ரொரன்ரோவில் சென்னை உணவகங்கள்
ரொரன்ரோ நகரில் இருந்து வெளிவரும் ரொரன்ரோ ஸ்ரார் நாளேட்டில் இன்று வெளிவந்த செய்திக்கான இணைப்பை இங்கே தருகிறேன். இங்கே கிளிக் செய்யுங்கள்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
ரொரன்ரோ நகரில் இருந்து வெளிவரும் ரொரன்ரோ ஸ்ரார் நாளேட்டில் இன்று வெளிவந்த செய்திக்கான இணைப்பை இங்கே தருகிறேன். இங்கே கிளிக் செய்யுங்கள்.
எழுதியவர் வெற்றி at Thursday, July 20, 2006 0 comments
சிவபெருமான் உறையும் பதி கைலாசம் என்பர். இலங்கையில் உள்ள திருக்கோணேஸ்வரத்துக்கு தெட்சனை கைலாசம் என்ற பெயர் புராதன காலத்திலிருந்தே நிலவி வருகின்றது.போர்த்துக்கீசரால் அன்றைய பெருங் கோயில் இடிக்கப்படுவதற்கு முன் கிழக்காசியாவில் இந்துக்களின் ரோமபுரியாக இக்கோவில் விளங்கியதாக குவைரோஸ் என்ற கத்தோலிக்கத் துறவி தனது பயண நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.திருமந்திரம் அருளிய திருமூலநாயனார் இலங்கையை சிவபூமி என்று கூறுவார். புராண காலத்தை அடுத்த இதிகாச காலத்தில் நிகழ்ந்ததாக கருதப்படும் இராமாயணத்தின் வில்லனாக சித்தரிக்கப்பட்டுள்ள லங்காபுரி அரசன் இராவணன் சிறந்த சிவபக்தனாக விளங்கியவராம்.எனவே புராண இதிகாச வரலாறுகளின்படி, பெளத்தத்துக்கு முன்பே இலங்கை முழுவதிலும் சைவ சமயம் நிலவியிருக்கிறது.
இலங்கையில் புகழ்பூத்த புராதனமான ஜந்து சிவஸ்தலங்கள் இருந்ததாகப் பல நூல்களில் குறிப்பிடப்படுகின்றது. வடக்கில் நகுலேஸ்வரம்.அங்கு நகுல முனிவர் தவமிருந்து புனித நீரில் நீராடி இறைவனை வழிபட்டதால், சாபங்களிலிருந்து விடுபட்டாராம். சில தசாப்தங்களுக்கு முன்னர் அந்த ஆலயம் புனருத்தாபனஞ் செய்யப்பெற்று சிறப்பாக இயங்கி வந்தது. கீரிமலை செல்லும் பக்தர்கள் அதன் அழகையும் அருளையும் அனுபவித்தனர். சில வருடங்களாக குருக்களே அங்கிருந்து குடிபெயர்ந்துவிட்டார். அப்பிரதேசமே மக்களில்லாத சூனியப் பிரதேசமானது! நகுலேஸ்வரத்தில் நித்திய நைமித்திகப் பூஜைகள் நடைபெறுவது எக்காலமோ?
சீரும் சிறப்பும் கொண்டு விளங்கி, நாயன்மார்களினால் தேவாரம் பாடப்பெற்ற திருக்கேதீஸ்வரம், அந்நியராட்சியில் இருந்த சுவடே தெரியாமல் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை, காடாகிப் போனது. பல ஆய்வுகளை மேற்கொண்ட நல்லூர் ஆறுமுகநாவலர், இந்த இடத்தைக் கண்டுபிடித்து "சைவத்தின் தேன்பொந்து" அதுவே என ஸ்தாபித்ததுடன், வள்ளல் பசுபதிச் செட்டியாரைக் கொண்டு அரசிடமிருந்து அக்காணியை கொள்வனவு செய்து, சிறு கோவில் அமைத்த பின்னரே அங்கு விளக்கு மீண்டும் எரியத் துவங்கியது. திருக்கேதீச்சரத் திருப்பணிச் சபையின் ஓய்வொழிச்சல் இல்லா முயற்சியினால், பெருங் கோயிலாக பின்னர் அது மிளிர்ந்தது. அப்பிரதேசத்தை மீண்டும் தொடர்ந்து இருள் கவ்விக் கொண்டதால் ஒரு தசாப்த காலமாக எவராலுமே அந்தப் பக்கத்தை எட்டிப் பார்க்க முடியாமற் போனது. நாதம் எழுப்பிய கண்டா மணி அறுந்து வீழ்ந்து ஓய்ந்து போய்க் கிடக்கிறது.
பாடல் பெற்ற மற்றொரு சிவத்தலமாகிய திருக்கோணேஸ்வரத்தில் நித்திய நைமித்திக பூசைகள் நடைபெற்று வருகின்ற போதிலும், அங்கு செல்கின்ற பக்தர்கள் தொகையை விரல்விட்டு எண்ணிவிடலாம். மக்கள் இத்திருத்தலத்தில் அச்சமின்றிக் கூடி பெருமானைத் தரிசிக்கும் நிலை தோன்ற வேண்டும். மற்றொரு புராதன சிவத்தலமாகிய முன்னேஸ்வரம் தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருவது இன்றைய தலைமுறையினரின் தவமேயாகும்.
புராதன காலத்திலிருந்தே திருத்தம்பேஸ்வரம் என்னும் பெயரில் புகழ்பூத்த சிவாலயம் இலங்கையின் தெற்கில் இருந்ததாம். அது எது? இருந்த இடம் எங்கே? பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரை படித்தேன். தென்னிலங்கையில் கடற்கரையையொட்டினாற் போல உள்ள தேவிநுவர என இப்போது அழைக்கப்படும் ஊரில் கருங்கல்லினாலான சிவனுக்குரிய பெருங் கோவில் முன்னர் இருந்ததாம். தெய்வம் உவந்து உறைந்திருந்தமையால் தெய்வாந்துறையாகி, இது பின்னாளில் தேவி நுகர எனச் சிங்களத்தில் ஆகியதோ? இப்பொழுது அது விஷ்ணு வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. பக்கத்தில் பெரிய புத்தர் சிலையும் உயர்ந்து நிற்கிறது. சிவத்தலம் (இதுவே திருத்தம்பலேஸ்வரமெனில்) பின்னாளில் விஷ்ணுத்தலமாக எப்படி மாறியது? ஆய்வறிஞர் அந்தனிசில் மறைந்து போன பல உண்மைகளை அண்மைக்காலத்தில் ஆணித்தரமாக நிறுவி வருகின்றார். திருத்தம்பலேஸ்வரம் எது என்பதையிட்டு அவர் அக்கறையெடுத்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
சோழ அரசர்களும் இலங்கையை ஆண்டார்கள் என்பது வரலாறு. அதனை வெளிப்படுத்தும் வகையில், பொலன்னறுவையில் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய இரு சிவத் தலங்களைக் காணலாம். 1958 வரை இவ்வாலயங்களில் நித்திய பூஜைகள் நிகழ்ந்து வந்துள்ளன. ஒரு கற் கோவில் ஓரளவு அழிந்து விட்ட போதிலும், அருகிலுள்ள மற்றக் கோவில் அழகிய ஸ்தூபியுடன் விளங்கியது. பொலனறுவையில் தமிழர்கள் சுதந்திரமாகப் பயமின்றி வாழ்ந்த 1950 களில், பங்குனி உத்தர நன்னாளன்று ஆண்டுதோறும் ஊர் வியக்கும் வண்ணம் பெரிய உற்சவம் நடைபெறுவது வழக்கமாயிருந்தது. ஆனால், இன்று... பொய்யாய், கனவாய், பழங்கதையாய்... சோழர்களும் இங்கு ஆட்சி நடத்தினார்கள் என்ற உண்மையை வரலாற்றிலிருந்து துடைத்தெறிவதற்காகவா அவர்கள் அமைத்த இக் கோவில் பராமுகமாக புனரைமைப்புச் செய்யப்படாமல், பாழடைந்து அழியும்படி கைவிடப்பட்டிருக்கிறது?
[ஈழத்தின் பழம்பெரும் எழுத்தாளர்களில் ஒருவரான திரு.சோமகாந்தன் அவர்கள் எழுதிய 'நிகழ்வுகளும் நினைவுகளும்' எனும் புத்தகத்திலிருந்து]
எழுதியவர் வெற்றி at Sunday, July 09, 2006 32 comments
எனது ஆன்மீகக் குரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் சைவப்பழம் மட்டுமல்ல, அவர் ஓர் தமிழ்க்கடல் என்பதும் நீங்கள் எல்லோரும் அறிந்ததுதான். யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பது போல், நான் கேட்டு மகிழ்ந்த வாரியார் சுவாமிகளின் "இலக்கியத்தில் நகைச்சுவை" எனும் உரைக்கான சுட்டியை நீங்கள் அனைவரும் கேட்டு மகிழும் வண்ணம் இங்கே இணைக்கிறேன். கேட்டு இன்புற இங்கே கிளிக் செய்யுங்கள்.
மிக்க நன்றி.எழுதியவர் வெற்றி at Monday, July 03, 2006 12 comments
ஆண்டவன் அன்பர்கள் கட்டளை ஆறு. அன்பர்கள்
சுகா மற்றும் மலைநாடான் ஆகியோர் என்னை இந்த ஆறுப் பதிவுக்கு அழைத்திருந்தனர். முதலில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நண்பர் சுகா அவர்கள் என்னை அழைத்த பதிவில் SK அய்யா அவர்களையும் அழைத்திருந்தார்கள். SK அய்யா அவர்களும் சுகாவின் அழைப்பை ஏற்று கவிநயத்துடன் பதிவிட்டிருந்தார்கள். SK அய்யாவின் பதிவைப் பார்த்ததும் , பறையாமல்[பேசாமல் என்பதற்கு இணையான யாழ்ப்பாணச் சொல்] நண்பர் சுகாவிடம் எனக்கு விடுத்த அழைப்பைத் திருப்பிப் பெறுமாறு கேட்டுக்கொண்டால் என்ன என ஓர் எண்ணம் உதித்தது. காரணம், SK அய்யா அவர்களின் தமிழ் போல் என்னால் எழுத முடியுமா? அவரின் தமிழறிவுக்கு முன் நான் nothing. நான் இப்படிக் குழம்பியிருந்த நேரத்தில்
நாகை சிவா அவர்களின் பதிவு கண்ணில்பட்டது. சரி, அவரின் ஆறுப் பதிவு போல பதிவு போடலாம் என தீர்மானித்தேன். எப்படி எழுதுவதென்பதை முடிவெடுத்த பின் எதை எழுதுவது, எதை விடுவது என்பதில் குழப்பம். எனினும் ஆறுப்பதிவின் விதியை மீறக்கூடாதென்பதற்காக, பிடித்த பல விடயங்களைக் குறிப்பிட முடியவில்லை என்பதையும் இங்கே நினைவு கூர விரும்புகிறேன்.
எழுதியவர் வெற்றி at Saturday, July 01, 2006 39 comments
Our scientific power has outrun our spiritual power. We have guided missiles and misguided men.-Martin Luther King Jr., Strength to Love, 1963