Wednesday, August 02, 2006

4 சிங்கள இரானுவமுகாம்கள் தாக்கியழிப்பு

திருகோணமலையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நான்கு சிங்கள இராணுவ முகாம்கள் தமிழ்ப்படைகளால்[தமிழீழ விடுதலைப் புலிகள்]தாக்கியழிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்மண்ணாக இருந்த திருகோணமலை இலங்கை சுதந்திரமடைந்த பின் சிங்கள அரசுகள் சிங்களக் குடியேற்றங்களை அமைத்து பல பகுதிகளைச் சிங்களமயமாக்கியுள்ளது. தமிழீழத்தின் தலைநகராக திருகோணமலையத்தான் பல ஈழத்தமிழர்கள் கருதுகிறார்கள். சிங்கள இராணுவ முகாம்கள் தாக்கியழிக்கப்பட்ட செய்திகளை அறிய [வரை படங்களுடன்] கீழ் உள்ள சுட்டிகளில் கிளிக் செய்யுங்கள்.
தமிழில் படிக்க
ஆங்கிலத்தில் படிக்க
ரொய்ட்டர் செய்தி
பி.பி.சியில் திருமலைத் தாக்குதல் பற்றி
[4வது தடவையாக புதுப்பிக்கப்பட்டது]

15 comments:

Anonymous said...

ஆப்பிழுத்த குரங்கின் நிலையில்
இப்போது அரசு.பிச்சைவேண்டாம் நாயைப்பிடி தான்.பார்ப்போம்
இனியாகிலும் திருந்துகின்றார்களா என்று.

வெற்றி said...

கரிகாலன்,
சிங்கள அரசுகள் இனியும் திருந்தும் என நான் எதிர்பார்க்கவில்லை.
1.ஏதோ கருனாவை தாங்கள் புலிகளிடமிருந்து பிரிதுவிட்டோம். 2.இனியும் புலிகளால் கிழக்கில் பலமாக இயங்கமுடியாது.
3. கருனாவின் துணையோடு புலிகளை அழிப்போம்.

இப்படித்தான் சிங்கள அரசு கதையளந்து வந்தது. இப்போது முழு உலகமுமே கருனா குழு ஒன்று ஈழத்தில் இல்லை. சிங்கள உளவுப்படைதான் அவனின் பெயரில் பல கொலைகளைச் செய்தது என்பதை அறிந்து கொள்ளும். கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி தானும் அது... என்று சொல்வார்களல்லவா? அது போலத்தான் ஏதோ இஸ்ரேல் செய்வதை தாமும் செய்து பார்ப்போம் என செயற்பட்ட சிங்கள அரசின் செயலும்.

அருண்மொழி said...

இதுதான் அந்த இறுதிப்போரா?.

தமிழீழத்தை எதிர்பார்திருக்கும் ஒரு (இந்திய) தமிழன்.

வெற்றி said...

அருண்மொழி,
வணக்கம்.

//இதுதான் அந்த இறுதிப்போரா?.//
இக் கேள்விக்கு எம் தலைவனும் அவன் வழியில் களத்தில் நிற்கும் வீரவேங்கைகளும் தான் பதில் கூற வேண்டும். ஆனாலும், இப் போரோடு ஈழம் மலர்ந்து எம்மினத்தின் வாழ்வில் சுபீட்சம் நிலவ வேண்டும் என்பதுதான் என் அவாவும்.

//தமிழீழத்தை எதிர்பார்திருக்கும் ஒரு (இந்திய) தமிழன்.//
உலகில் வாழும் தன்மானத்தமிழர்கள் அனைவரினது எதிர்பார்ப்பும் இதுதான். நீதியும், தர்மமும் எம் பக்கம். நாம் மற்றவர் நிலத்திற்காக அடிபடவில்லை. எம் மண்ணில் நாம் நிம்மதியாக வாழவே இப் போராட்டம். ஈழக் கவிஞன் புதுவை இரத்தினதுரை அவர்கள் சொன்னது போல், "குந்தியிருக்க ஒரு நிலமும் அதைச் சுற்றி ஒரு வேலியும் தான் நாம் கேட்பது."

Anonymous said...

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மூதூர் நகருக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணி இன்று புதன்கிழமை முன்னேறிள்ளது. இங்கிருருந்த இறங்குதுறை புலிகள வசம் இருக்கிறது.இத்துறையில் இருந்து திருகோணமலைத்துறைமுகம் எந்நேருமும் தாக்கப்படலாம். அது நிகழ்ந்தால் ஈழத்தின் தலைநகர் நம்ம கையில தான்......

வன்னியன் said...

அண்ணை அவசரப்படாதையுங்கோ.
உது நிலம் மீட்கிற நடவடிக்கை மாதிரித் தெரியேல.

குறிப்பிட்ட முகாம்களில இருந்துதான் ஆட்லறித்தாக்குதலை அரசபடை செய்ததும், அம்முகாம்கள் மாவிலாறு நோக்கி முன்னேற்றத்துக்கு முக்கிய தளமாக இருந்ததும் தெரிந்ததே.
இது மாவிலாறு அணைக்கட்டைப் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கைதான்.

நிலமீட்பு தொடங்கினா ஆர்ப்பாட்டமா இருக்கும்.

வன்னியன் said...

சொன்ன மாதிரி, இளந்திரையன் பேட்டி குடுத்திருக்கிறார்.
பம்பல் என்னெண்டா கடற்சண்டையையும் மாவிலாறு நடவடிக்கைக்கான வினியோகத்தை நிப்பாட்டுறது எண்டுதான் சொல்லிறார்.

வெற்றி said...

வன்னி,
//அண்ணை அவசரப்படாதையுங்கோ.
உது நிலம் மீட்கிற நடவடிக்கை மாதிரித் தெரியேல.//


என்ன செய்யிறது வன்னி, நேற்றிலை இருந்து தலை, கால் புரியாமல் மனது சந்தோசத்திலை தள்ளாடுது.

//நிலமீட்பு தொடங்கினா ஆர்ப்பாட்டமா இருக்கும்.//

உண்மை வன்னி. நிலமீட்புப் போர் தொடங்கினால், தமிழீழ வான்படையும் தன் பலத்தைக் காட்டுமோ?!

வெற்றி said...

வெப்தமிழன்,

//திருகோணமலைத்துறைமுகம் எந்நேருமும் தாக்கப்படலாம். அது நிகழ்ந்தால் ஈழத்தின் தலைநகர் நம்ம கையில தான்...... //

உண்மைதான், நினைச்சாலே சந்தோசமாய் இருக்கு. ஆனால் இதிலை ஒரு சிக்கல். திருமலைத் துறைமுகம் எங்கடை கைக்கு வாறதை பக்கத்து நாடு எவ்வளவு தூரம் தடுக்க முடியுமோ, அதையெல்லாம் செய்யும். பார்ப்போம். எல்லாரும் ஒன்று நினைக்க தலைவர் வேறு நகர்வுகளை மேற்கொள்வார்.

வெற்றி said...

திருமலைத் தாக்குதல்கள் பற்றி பி.பி.சி இணையத்தளத்தில் வந்த செய்திக்கான சுட்டி இணைக்கப்பட்டுள்ளது.

Anonymous said...

Kaddiparichan Army camp is another Elephant pass. SL Army lost a big camp. but Muttur Muslims are under control of LTTE. that is great victory.
Long live Elam

trinco tamilan

Machi said...

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. பெரிய வெற்றியை அறிவிக்க வந்த சிறு வெற்றி இது.

மலைநாடான் said...

வெற்றி!

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்

Sivabalan said...

என் இன மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாவும் வாழ நம்பிக்கை ஒளி தெரிய ஆரம்பித்துள்ளது.

வெற்றி said...

அனோமதய நண்பரே,
வணக்கம்.

//Kaddiparichan Army camp is another Elephant pass. SL Army lost a big camp.//

திருமலை பூகோள அமைப்பு பற்றி எனக்குச் சரியாகத் தெரியாது. நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் பட்சத்தில் இவ் இழப்பு சிங்கள தரப்புக்கு மிகப் பெரிய பின்னடைவு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

//Muttur Muslims are under control of LTTE. that is great victory.//
நண்பரே, தங்களின் மேலுள்ள கருத்தில் சின்னத் திருத்தம். முஸ்லிம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்கள் புலிகளோடும் தமிழ்மக்களோடும் தோளோடு தோளாக நிற்கிறார்கள். நாம் யாரையும் கட்டுப்படுத்தவில்லை. அது எமது நோக்கமும் அல்ல. முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக்களே. சிங்கள அரசுகள் பிரித்தாளூம் தந்திரங்களைக் கடைப்பிடித்தாலும் , தமிழ்-முஸ்லிம் மக்களின் ஒற்றுமையக் குலைத்துவிட முடியாது.