Thursday, July 19, 2007

புகைப்படப்பிடிப்புப் போட்டிக்காக...

"பாடறியேன். படிப்பறியேன். பள்ளிக்கூடம்தான் அறியேன்." என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு திரைப்பாடலில் சொல்லியிருந்தது போல், புகைப்படக் கருவிகள் [Camera] பற்றியோ அல்லது எப்படிப் புகைப்படம் எடுப்பது என்பது பற்றியோ அடிப்படை அறிவுகூட இல்லாதவன் நான். இருப்பினும் என் மனதில் எழும் எண்ணங்களை, பிடித்த காட்சிகளைப் படம்பிடிக்கிறேன் என்று சும்மா கண்டபாட்டுக்கு கமராவில் கிளிக் செய்வது என் பொழுதுபோக்குகளில் ஒன்று. அப்படி எடுத்த படங்களில் இரண்டு படங்கள்தான் நீங்கள் கீழே பார்ப்பவை.

படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்.
"மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ!
...
இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று
வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி"
--- கவியரசர் கண்ணதாசன்
இடம் : BON ECHO PROVINCIAL PARK, ONTARIO, CANADA.
"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என்மீது மோதுதம்மா.
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா! ஆனந்தம்! "
--- கவியரசர் கண்ணதாசன்
இடம் : BON ECHO PROVINCIAL PARK, ONTARIO, CANADA.
இந்தப் பாலத்திலிருந்துதான் முதலாவதாக இருக்கும் படத்தை எடுத்தேன்.

20 comments:

said...

அடிச்சு புடிச்சு சீட் வாங்கீட்டீங்க... முதலாவது ரொம்ப ரொம்ப அழகா இருக்கு! வாழ்த்துக்கள்

said...

ஆற்றின் படமும் பொருத்தமான வர்ணனையும் அருமை.

said...

பெயரிலேயே வெற்றி எண்டு வச்சிட்டினம், படங்களும் அந்த மாதிரி ;-)

said...

first picture is fantastic. pachai pul veli apdaiye eeriyil kalappathu pol ullathu.

said...

முதல் படம் நல்லாருக்கு என்பதற்காக நான் என்னுடைய வெற்றியை எல்லாம் உங்களுக்கு விட்டுத்தர முடியாது...

சரி பரவால்லை, இரண்டாம் பரிசு எடுத்துக்கங்க...

said...

முதல் படம் நல்லா இருக்கு வெற்றி, வெற்றி நிச்சயம்!
நீரின் மேல் பாலத்திலிருந்து எடுத்ததா?

said...

Vetri,

Excellent Photos!

Best wishes!

said...

வெற்றி
இரண்டு படங்களும் பாடல் வரிகளும் மிக அழகாக இருக்கின்றன. படத்தை பார்க்கும் போது மிக மிக அமைதியான இடத்துக்கு சென்று வந்தது போல இருக்கிறது. வாழ்த்துக்கள்.

said...

வெற்றி!

85ல் என்று நினைக்கின்றேன். யாழ் சுண்டிக்குளி மகளிர்கல்லூரி மண்டபத்தில் ஒரு புகைப்படக் கண்காட்சி நடந்தது. அதில் தமயந்தி என்பவருடைய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு படங்களுக்குக் கீழேயும், பொருத்தமான கவிவரிகள். ஏனெனில் தமயந்தி தேர்ந்த கவிஞரும் கூட. படங்களும், வகிதைகளும் போட்டியிட்டு, அற்புதமான அனுபவம் தந்தன. அதற்குப் பின் அப்படியொரு அனுபவம் உங்கள் பக்கத்தில் கிடைத்தது. பாராட்டுக்கள். நன்றி.

said...

சூப்பரா இருக்கு!

said...

வெற்றி, உங்கள் பக்கம் தான்! படங்களும், அதற்கான பாடல் வரிகளும் அருமை! வாழ்த்துக்கள்!

said...

"வெற்றி" பெற வாழ்த்துக்கள். முதல் படம் அருமை. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!!

said...

ஓசை செல்லா,

/* அடிச்சு புடிச்சு சீட் வாங்கீட்டீங்க... */

:-)) நீங்கள் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கையை 100 ஆக வைத்தாலும் பங்குபெற ஆர்வமாயிருக்கும் ஆவலர்கள் இருக்கும் போது இடம் கிடைப்பது என்பது சுலபமா என்ன?! :-))
வாய்ப்பளித்தமைக்கும், இந்த பொழுதுபோக்கு போட்டியை நடாத்துவதற்கும் உங்களுக்கும் உங்களுடன் இணைந்து செயற்படும் சர்வேசன், CVR ஆகியோருக்கும் மிக்க நன்றிகள்.

/* முதலாவது ரொம்ப ரொம்ப அழகா இருக்கு! வாழ்த்துக்கள் */

ஆகா! என்ன பாக்கியம் செய்தனன் யான்! வசிட்டரின் கையால் அல்லது மோதிரக் கையால் குத்துவாங்குவது என்பது போல் புகைப்படக் கலைஞனான உங்களின் பாராட்டுக்கள்
என்னை மகிழ்சிக் கடலில் மூழ்க வைத்துவிட்டது. மிக்க நன்றிகள்.

said...

முத்துலெட்சுமி,
மிக்க நன்றி.

கானா பிரபா,
மிக்க நன்றி.

said...

சதங்கா,
மிக்க நன்றி.

செந்தழல் ரவி,
மிக்க நன்றி.
உங்களின் படம்தான் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
உங்களின் படத்தை வெல்ல யாராலும் முடியாது. :-))

ஜீவா,
மிக்க நன்றி.
/* நீரின் மேல் பாலத்திலிருந்து எடுத்ததா? */

ஜீவா, உங்களின் யூகம் மிகவும் சரி. பாலத்திலிருந்துதான் இப்படத்தை எடுத்தேன். அப் பாலத்தையும் பதிவில் [3வது படம்] இணைத்துள்ளேன்.

said...

சிவபாலன்,
மிக்க நன்றி.

நிலாக்காலம்,

மிக்க நன்றி.

/* படத்தை பார்க்கும் போது மிக மிக அமைதியான இடத்துக்கு சென்று வந்தது போல இருக்கிறது. வாழ்த்துக்கள் */

உண்மை. இது ஒரு அமைதியான இடம்தான். நான் வசிக்கும் நகரில் இருந்து 3 மணித்தியாலங்கள் கார் பயணம். அங்கு செல்லிடப்பேசிகள் கூட இயங்காது. அங்கு வரும் மக்கள் எந்தவொரு இடையூறும் இல்லாது நிம்மதியாக இருக்க வேணும் என்பதற்காக இருக்கலாம். உண்மையில் மனதுக்கு இதம்தரும் இடம்.

அதுசரி, நீங்கள் ஏன் பதிவுகள் எழுதுவதில்லை? நேரம் கிடைக்கும் போது எழுதலாமே.

said...

மலைநாடான்,
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. பழைய நினைவுகளை அசைபோட வைத்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

துளசி அம்மா,
மிக்க நன்றி. உங்களைப் போன்ற வலையுலகப் பெரியவர்களின் பாராட்டுக்கள் மோதிரக் கையால் குத்து வாங்குவது போன்றது.

வெயிலான்,

மிக்க நன்றி.

ஜெயகாந்தன்,
மிக்க நன்றி. போட்டியில் வென்றதற்கு வாழ்த்துக்களும்.

said...

ரொம்ப அழகா இருக்கு :)

said...

தூயா,
மிக்க நன்றி.

said...

வாழ்த்துக்கள் தோழரே
மிகவும் அற்புதமான கலை. தொடர்ந்து உங்கள் முயற்சியை கை விடாது செய்யுங்கள். இந்தத் துறையை விருப்போடு மேற்கொள்வதே வெற்றியான ஒரு விடயம்தான். எமது ஸ்மூகத்தைப் பொறுத்தவரை இது ஒரு தொழிலாய் மட்டுமேதான் உள்ளது. கலை என்ற ஸ்தானத்தை எட்டுவதற்கு இன்னமும் நீண்ட தூரங்களைக் கடக்க வேண்டியுள்லது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

தோழமையுடன் தமயந்தி

http://uyirmei.jalbum.net/FaceAlbu01/slides/016.html