Sunday, October 08, 2006

உலகின் அதி சிறந்த பல்கலைக்கழகங்கள் [Top Universities]

உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் அதி சிறந்தவை[top] எவையென வருடாந்தம் நடாத்தப்படும் rankings[இச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் என்ன] சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ளது.

நான் படித்த பல்கலைக்கழகம் 27 வது இடத்திலிருக்கிறது. மகிழ்ச்சியான செய்தி.

உலக பல்கலைக்கழக rankings [World University Rankings] பார்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

11 comments:

Sivabalan said...

வெற்றி

நல்ல தகவல்

பதிவுக்கு நன்றி

Chandravathanaa said...

வெற்றி
Rank என்றால் தராதரம் என நினைக்கிறனே.

Anonymous said...

தரவரிசைப்படுத்துதல் - Ranking
தரவரிசைப்பட்டியல் - ranking list

வெற்றி said...

சிவபாலன்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

சந்திரவதனா அக்கா, சிறிராம்,
வருகைக்கும் , என் வினாவிற்கு விடை தந்தமைக்கும் மிக்க நன்றிகள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
இதை இங்கு தொலைக்காட்டியில் செய்தியாகக் கூறி ; இங்குள்ள பல்கலைக்கழகங்களின் நிலையை; பேராசியர்களே! விளக்கியதைப் படமாகப் பார்த்தபோது; அதிர்ச்சியாக இருந்ததுடன் இவர்களின் மெத்தனமும் தெரிந்தது.இங்கிலாந்திலும் குறைந்ததை இவர்கள் அவமானமாகக் கருதுகிறார்கள். ஆனால் அதற்கான மாற்று இவர்கள் பல்கலைக்கழகங்களில் தெரியவில்லை. RANK என்பதை தரவரிசை எனலாம்.
தகவலுக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

மொன்ரியல் McGill University 21 இடத்தில் இருப்பதை விட்டுட்டீங்களே.

வெற்றி said...

வைசா, யோகன் அண்ணா,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.


மதி,
வணக்கம்.

/* மொன்ரியல் McGill University 21 இடத்தில் இருப்பதை விட்டுட்டீங்களே. */

விடவில்லையே! U of T நான் படித்த பல்கலைக்கழகமென்பதால் சுட்டிக்காட்டினேன். McGill ஐ விட U of T பின்னால் வந்தது கொஞ்சம் வருத்தம்தான். உங்களுக்கும் McGill க்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

Anonymous said...

இந்த தரப்படுத்தல் மிகவும் பொதுமையானது. அத்துடன் சார்புள்ளதும் வியாபாரநோக்கம் மிக்கதும்,ஆங்கில பல்கலைகளை தூக்கிப்பிடிப்பதும் என அடிக்கடி சர்ச்சைகள் நடப்பது வழமை. என்னைப்பொறுத்தவரையில் அவுஸ்திரேலியாவிலுள்ள சில பல்கலைகள் இப்பட்டியலில் இருப்பது இவர்களின் (தரப்படுத்துபவர்கள்)பின்புலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.

வெற்றி said...

அனானி,
உங்கள் சில கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு உண்டு. அவுஸ்ரேலியாவின் பல்கலைக்கழகங்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

ரவி said...

வெற்றி, இது யூசர் ஐடி பாஸ்வேர்டு கேக்குது...எப்படி பார்க்குறது ?

வெற்றி said...

ரவி,
இல்லையே! user id, pw ஒன்றும் தேவையில்லையே.
அப்படியாயின் இந்த முகவரிக்குப் போங்கள்:

http://www.topuniversities.com/worlduniversityrankings/2006/tables/top_200/