப் பார்க்கவில்லை. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் நிலவும் சாதிப் பிரச்சனைகளோடு எமது போராட்டத்தை முடிச்சுப் போடாதீர்கள் என்கிறேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

said...

இந்த ஊடகச் சமருக்குப் போய் இவ்வளவு பெரிய ரியாக்ஷன் தேவையில்லை, வெற்றி... விடுங்கள்... அறியாப் பிள்ளைகள் விவரந்தெரியாமல் செய்கிற தப்பைக் கண்டித்துவிட்டு நாம் பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டியது தான்.

said...

ஈழத்திலே ஐயர், ஐயங்கார் வித்தியாசமுமில்லை.
சிவன், விஷ்ணு பேதமுமில்லை.
தமிழரிடம் சாதி பேத வெறுப்புமில்லை.
அவரவர் அவரவர் தொழிலைச் செய்து
ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததனால்
தான் முன்பு அங்கு பிச்சைக்காரர்களே
இருக்கவில்லை.
யார் கண் பட்டதோ, இப்போ இப்படி
ஓர் அவலம். ஆண்டவனே விரைவில்
தமிழீழத்தில் அமைதியை உருவாக்கு.

said...

//ம்ம்....யாரை நோவது ?//

Anonymous பதிவ படிக்கிற நம்மளத்தான்.

said...

"SK Hat gesagt…
விஷமத்தனமான ஒரு பதிவிற்கு, விவேகமான, அதே சமயம் அடக்கமான உங்கள் பதிலுக்கு இப்படியும் ஒரு அனானி பின்னுட்டமா, திரு.வெற்றி?

ம்ம்....யாரை நோவது?"

எஸ்.கே. ஐயா கூறுவதை அப்படியே வழிமொழிகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

வெற்றி!
இப்படி!! விதண்டவாதமாக கருத்துக் கூறுபவர்களைக் ஒதுக்கிவிட வேண்டும்.யாழ் பெருமாள் கோவிலை என்றுமே!!எங்கள் குடும்பத்தில் வேறு கோவிலாகப் பார்த்ததில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கு!!
பெயரிலியாக வந்து அவர் பொய் கூறுகிறார்.
யோகன் பாரிஸ்